Tuesday, May 02, 2006

மின்னம்பல தளம் ஒன்றின் ஐந்தாண்டு வரலாறு (1999-2004)

இணையத்தில்
தமிழ்ப் புத்தக விற்பனை
மின்னம்பல தளம் ஒன்றின்
ஐந்தாண்டு வரலாறு (1999-2004)


ந. சசிரேகா
மேலாளர், காந்தளகம் - சென்னை

தமிழ்நூல்.காம் - 5 ஆண்டுகள்
1. பின்னணி:
கணிப்பொறி ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குச் செய்திகளைப் பரிமாறும் முயற்சியில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவியலாளர் முதன் முதலாக வெற்றிபெற்றனர்.
அன்று தொடங்கிய பணி விரிந்து வளர்ந்தது. உலகளாவிய அளவில் கணிப் பொறிகளிடையே செய்திகளைப் பரிமாறும் வகையில் இணைக்கும் வலைப் பின்னல் எழுந்தது. வளர்ச்சிக்கு வாய்ப்பான வகையிலேயே அவ்வலைப் பின்னல் இணையமாகியுள்ளது.
மனித சமூகத்திற்குக் கிடைத்துள்ள மாபெரும் கொடையே இணையம். தகவல் பரிமாற்றத்திற்கும் விரைந்த தொடர்பிற்கும் சிறந்த தளமேடையே இணையம்.
உலகின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, மற்றொரு மூலையில் கிடைக்கும் தகவல்களைப் பெறலாம்; நிகழும் நிகழ்ச்சிகளை அறியலாம்; உற்பத்தியாகும் பொருள்களை வாங் கலாம்; இணையத்தின் இத்தகைய வலிமைகளை இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
பன்முக ஆற்றல்வாய்ந்த இணையம், தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பயன் தரவேண்டும் என எண்ணினோம்; முயற்சியில் ஈடுபட்டோம்; விளைவு தமிழ்நூல்.காம் (tamilnool.com) இணையதளம்.
25 ஆண்டுகளாகத் தமிழ்ப் புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனையில் காந் தளகம் ஈடுபட்டு வருகிறது; தமிழ் நூல்.காம் மூலம் 1998ஆம் ஆண்டு மார்கழி நடுப்பகுதியில் இணையத் துள் காந்தளகம் தன் காலடியைப் பதித்தது.
2. நோக்கம்:
ஏறத்தாழ 5,000 புதிய தமிழ்த் தலைப்புகளை உலகெங்கும் உள்ள 2,000க்கும் அதிகமான தமிழ்ப் பதிப்பாளர்கள் ஓராண்டில் வெளியிடு கின்றனர். அத்துடன் ஏறத்தாழ 1,500 தமிழ்த் தலைப்புகள் ஒவ்வோர் ஆண்டும் மறுபதிப்பாகின்றன. ஏறத் தாழ 36,000 தமிழ்த் தலைப்புகள் எப்பொழுதும் விற்பனைக்காகப் பதிப்பாளரிடம் இருக்கும்.
விற்பனைக்குள்ள தமிழ் நூல்கள் அனைத்தும், ஒரே கூரையின் கீழ், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் களுக்குக் கிடைக்க வேண்டும் என் பதே தமிழ்நூல்.காம்இன் தலையாய நோக்கம்.
பதிப்பாளரின் விற்பனைப் பட்டியல் களைத் திரட்டினோம். விற்பனைக் குள்ள 12,000 தலைப்புகளைத் தரவுத் தளத்துள் அமைத்தோம். 1999 பொங்கல் நாளன்று இணையதளத்தில் இவற்றை உலவ விட்டோம்.
ஐந்து ஆண்டுகளின் பின், இப்பொ ழுது, 36,000க்கும் அதிகமான தலைப் புகளை, 82 பாடவகைகளாகப் பட்டிய லிட்டுத் தளத்தில் அமைத்துள்ளோம். இணையத்துள் உலாவி, இத்தனை எண்ணிக்கையுள்ள தலைப்புகளைத் தேடித் தெரிந்து வாங்கக் கூடிய, மிகப் பெரிய தமிழ்நூல் அங்காடி தமிழ் நூல்.காம் ஒன்றுதான். இத்துடன் நின்றுவிடவில்லை, வளர்ந்து வருகி றோம்.
3. வரலாறு - இயக்கம்
36,000 தலைப்புகளைத் திரட்டுவது எளிதான பணியல்ல. உலகெங்கும் உள்ள 2,000க்கும் அதிகமான தமிழ்ப் பதிப்பாளர்களின் முகவரிகளைத் திரட்டினோம். அவர்களுக்கு எமது பணியை விளக்கிக் கடிதம் எழுதி னோம். அவர்களின் விலைப்பட்டி யல்களைப் பெற்றோம்.
தலைப்பு வாரியாக, பாடவகை வாரி யாக, ஆசிரியர் வாரியாக, பதிப்பாளர் வாரியாக, பதிப்பு ஆண்டு வாரியாக, அகரவரிசையாக்கக் கூடிய மென் பொருளைத் தேடி வாங்கினோம்.
புத்தகத்தின் பெயர், ஆசிரியர், பக்கங் கள், பதிப்பு ஆண்டு, விலை, பதிப்பா ளர் பெயர், முகவரி, பாட வகை ஆகிய தரவுகளைக் கணிப் பொறியுள் இட் டோம். இதற்காக ஈராண்டுகள் கடுமை யாக உழைத்தோம்.
தலைப்புகளைப் பாடவகையாக, அதற்குள் ஆசிரியர் வாரியாக, அகர வரிசையாக்கி இணையத்தில் வெளி யிட்டோம்.
வாரந்தோறும், நாள்தோறும் வெளி யாகும் புதிய தமிழ்ப் புத்தகங்களின் விவரங்களை தமிழ்நூல்.காம் தரவுத் தளத்தில் சேர்த்தோம்; அடிக்கடி அதைப் புதுப்பித்து வந்தோம். தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம். தமிழகத்திலும் புதுவையிலும் வெளி யாகும் நூல்களுடன், உலகெங்கிலும் வெளியாகும் தமிழ் நூல்களின் விவ ரங்களையும் இத்தளத்தில் சேர்த்து வருகிறோம்.
3.1 பாடவகைத் தேடல்:
முதலில் 40 பாடவகைகளாகத் தலைப் புகளைப் வகுத்திருந்தோம். திருக் குறள் தொடர்பான நூல்கள் இலக் கியப் பிரிவுள் வந்தன. காலப் போக்கில் திருக்குறள் தொடர்பான தலைப்புகளே ஐநூறு வரை சேர்ந்தன. வாடிக்கையாளர்களின் வசதியைக் கருதித் திருக்குறளைத் தனிப் பாடவகையாக்கினோம். பாடவகைப் பட்டியல் இவ்வாறு நீண்டது; யாப்பு, சங்ககாலம், இந்து, இஸ்லாம், கிறித் தவம், சைவம், வைணவம் என விரிந்து, 82 பாடவகைகளானது.
திருக்குறள் தொடர்பான நூல்களைத் தேட விரும்பும் வாடிக்கையாளர், பாடவகைத் தேடல் பகுதியில் உள்ள 82 பாடவகைகளின் பட்டியலில், திருக்குறளைத் தெரிவு செய்து, தேடுக என்னும் குமிழைச் சொடுக் கினால், திருக்குறள் தொடர்பான ஐநூறு வரையான தலைப்புகளின் பட்டியல் வரும்.
அவ்வாறே இந்த 82 பாடவகை களிலும் உள்ள தலைப்புகளின் பட்டியலைத் தனித்தனியாகத் தேடிப் பெறலாம்.
3.2 தட்டச்சுத் தேடல்:
ஆசிரியர் வாரியாகவோ, தலைப்பு வாரியாகவோ நூல்களைத் தேட வாசகர் விரும்புவர்; எனவே இந்த வசதியையும் ஏற்படுத்த எண்ணி னோம். தட்டச்சுத் தேடல் என்ற புதிய பிரிவை அமைத்தோம். தமிழ்த் தட்டச்சு விசைப் பலகை திரையில் தெரியுமாறு வடிவமைத்தோம். இவ் விசைப் பலகையைப் பயன்படுத்தி, எந்த ஒரு நூலின் தலைப்பையோ, எந்த ஒரு ஆசிரியரின் பெயரையோ தமிழிலேயே தட்டச்சுச் செய்து தேடலாம். இவ்விசைப்பலகையை இயக்க உதவும் உதவிப் பெட்டியும் அத்திரையிலேயே தெரியும்.
ஒரு சொல்லையோ, அச்சொல்லின் எழுத்துகள் சிலவற்றையோ, தட்டச்சுச் செய்து, தலைப்பு எனும் குமிழைச் சொடுக்கினால், நூலின் தலைப்பில் எங்கெல்லாம் (பகுதி, இடைநிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல் லின் எழுத்துகள் சில வருகின் றனவோ, அந்தந்த நூல்களின் தலைப் புகள் திரையில் வரும்.
அதே போல, ஆசிரியரின் பெய ரையோ அல்லது பெயரின் எழுத் துகள் சிலவற்றையோ தட்டச்சுச் செய்து, ஆசிரியர் எனும் குமிழைச் சொடுக்கினால், நூலாசிரியரின் பெயரில் எங்கெல்லாம் (பகுதி, இடைநிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல்லின் எழுத்துகள் சில வருகின்றனவோ, அந்தந்த ஆசிரியர் பெயர்கள் திரையில் வரும்.
அதே போல, பாடவகையின் பெய ரையோ அல்லது பெயரின் எழுத்து கள் சிலவற்றையோ தட்டச்சுச் செய்து, பாடவகை எனும் குமிழைச் சொடுக்கி னால், பாடவகையின் பெயரில் எங்கெல்லாம் (பகுதி, இடை நிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல் லின் எழுத்துகள் சில வருகின்ற னவோ, அந்தந்தப் பாடவகைகள் திரையில் வரும்.
ஒரு சொல்லையோ, அச்சொல்லின் எழுத்துகள் சிலவற்றையோ, தட்டச்சுச் செய்து, தேடுக எனும் குமிழைச் சொடுக்கினால், தலைப்பு, ஆசிரியர், பாடவகை ஆகிய மூன்று நீள்பத்தி களிலும் எங்கெல்லாம் (பகுதி, இடை நிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல்லின் எழுத்துகள் சில வருகின்றனவோ, அந்தந்த நூல்களின் தலைப்புகள் திரையில் வரும்.
3.3 ஆசிரியர்-பாடவகை எளிய தேடல்
மிக விரிவான தேடல் வசதியைத் தமிழ்நூல்.காம் இணைய தளத்தில் வழங்கியுள்ளோம். எடுத்துக் காட் டாக, பாடவகைத் தேடல் மூலம் ஒரு பாடவகையின் தலைப்புகளைத் தேடிச் சொடுக்கினால், திரையில் அப் பாடவகைப் பட்டியல் தெரிகிறது. அப்பட்டியலில்,இடம்பெறும் ஆசி ரியர்களுள் எவராவது ஒருவர் எழுதிய அனைத்துத் தலைப்புகளை யும் அறிய விரும்புவோர், அவ்வா சிரியரின் பெயரைச் சொடுக்க வேண்டும். உடனே அந்த ஆசிரியர் எழுதிய நூல்களின் பட்டியல் திரை யில் தெரிகின்றது.
திரையில் தெரிகின்ற பட்டியலில் பல்வேறு பாடவகைகள் தெரிகின்றன. அவற்றுள் ஒரு பாடவகையின் தலைப்புகளை அறிய விரும்புவோர், அப்பாடவகையை அங்கிருந்தே சொடுக்க, அப்பாடவகைக்கான பட்டியல் திரையில் தெரிகிறது.
3.4 கூடைக்குள் சேர்க்கும் வசதி:
தேடலின் விளைவாக, வாடிக்கை யாளர் தமக்குத் தேவையான தலைப் புகளைத் தெரிவு செய்கிறார். அவ் வாறு தேடித் தெரிந்த தலைப்புகளின் பட்டியலை எளிதில் உருவாக்க, கூடைக்குள் சேர்க்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளோம்.
வாடிக்கையாளர் தமக்குத் தேவை யான தலைப்புகளை ஒவ்வொன்றா கக் கூடைக்குள் சேர்த்துக் கொள்ளலாம். தேடிக்கொண்டிருக் கையிலோ, தேடித் தெரிவு செய்து முடிந்ததுமோ, கூடையைச் சரி பார்க்க எனும் குமிழைச் சொடுக்கிக் கூடைக்குள் செல்லலாம். வேண்டா தன நீக்கலாம்; படிகளின் எண்ணிக் கையைக் குறைக்கலாம், அதிகரிக் கலாம்.
திருத்தங்கள் முடிந்ததும், தொடர்ந் தும் தேடலாம், தலைப்புகளைத் தெரிவு செய்யலாம், கூடைக்குள் சேர்க்கலாம். புத்தகத் தேவைகள் இப்போதைக்கு நிறைவானது என்ற தும், கூடையைச் சரி பார்க்க எனும் குமிழைச் சொடுக்கிக் கூடைக்குள் சென்று, வலியுறுத்துக என்னும் குமி ழைச் சொடுக்கி உறுதி செய்யலாம்.
தெரிவு செய்த தலைப்புகளும், அவற் றின் விலைகளின் கூட்டுத் தொகை யும் திரையில் தெரியும். பட்டியலை மின்னஞ்சல் இணைப்பாக எமக்கு அனுப்பலாம்.
அப்பட்டியலில் உள்ள நூல்கள் இருப்பில் உளவா? அதே விலையில் கிடைக்கின்றனவா? என்பதை உசாவித் தெளிவோம். இருப்பில் உள்ள தலைப்புகளுக்கு உரிய விலைகளின் கூட்டுத் தொகையை யும், வானூர்தி வழியாகவோ, கடல் வழியாகவோ, அஞ்சலாகவோ, பொதியாகவோ அனுப்பும் செலவை யும் சேர்த்து வாடிக்கையாளருக்குத் தெரிவிப்போம். வாடிக்கையாளரிட மிருந்து பணத்தைப் பெற்றதும், அவ ரது ஆணைக்கமைய உரிய முகவரிக்கு நூல்களை அனுப்புவோம்; அவர் நூல்களைப் பெற்றுக்கொண்டதைக் காலப்போக்கில் உறுதி செய்து கொள்வோம்.
3.5 கடன் அட்டை வசதி வழங்குவதிலுள்ள சிக்கல்:
கடன் அட்டை மூலம் பணம் செலுத் தும் வசதியை வாடிக்கையாளர் விரும்புகின்றனர். சிறப்பாக, வெளி நாடுகளில் உள்ளோர் பலர் அத்தகைய பழக்கங்களைக் கொண்டவராதலின் கடன் அட்டை மூலம் வாங்கும் வசதி இல்லையெனில் சோர்வடைகின்றனர்.
எனினும், பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்ட சில வெளிநாட்ட வர், கடன் அட்டை மூலம் பணம் செலுத்த விரும்பவில்லை எனச் சொல்வதுமுண்டு.
கடன் அட்டை வசதியை அறிமுகம் செய்ய முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், விற்பனைக்குரிய புத்தகங்களின் இருப்புத் தொடர்பான நடைமுறைச் சிக்கலே.
36,000க்கும் அதிகமான தமிழ்த் தலைப்புகளின் நாளாந்த இருப்பு நிலையைக் கண்காணிப்பது நடை முறையில் சாத்தியமில்லை. பதிப்பக விலைப் பட்டியல்களின் அடிப்படை யில், தலைப்புகளின் இருப்பையோ விலையையோ சொல்லிவிட இய லாது.
விலைப்பட்டியலில் உள்ள ஒரு தலைப்பு, விற்றுத் தீர்ந்திருக்கலாம், அத்தலைப்பின் விலை உயர்ந்திருக் கலாம். இருப்பிலும் விலையிலும் உள்ள மாற்றங்களைப் தமிழ்ப் பதிப் பகங்கள் உடனுக்குடன் வெளியிடு வது மிகக் மிகக் குறைவு.
இதனால் ஒவ்வொரு ஆணைப்பட் டியலில் உள்ள தலைப்புகளின் இருப் பையும் விலையையும் உசாவி, கூறு விலையை வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டியதே மெய்நிலை.
உசாவிய பின், கூறுவிலையை அனுப் புகிறோம்; பணம் வந்து சேர்கிறது; புத்தகங்களை வாங்கப் பதிப்பகங் களுக்குப் போகிறோம்; சில தலைப் புகள் இருப்பில் இல்லை அல்லது அவற்றின் விலையை அதிகரித்து விட்டோம் எனப் பதிப்பாளர் கூறும் நிலை தவிர்க்க முடியாதது.
தவிர்க்க முடியாத இந்த இருப்பு/விலைச் சூழ்நிலை ஏற்பட்டால், கடன் அட்டை மூலம் முற்பணமாகக் கூறு விலையைப் பெற்றிருந்தால், வாடிக் கையாளருக்கு என்ன பதில் சொல்ல முடியும்? பணம் பெற்ற பின், அவர் கேட்ட நூல் இல்லை என்று சொல்வது முறையா? வாடிக்கையாளரிடம் நம்ப கத்தன்மை போய்விடுமே!
புகழ் பெற்ற, இருப்பில் எப்பொழு தும் இருக்கின்ற, ஒருசில தலைப்பு களை மட்டும் தமிழ்நூல்.காம்இல் தொகுத்திருந்தால் கடன் அட்டை வசதியை அமைத்திருக்கலாம். ஆனால் நாமோ 1,500க்கும் அதிக மான பதிப்பகங்கள் வெளியிட்ட, 36,000க்கும் அதிக எண்ணிக்கை யிலான தமிழ்த் தலைப்புகளைத் தொகுத்து, 82க்கும் அதிகமான பாட வகைகளாக வகுத்து, வாசகருக்குப் பரந்த தேடல் வசதியை ஏற்படுத்தி, முழுமையான தமிழ்ப் புத்தகக் கடை யை வாடிக்கையாளரின் வீட்டுக்குள் அமைத்திருக்கிறோமே!
தமிழ்ப் பதிப்புத் தொழில் உலகம் வளர்ந்து, இருப்பு நிலையையும், விலை மாற்றங்களை அவ்வப்பொ ழுது அறிவிக்கும் காலம் வருமா? தமிழ்ப் பதிப்புத் தொழில் உலகத்துக்கு மட்டும் உரிய சிக்கல் இஃதன்று. அனைத்து மொழிப் புத்தக வணிகத் துக்கும் பொதுவான இச்சிக்கலுக்குத் தீர்வு வேண்டும்.
இச்சிக்கல்களைக் கடந்து, கடன் அட்டை வசதியை அமைக்கும் வாய்ப் புகளை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இதற்கு விடை காண்போம்.
3.6 தமிழ்க் குறுந்தட்டுகள் - தமிழியல் நூல்கள்
தமிழில் வெளியாகியுள்ள குறுந்தட்டு களின் பட்டியலும் தமிழியல் (தமிழ் சார்ந்த ஆங்கில - tamilology) நூல் களின் பட்டியலும் தமிழ்நூல்.காம் இல் உள்ளன.
3.7 பதிப்புத் தொழில் உலகம்
தமிழகத்தின் பதிப்புத் தொழில் வளர்ச்சியை நோக்கிய திங்களிதழ், பதிப்புத் தொழில் உலகம். தமிழ் நூல்களின் மதிப்புரைகள் இதில் இடம்பெறுகின்றன. திங்கள் தோறும் வெளியாகும் இவ்விதழின் எணினி வடிவம் தமிழ்நூல்.காம்இல் உள்ளது.
3.8 தமிழ் அச்சுமுகம்
தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தமிழ் மொழியை இணைப்பதே தமிழரின் வளர்ச்சிக்கு வழி. அவ் வளர்ச்சியின் விளைவே தமிழ்நூல்.காம்.
தமிழ் நூல் தலைப்புகளை, உரோம வரிவடிவத்திற்கு ஒலிபெயர்த்துக் கணிப்பொறியுள் இடுவது ஒரு வழி; தமிழ் வரிவடிவத்திலேயே உள்ளிடுவது மற்ற வழி. தமிழருக்குத் தமிழிலேயே தகவல்களைக் கொடுக்க வேண்டு மெனக் கருதித் தளத்தின் உள்ளடக் கத்தை தமிழ் வரிவடிவங்களில் அமைத்தோம்.
கணிப்பொறியின் பொதுத் தளம் உரோம வரிவடிவம். தமிழ் வரிவடி வங்கள் அனைத்துக் கணிப்பொறிக ளிலும் கிடைக்காத காலச் சூழ்நிலை. அதுமட்டுமன்றி, தமிழ் அச்சுமுகங் கள் பல இருப்பினும் அவை ஒன்றுக் கொன்று பொருத்தமின்றி உருவாகி யுள்ளன.
தமிழ்த் தலைப்புகளைத் தரவுத்தளத் தில் தொகுக்கவும் அகரவரிசையாக்க வும் நாம் பயன்படுத்திய SHREE803 என்ற தமிழ் அச்சுமுகம் வாடிக்கை யாளரின் கணிப்பொறியில் இருந் தால், தமிழ்நூல்.காம் தளத்தைத் திரை யில் அவர் பார்த்து வாசிக்க முடியும்.
எனவே SHREE803 அச்சுமுகத்தை தனது கணிப்பொறியிலுள்ள அச்சு முகங்களின் தொகுப்புடன் வாடிக்கை யாளர் இணைக்க வேண்டும்.
இதற்கு, Download Tamil Font என்ற குமிழைச் சொடுக்கி வாடிக்கையாள ரின் கணிப்பொறியிலுள்ள அச்சுமுகத் தொகுப்புக்குள் SHREE803 அச்சு முகத்தை இறக்க வேண்டும்.
அச்சுமுகத்தை இறக்காமலேயே திரையில் தமிழ் வரிவடிவங்களைப் பார்க்கக் கூடிய இயங்கு அச்சுமுக (Dynamic Font) வசதி தமிழுக்கு வந்த பின்பும், தமிழ்நூல்.காம்இல் தட்டச் சுத் தேடல் வசதிக்காக, வாடிக்கையா ளரின் கணிப்பொறிக்குள் SHREE803 அச்சுமுகத்தை இறக்கவேண்டியுள்ளது.
4. பாராட்டுகள்
பதிப்பாளர், வாசகர், ஊடகத்தார் தொடர்ந்து எமது முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.
4.1 வாடிக்கையாளர் பாராட்டு
உலகெங்கும், 40க்கும் அதிகமான நாடுகளிலுள்ள எமது வாடிக்கையா ளர் தமிழ்நூல்.காம் வழியாகத் தமிழ் நூல்களை வாங்கி எம்மை ஊக்குவிக் கின்றனர். இவர்கள் வழங்கும் ஆலோ சனைகளும் தொடர்ச்சியான ஆதர வுமே தமிழ்நூல்.காம்இன் வெற்றிக் கும் வளர்ச்சிக்கும் வழி வகுத்து வரு கின்றன.
தமிழ் மீது மாறாத காதல் கொண்டு, தமிழைக் கற்க உதவும் நூல்களையும் அகராதிகளையும் வாங்கும் எமது இனிய யப்பானிய வாடிக்கையாளர் திரு. ஹராய் கியோடாகா, அவற்றைத் தனது நண்பர்களுக்கும் பரிசளித்து வருவதை இங்கு நினைவுகூருகிறோம்.
எமது மின்னம்பல தளத்தையும் எமது சேவையையும் பாராட்டி வாடிக்கை யாளர்கள் அனுப்பிய மின்னஞ்சல் களில் சில வருமாறு:
Subject: More details please
From: madhu@xtra.co.nz
Date: 11.09.99
Hi !!!
Your web site is great. I am interested in Tamil Dramas especially small ones and comedy..Is there any book available? If so could you please let me know the name ? What is the minimum amount of order we could place and how? How much will be the postel & package charges? How to send the money ? I live in New Zealand. I hope you will let me know the details .
With regards
Tulsi Gopal
Subject: appreciation
From: tgkg@hotmail.com
Date:11.09.99
its really a wonderful effort.
govt can sponsor this site.
tgkg@hotmail.com
gocha
Subject: Hi
From: Nambibala@aol.com
Date: 07.11.99
Hi There,
I browsed thro your website, it’s really a nice and great effort; really appreciatable job. Thanks for bringing the Tamil world more connected.
Nambi.
Subject: Re: Problem Encountered.- Thank you!
From: karthi@javanet.com
Date: 08.11.99
Hi,
I am very gald that you responded to my mail immediately. Today I tried saving your attachment and it worked. I was very much impressed with the site. It's excellent. Do continue your service. It's really useful for Thamizh lovers like me around the world. I appreciate your service to Thamizh Thaai. What am I suppose to do to get a book from your site ? How do I pay ? What is the mode of currency ? What do I do to get the book that is not present in your List ?
Regds,
Shanbagam.
Subject: Very good effort.
From: mani@netcore.co.in
Date: 8.11.99
Sir,
I read about your site in a Tamil magazine and browsed today. I really got amazed. It is going to be killer application for the future. Keep up the good work.
K R Mani

Subject: Enquiry on purchase of books from abroad
From: kumaran123@hotmail.com
Date: 12.11.99
Dear Sir,
I visited your web site www.tamilnool.com; really it's a wonderful web site. I want to know whether people like me, who are all staying in abroad, can order for the books or not? I am presently staying in Amsterdam, can you deliver books to my place. If so, please let me know about the cost and payment modes.
Thanks,
Kumaran
Subject: Great stuff
From: arams@hotmail.com
Date: 18.11.99
Hello,
I have just visited your site and found it very interesting. I would like to congratulate each one behind this new idea. I am sure you would be continuously working to improve this site further. I would like to give few comments that might help, though I am sure you would have taken care of these already.
Thanks and regards,
Ramaswamy
Subject: A very good site
From: nagas_baan@chequemail.com
Date: 20.11.99
Hello Sir.,
Just now visited your site. It is a very good one. A neatly organised shelf of Tamil books paarppathu pol oru feeling. This is a great service you are doing to the Tamil people - especially the Tamilians outside Tamil Nadu. Many thanks for that. I need the following book -’Oru Kathavum Konjcham KaLLip paalum’ written by Thamarai.

4.2 ஊடகங்களின் பாராட்டு
இணையத்தில் ஆங்கிலப் புத்தகங் களை விற்கும் பெரிய தளமான அமே சன்.காம் (amazon.com) தளத்திற்கு ஈடாகத் தமிழ்ப் புத்தகங்களை விற் கும் சிறந்த தளம் தமிழ்நூல்.காம் என்று குமுதம் வார இதழ் 1999இல் எம்மை அடையாளம் காட்டியது.
ஜெயா தொலைக்காட்சியில் தமிழ் நூல்.காம் இணைய தளத்தின் பல் வேறு கூறுகளை 2000ஆம் ஆண்டில் விளக்கிக் காட்டினர்.
2002ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்நூல்.காம்இன் செயல்முறை களை விளக்கி உரையாற்றினோம்.
5. தட்டுவோர்-திறப்போர்
இத்தளம் இருப்பதைத் தெரிந்து தளத்தின் முகப்புப் பக்கத்தை மட்டும் பார்த்து, பின்னர் உள்ளே புகலாம் என உலவச் செல்வோரே தளத்தைத் தட்டுவோர்.
6. பார்வையிடும் பக்கங்கள்
தட்டித் திறந்தோர் 94 பக்கங்களைப் பார்க்க முடியும். இவற்றுள் எந்தப் பக்கத்தை அதிகமாகப் பார்க்கின்றனர் என்ற விவரம் வருமாறு.
தமிழியல் (Tamilology) பக்கங்களையே வெளிநாட்டினர் அதிகமாகப் பார்க் கின்றனர். தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு தொடர்பான நூல்களை அன்னியச் சூழலில் ஆங்கில, பிரெஞ்சு மொழிகள் வழியாகக் கற்க, இந்நூல்கள் உதவுகின்றன. அன்னியச் சூழலில் பிறந்து வளரும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பண்பாட் டையும் கலாசாரத்தையும் தெரிவிக்க விழையும் தமிழரின் தவிப்பையே இது காட்டுகிறது.
7. விற்பனை
ஒரு வணிகத் தளத்தின் வெற்றிக்கு விற்பனையே அளவுகோல். ஐந்து ஆண்டுகளில் இத்தளத்தின் விற்பனை அளவுகளை வரைடமாகக் காட்டியுள் ளோம்.
8. இனி...
தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்த தமிழ்ப் புத்தகச் சந்தைப்படுத்தல், நீண்ட நெடும் பயணம். இப்பயணத் தைத் தமிழ்நூல்.காம் சிறப்புறத் துவக் கியுள்ளது. நோக்கம் பெரிது; பாதை நெடிது; முயற்சி கடிது. தொழில்நுட்ப, சமூக வளர்ச்சிக்கேற்ப எச்சூழலிலும் அறிவு வெளிச்சத்தை உலகெங்கும் பரவச் செய்யும் தெளிவான நோக்கத் தைக் கொண்டுள்ளோம்.
தமிழ் நூல்களுடன் துவங்கி, தமிழி யல் நூல்களை அறிமுகப்படுத்தி, தமிழ்க் குறுந்தட்டுகளைச் சந்தைப் படுத்தி, தமிழ்ப் பதிப்புத் தொழிலின் பரப்பைச் செய்தியாக்கி, தொழில் நுட்பத்தின் அடுத்த பயனைத் தமிழு டன் இணைத்து உலகிற்கு வழங்க ஆவலுடன் உள்ளோம்.
நடைமுறைச் சிக்கல்களுக்கு விடை கண்டு தமிழ்நூல்.காம்ஐ வலுப்படுத் தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
n உலாவுனரின் கணிப்பொறிக் குள் தமிழ் அச்சுமுகத்தை இறக்கா மலே தமிழ்த் தளப் பக்கங்களைப் பார்க்க, தமிழில் தட்டச்சுச் செய்துத் தேட, சீர்க்குறித் (Unicode) தொழில் நுட்பம் அறிமுகமாகியுள்ளது. இத் தொழில்நுட்பத்தைத் தமிழ்நூல்.காம் தளத்துடன் இணைக்கும் காலம் வரும்.
n இணையப் பூக்கள் (Web Blogs) மலர்ந்து வருகின்றன. இப்பூக்களு டன் இணைந்து தமிழ்நூல்.காம் மணக்கும்.
n கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதியை வழங்க முயற் சிக்கிறோம்.
n பல்வேறு பதிப்பாளரிடம் உள்ள தமிழ் நூல்களின் இருப்பு நிலையை யும் விலை அளவையைும் தெளி வாக்கி எமது பணியை விரிவாக்கு வோம்.
n தலைப்புகளை மட்டும் தராமல் நூல்களின் ஓரளவு உள்ளடக்கத்தை யும் தமிழ்நூல்.காம் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு நூலுக்கும் கொடுக் கக் கூடிய வாய்ப்பு எதிர்காலத்தில் வரும்.
n தமிழ் நூல்களின் வாசகர் பரப்பை விரிக்கும் நோக்குடன், மின் புத்தகங்களைத் தமிழ்நூல்.காம் தளத் துள் வெளியிடும் வாய்ப்பு வரும். அவ்வாறு வெளிவரும் புத்தகங்க ளின் ஒரு சில பக்கங்களையோ, நூல் முழுவதையுமோ வாடிக்கையாளர் ஒருவர் தன் கணினிக்குள் இறக்கலாம், அச்சுப் படியாக்கலாம்.
n கணிப்பொறி உள்ள அனைவ ரும் தமிழ் நூல்களைத் தேட, வாங்க தமிழ்நூல்.காம்க்கு வர ஏதுவாக விளம்பர வியூகம் வகுப்போம்.
இதுவும் பிறவுமான சிக்கல்கள் தீரும்; தமிழ் நூல் விற்பனை பெருகும்; தமிழ்நூல்.காம் வளரும். ஒளிமய மான எதிர்காலம் எம் உள்ளத்தில் தெரிகிறது.
9. நன்றி
தமிழ்நூல்.காம் மின்னம்பல தளத்தை அமைக்கக் கருதியவர், காந்தளகம் நிறுவனர், மறவன்புலவு க. சச்சிதானந் தன். தொடக்கப் பணிகளை அவரே நேரில் கவனித்தார். தகவல்களைத் திரட்டி, தொழில்நுட்ப உள்ளீடு களைத் தேடித் தொகுத்து, வல்லுநரை அடையாளம் கண்டு, மின்னம் பலத்தை வெள்ளோட்டம் விட்டார்.
விசயதீபன், வெங்கடேசர் இருவரும் மென்பொருள் தளத்தைத் தேவைக் கேற்ப மேம்படுத்தினர். முகப்பு வடி வமைப்பில் மணிமாறனும், தகவல் தள மேம்பாட்டில் பானுரேகாவும் தேவைக்கேற்ப உதவி வந்தனர்.
வாடிக்கையாளரின் புத்தகத் தேவை களைப் பதிப்பாளரிடம் பெற்று, பாது காப்பான பொதிகளாக்கி, வாடிக்கை யாளருக்கு அனுப்பி, இத்தளத்தின் வளர்ச்சிக்காகத் தொடக்கமுதல் இன்று வரை, தளராது அயராது உழைப்பவர் ஆ. சசிகுமார்.
நாம் கேட்கும் நூல்களை உடனுக் குடன் தந்து பதிப்பாளர் உதவினர்.
யாவருக்கும் ஆதரவாக உள்ளுரமாக இருந்தவர் வாடிக்கையாளரே.

0 Comments:

Post a Comment

<< Home