Friday, November 03, 2006

பொன்னம்பலத்திலிருந்து மின்னம்பலத்திற்கு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
அடிமை மோகிகள்:
உலகிலுள்ள அனைத்து மக்களும், தமிழின் அருமை பெருமைகளைத் ெதரிந்து ெகாள்ள வேண்டும் எனத் தமிழர் விரும்புவது வியப்பல்ல. ஆனாலும் தமிழருக்குள்ளேயுள்ள அடிமை மோகிகள், தமிழை வைத்துக் ெகாண்டு எைதயும் செய்ய முடியாது எனக் கருதுகிறார்கள்.
காலத்துக்குக் காலம் தமிழரிைடயே வாழ்ந்த அடிைம மோகிகள், பாளி மொழியைப் பெரிதனக் கருதினர், பிராகிருதத்ைதப் பெரிெதனக் கருதினர், வடமொழியைப் பெரிெதனக் கருதினர், இப்பொழுேதா அவர்கள் ஆங்கிலத்ைதப் பெரிெதனக் கருதுகின்றனர்.
போராளிகள்:
தமிழ்நாட்டுக்குள்ளே வந்து ஆதிக்கம் செலுத்த முயன்றவர் பலர். தமிழர்களிைடயே உள்ள அடிமை மோகிகளுக்கு அவர்கள் உற்சாகமூட்டினர். அத்தைகயோரை மீறி, போரளிகளாகி, விடுதலை வேட்ைகயுடன் தமிழை மீட்ெடடுத்துக் காலத்துக்குக் காலம் பணி புரிந்த தமிழாகரர் பலர்.
சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் தமிழ் அைடந்த பெரு வளர்ச்சி, அடுத்த 300 ஆண்டுகளில் மண்ேணாடு மண்ணாகும் நிலை வந்த போது, அந்த நிலையை மாற்றத் தம்மை ஈந்த பலருள் முதன்மைப் போரளிகள் இருவர். திருஞானசம்பந்தர் முதலாமவர், திருநாவுக்கரசர் இரண்டாமவர்.
தமிழ் கூறும் நல்லுலகு ெதன் திசையில் உள்ளது. ெதன்திசையில் வாழ்கின்ற தமிழரின் பெருமையும், தமிழ் மொழியின் பெருமையும் அனைத்துத் திசைகளுக்கும் பரவ வேண்டும்.
உலகம் விரைந்து வளர்ச்சி அைடயத் தமிழர் பங்களிக்க வேண்டும். தமிழ் மொழி வழக்கில் அயல் மொழிகளின் துறைகள் அனைத்தாலும் விரவி நிறைய வேன்டும். துறைெதாறும் துறை ெதாறும் தமிழ் மொழி பயில வேண்டும். இசையில், நடனத்தில், அறிவியலில், ெதாழினுட்பத்தில், கலைகளில், நீதியில், ஆட்சியில், ஆவணத்தில், அரசியலில் அங்கிங்ெகனாதபடி எங்கும் எதிலும் எல்லா இடத்திலும் தமிழ் நிலைபெறவேண்டும்.
அடுத்த நிலையாக, உலக வளர்ச்சிக்காகத் தமிழ் மொழி பயன்பட வேண்டும். மற்ற மொழிகளால் ஆக்க முடியாததைதத் தமிழால் ஆக்க முடியும். அசைவற்றது செந்தமிழ் வழக்கு. அந்த வழக்கு அயல் வழக்குகளின் துறைகளை வெல்லும், மேதினி முழுவதும் தமிழ் பரவும், என்கிறார் சேக்கிழார்.
திருஞானசம்பந்தர் ேதான்றியேத தமிழை உலக மொழியாக்கத்தான் எனச் சேக்கிழார் கூறுகிறார்.
திசையனைத்தின் பெருமையெலாம்
ெதன்றிசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும்
மேதினியே தனிவெல்ல
அசைவில்செழுந் தமிழ்வழக்ேக
அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும்
இடங்ெகாள்ளும் நிலைபெருக. (தி.12 பு.28 பா.24)
மறைந்தைத மீட்டமை:
ஆனாலும் தமிழகம் வந்த பிற மொழியாளரோ, மூவர் ேதவாரங்களை முடக்கினர். பொன்னம்பலம் ஆகிய தில்லையிலே, சிதம்பரத்திலே, ஆடல்வல்லான் ேகாயிலின் அறை ஒன்றில் திருமுறைகளைப் பூட்டி வைத்தனர்.
செல்லரித்திருந்தன. சிதிலமைடந்திருந்தன, பொல்லாத பூச்சிகளின் வேட்ைடயில் சிதறியிருந்தன, ஏடுகளாகக் ேகட்பாரற்றுக் குவிந்திருந்தன. அவை தமிழின் சொற் களஞ்சியங்கள், தமிழரின் வரலாற்றுக் களஞ்சியங்கள், தமிழை உலக மொழியாக்க முயன்றோரின் முன்னெடுப்புகள். துறைெதாறும் துறைெதாறும் தமிழ் பயன்பெறும் எனக் கூறிய போராளிகளின் பொன்மொழிகள்.
திருஞானசம்பந்தருக்கு 350 ஆண்டுகளின் பின், அருள்மொழித்ேதவனின் ஆட்சியில் பொன்னம்பலத்து அறையுள், பூட்டிய சிறையுள், கறையான் அரித்தவாறிருந்த திருமுறைகள் வெளியே மீண்டன. தமிழுக்குப் பொற்காலத்ைத மீட்டளித்தவன் அருள்மொழித்ேதவனாகிய இராசராசன்.
திருமுறைக் களஞ்சியத்ைத அருள்மொழித்ேதவன் வெளிக்ெகாணர, திருநாரையூர் நம்பியாண்டார் நம்பியை அழைத்தான். பொன்னம்பலத்தில் புைதந்திருந்த பொற்குவியலை நம்பியாண்டார் நம்பி எடுத்தார்.
செல்லரித்த ஏடுகள் மேலும் சிைதயாதிருக்க உயர்ந்த ெதாழினுட்பத்ைதப் பயன்படுத்தினார். குடம் குடமாக எள் எண்ெணயை ஏடுகள் மீது சொரிய, அவை மடியாது, உைடயாது, உருக் குலையாது ேதர்ந்து வெளிவந்தன.
ஏடுகளை ஒவ்வொன்றாக நம்பியாண்டார் நம்பி எடுத்தார். எண்ெணயைத் துைடத்தார். ஒழுங்கு மாறாது வரிசையிட்டார். பக்க எண் இடுவதுபோல் ெதாடர் வரிசைக்குள் அடக்கினார். ஒவ்வொரு ஓலையாக, ஏடாக எடுத்தார். அந்த ஏட்டில் உள்ள வரிகளைப் படித்தார், படியெடுத்தார்.
8,000த்துக்கும் கூடுதல் எண்ணிக்ைகயிலான பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும் 20க்கும் குறையாத செந்தமிழ்ச் சொற்கள். 247 தமிழ் வரிவடிவங்கள் மட்டுமே அங்கிருந்தன. பின் வந்த கிரந்த வரி வடிவங்கள் இருக்கவில்லை. ெதால்காப்பியர் கூறிச் சென்ற யாப்பமைதியில் அவை யாக்கப் பெற்றிருந்தன. அைவ தமிழ் மாலைகள். தமிழை உலக மொழியாக்கும் சொற்ேகாவைகள்.
பதிப்பாசிரியர்:
தமிழ் முன்னோர் அள்ளித் தந்த இசை நுணுக்கத் திறன் பொலிந்த பண்ணினாம் கூறுகளைக் ேகாடிட்டுக் காட்டிய முன்னோர் பலருள் இளங்ேகா ஒருவர். அவரையடுத்து, அத்தைகய முன்னோடிப் பணியில் ஈடுபட்ட பலருள் இருவர், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் துைணவியார் மதங்கசூளாமணியும் ஆவர். திருஞானசம்பந்தப் பெருமானுடன் இைணந்து இவர்களிருவரும் பண்களைத் ெதரிந்து இசையமைத்தனர்.
நம்பியாண்டார் நம்பிக்கு மொழியியலில் புலமை, இலக்கியங்களில் ேதாய்ந்த அறிவு, பண்பாட்டில் ஊறித் திளைத்த இயல்பு, நுண்கலைகளான இசை, நடனம், நாடகம் ஆகியனவற்றில் ஈடுபாடு; யாவிலும் புலத்துறை முற்றிப் பழுத்ததாால் வந்த ஞானம் துைண நிற்க, ஏடுகளில் எழுதியனவற்றைத் ெதரிந்தார், ெதளிந்தார், ெதாகுத்தார், திருமுறைகளாகப் பண்ணமைதியில் வகுத்தார்.
ெதால்காப்பியர் கால அதங்ேகாட்டாசான் வழியில், பனம்பாரனார் வழியில், சங்க கால எட்டுத் ெதாைகயையும் பத்துப் பாட்ைடயும் ெதாகுத்ேதார் வழியில், சங்க மருவிய காலக் காப்பியங்களை வரிசைப் படுத்தியோர் நடந்த பாைதயில், நம்பியாண்டார் நம்பியும் மிகச் சிறந்த பதிப்பாசிரியரானார்.
உலெகங்கும் தமிழ்:
அருள்மொழித்ேதவன் திருமுறைகளை ஒவ்வொகு ேகாயிலிலும் பாராயணம் செய்வித்தான். ஓதுவார்களைப் பணியமர்த்தினான். உலெகங்கும் தமிழை எடுத்துச் சென்றான்.
பொன்னம்பலத்தில் மறைந்து இருந்தைவ, பொலிந்து தமிழாகப் பூரித்துப் புறப்பட்டன, தமிழம்பலத்துக்கு வந்தன. தமிழ் கூறும் நல்லுலெகங்கும் பரந்தன. அருள்மொழித்ேதவன் தமிழை உலக மொழியாக்கினான்.
இராசராசன் காலத்திலும் அவன் மகன் இராசேந்திரன் காலத்திலும் தமிழரின் வாழ்வியல் துறைகள், அயல் வழக்குகளின் துறைகளை வென்றன. வடக்ேக இமயம் வரை விரிந்தன. மிதிலையை, கங்ைகக் கரைநாடுகளை, கலிங்கத்ைத, வங்கத்ைத, காந்தாரத்ைத, கூர்ச்சரத்ைத, ெகாங்கணத்ைத, தக்காணத்ைத, கார்நாட்ைட, சாதவாகனத்ைதச் சென்றைடந்தன.
மேற்ேக சேர நாடு வழியாகத் தமிழின் புகழும் பெருமையும் ஐரோப்பாவை அைடந்ததனாலன்றோ, நறுமணப் பொருள்களான கடுகு, மிளகு, கறுவா, ஏலம் ேதடிக் கடல்வழி வந்த ஐரோப்பிய வணிகர்களுடன், என் கல்லறையில் இங்ேக தமிழ் மாணவன் உறங்குகிறான் என எழுதுங்கள் எனத் திருமுறைகளில் உருகித் தன் மொழியிலும் திருவாசகத்ைத எடுத்துரைத்த ஜி. யு. போப்பய்யர் தமிழைத் ேதடித் தமிழகம் வந்தார்.
கிழக்ேக தாய்லாந்தில் இன்றும் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை பாடுவதும், ஆண்டு ேதாறும் நைடபெறும் ஊஞ்சல் விழாவில் ேதவாரம் பாடுவதும், அயல் வழக்ைகத் தமிழ் வென்றதாலன்றோ! மேலும் கிழக்ேக சில ஆயிரம் கிமீ. சென்று வியத்நாமில் காரைக்காலம்மையாருக்குக் ேகாயில் எழுப்பிய வழமை வந்ததும் தமிழாகரரின் பொற்குவைகள் பொன்னம்பலத்திலிலருந்து புறப்பட்டதாலன்றோ! கடாரத்திலும் சாவகத்திலும் சம்பா நாட்டிலும் திருமுறை கண்ட சோழன் விட்டுச் சென்ற செந்தமிழ்ப் பண்பாட்டுச் சொச்சங்கள் இன்றும் மலிந்துளவே!
கடந்த நூற்றாண்டில், ஆங்கிலேயரின் அடிமை ஆட்சியில், கூலிகளாக, வணிகர்களாக, கிழக்ேக பசிபிக் கடலில், அனைத்துலக நாள் மாறும் ேகாட்டருகுத் தீவுக் கூட்டமான பிஜித் தீவுகள் ெதாடக்கம், மேற்ேக அத்திலாந்திக் கடலில் ெகாலம்பஸ் கண்டுபிடித்தாகத் தம்பட்டமடிக்கும் கரிபியன் தீவுக் கூட்டம் வரை, நாடுகள் பலவற்றில் தமிழர் குடியேறினர்.
பொன்னம்பலத்திலிருந்து புறப்பட்ட திருமுறைகளும் அவர்களோடு சென்றன. பேச்சு ெமாழியாகத் தமிழைக் ெகாண்டிராேதாரும் அந்த நாடுகளில் திருமுறைகளை ஓதி வருகின்றனரே! பண்ணிசைப் பாடசாலைகளை வார இறுதிகளில் நடத்தித் தம் பிள்ளைகளுக்குத் திருமுறைகளைப் புகட்டுகின்றனரே!
உலெகங்கும் தமிழர்:
பிஜியில், மொரிசியசில், இறியூனியனில், ெதன் ஆபிரிக்காவில், சீசெல்சில், சுரினாமில், மலேசியாவில், சிங்கப்பூரில், மியான்மாரில், அந்தமானில், இலங்ைகயின் மலையகத்தில், அசைவில் செழுந்தமிழ் வழக்ேக அயல் வழக்கின் துறை வெல்ல இசை •ழுதும் மெய்யறிவும் இடங்ெகாள்ளும் நிலை உள்ளேத!
விற்ெகாடியும் புலிக்ெகாடியும் மீன்ெகாடியும் இமயக் ேகாட்டில் வடித்து வாைக சூடிய சங்கத் தமிழ் மன்னர்களைப் பின்பற்றி, திருக்ேகதாரப் பதிகம் முழுவைதத் தமிழிலேயும், தமிழ்ப் பாசுரங்களைத் தமிழில் ஒலித்து வடவரும் படிக்குமாற்றான் ேதவநாகரி வரிவடிவத்திலும் இமயக் ேகாட்டில், திருக்ேகதாரத்தில் கல்வெட்டாக வடித்து வைத்த திருப்பனந்தாள் காசி மடத்தினருக்கு, பொன்னம்பலத்திலிருந்து அன்று புறப்பட்டு, திசையனைத்தின் பெருமையெலாம் ெதன்றிசையே வென்றேற வழிகாட்டியதனாலன்றோ!
புத்தராயச் சில புனை துகில் அணியும் ஈனர், எத்தர் என எடுத்துத் தந்த திருஞானசம்பந்தர் கூற்றைப் பொன்னம்பலத்துப் பூட்டிய அறைக்குள் புகுந்ெதடுத்ேதாமே! அவ்வாக்கிற்கமைய இன்றும் வாழும் சிங்கள, புத்தப் பேரினவாத வல்லாண்மையின், ெகாடும் பற்களிலிருந்து விடுபடத் தஞ்சமைடந்து 40 நாடுகளில் வாழும் ஈழத் தமிழரின், இக்காலத் தமிழ்ப் பண்பாட்டு முன்னெடுப்பு, உலகம் தழுவிய மொழியாகத் தமிழை மாற்றி வருகிறது.
வாரஇறுதித் தமிழ்ப் பள்ளிகள், ேதாராய எண்ணிக்ைகயாக, யேர்மனியில் 300, சுவிடசர்லாந்தில் 30, பிரான்சில் 100, பிரித்தானியாவில் 100, கனடாவில் 250, ஆஸ்திரேலியாவில் 50 நியுசிலாந்தில் 15 எனப் பரந்து கிடக்கின்றன.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர், தாம் வாழும் நாடுகளில் இக்காலத்தில் கட்டிய, கட்டி வருகின்ற சைவ, வைணவக் ேகாயில்களின் எண்ணிக்ைக, இராசராச சோழப் பைடயெடுப்புக் காலங்களில் அயல் நாடுகளில் கட்டிய ேகாயில்களின் எண்ணிக்ைகயை விட அதிகமாகும்.
திருவாரூர்த் ேதரோட்ட அழைக விஞ்சும் ேதரோட்டங்களும் காவடி ஆட்ட ஊர்வலங்களும், இலண்டனிலும் பாரிசிலும் ேகாலாலம்பூரிலும், சிங்கப்பூரிலும், இலவுற்றோக்கவிலும், உலூயித் துறையிலும், இடர்பனிலும், சீசெல்சிலும் இன்னோரன்ன உலக ஊர்கள் பலவிலும் உள்ள முதன்மைச் சாலைகள் வழியாக ஆண்டு ேதாறும் நைடபெற்று வருகின்றன. தமிழர் மட்டுமல்ல, அயல் வழக்கு மக்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து பங்குபெற்று அருள் பெறுமாறமைந்துள்ளனவே! அந்நாடுகளில் வாழும் தமிழரும் தமிழல்லாேதாரும் ேகாயில்கள் ெதாறும் நித்தலும் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்ேதத்திப் புகழ்ந்து பாடும் காட்சி கண்ெகாள்ளாக் காட்சியாகும்.
பண்பாட்டுத் ெதாட்டில்:
பன்னிரு திருமுறைகள்தாம் இந்தத் தமிழ்ப் பண்பாட்டுப் பரவலின் ெதாட்டில். பன்னிரு திருமுறைகளைச் சமய நூல்கள் என்றும் புராண நூல்கள் என்றும் ஒதுக்குவோர் பகுத்தறிவாளரல்லர்.
தமிழ்மொழி உலக மொழியாதல் வேண்டும் எனக் கூறும் நூல், சமய நூலாகுமா? அன்று, தமிழ்ப் பண்பாட்டுப் பேழையும் அஃேத. தமிழ்த் ேதசிய உணர்வை ஊட்டும் நூலும் அஃேத.
உலெகங்கும் பரந்து வாழும் தமிழருக்குப் பண்பாட்டு அச்சாணியாகப் பன்னிரு திருமுறைகள் திகழ்கின்றன. மோதும் அலைகளுக்கு நடுவே, அசைவில் செழுந்தமிழ் வழக்கினராக்கும் நங்கூரமாகவும் பன்னிரு திருமுறைகள் திகழ்கின்றன.
திருமுறைகளுக்கு உரை எழுதலாமா? என்ற வினா நீண்ட காலமாகவே சைவ அன்பர்களிைடயே இருந்து வந்தது. மூலமும் அஃேத, உரையும் அஃேத என்ற பாங்கினரே அத்தைகயோர். திருக்ேகாவையாருக்குப் பேராசிரியர் உரையும் பழைய உரையும் இருந்தன. பழமைபேணும் ஆறுமுகநாவலரும் பெரிய புராணத்ைத உரை நைடயில் தந்தார், சூசனம் எழுதினார், ஆனால் உரை எழுதவில்லை. சிவக்கவிமணி சி. ேக. சுப்பிரமணிய முதலியார் 1937இல் பெரிய புராணத்துக்கு உரை எழுதத் ெதாடங்கினார்.
தருமை ஆதீனப் பதிப்பு:
தருமை ஆதீனம், கயிலைக்குருமணி, 25ஆவது குருமகாசந்நிதானம் அந்த வினாவுக்கு விைட கண்டார். திருமுறைகளுக்கு உரை எழுத வேண்டும், அவை எழுதப் படிக்கத் ெதரிந்த அனைத்து மக்களுக்கும் புரியுமாறு சென்றைடயவேண்டும் எனக் கருதினார், உரையாசிரியரிகளைத் ேதர்ந்தார். உரையெழுதுவித்தார். 1953இல் முதலாம் திருமுறை உரையுடன் வெளிவந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசராசன் பொன்னம்பலத்தில் நம்பியாண்டார் நம்பிகளிடம் ஒப்பைடத்த பணியை ஒத்த பணியைத் தருமை ஆதீனம் இக்காலத்தில் செய்துள்ளது. முதல் ஒன்பது திருமுறைகளுக்கும் உரை எழுதுவித்துப் பதிப்பித்த பணி, 25ஆவது குருமகா சந்நிதானம் காலத்தில் நிறைவுற்றது. பத்தாம் திருமுறை ெதாடக்கம் பன்னிரண்டாவது திருமுறை வரையான திருமுறைகளுக்கு உரை எழுதுவித்துப் பதிப்பித்த பணி, 26ஆவது குருமகாசந்நிதானம் காலத்தில் நிறைவுற்றது.
பன்னிரண்டு திருமுறைகளையும் 16 பகுதிகள் ெகாண்ட ஒரே ெதாகுதியாகத் தயாரிக்கும் தருமை ஆதீனப் பணி 1996 ைதப்பூச நாளில் ெதாடங்கியது. அந்தப் பணியைச் செவ்வனே செய்து தருமாறு எனக்கு ஆைண தந்தனர்.
12 திருமுறைகளிலும் 1,256 பதிகங்களோ பகுதிகளோ புராணங்களோ உள்ளன. 18,280 பாடல்கள் உள்ளன. அச்சிட்ட 16 பகுதிகளும் 18,231 பக்கங்களில், ஒரு மீற்றர் நீளமான ெதாகுப்பாக அமையும். மொத்த எைட 20 கிலோ கிராம் ஆகும். தருமை ஆதீனத்தில் அடக்க விலைக்ேக இதனை விற்கிறார்கள்.
உலெகங்கும் பரந்து வாழும் ஐந்து ேகாடி எண்ணிக்ைகயிலான (ேதாராயமாக) சைவ சமயத்தவர்களுக்கு இந்தத் ெதாகுப்புத் தமிழ் நூலாகவும் சைவ சமய நூலாகும் அமையும். ஏழு ேகாடி எண்ணிக்ைகயிலான (ேதாராயமாக) தமிழருக்கு இந்தத் ெதாகுதி பண்பாட்டுப் பேழையாகும்.
கிறித்தவப் பாதிரியாரான, அன்றைய போப்பய்யர் போலவே, இன்றைய செகத் காஸ்ப்பரய்யரும் திருவாசகத்தால் ஈர்க்கப்பெற்றவர். மேற்கத்ைதய இசையில் திருவாசகத்ைத அவர் அமைக்க விழைந்தது சைவ சமய ஈடுபாட்டினால் அல்ல, தமிழ்ப் பண்பாட்டு ஈர்ப்பினாலாகும். தருமை ஆதீனமும் செகத் காஸ்ப்பரய்யருக்கு இத்திட்டத்துக்கு ஓரளவு நிதிப் பங்களிப்புச் செய்தது. இவ்வாறு பன்னிரு திருமுறைகள் சமய எல்லைகளைத் தாண்டித் தமிழருக்கு வாழ்வியல் வழிகாட்டிகளாக உள்ளன.
மின்னம்பலத்தில்:
அச்சிட்ட புத்தகங்கள் மின் புத்தகங்களாகிக் கணினி வைத்திருப்போருக்கு இைணயத்தின் மூலம் எளிதாகக் கிைடக்கின்றன. மின் புத்தகங்களுக்கும் அச்சிட்ட புத்தகங்களுக்கும் இயற்பியல் கூறுதான் வேறுபாடு.
அச்சிட்ட புத்தக்தைதப் பார்க்க முடியும், ெதாட முடியும், வேண்டுமானால் தாள்களை முகரலாம், நாவாலும் சுவைக்கலாம். மின் புத்தகம் அப்படியல்ல.
காண முடியாதது, ேகட்க முடியாதது, ெதாட்டுணர முடியாதது. முகர முடியாதது. நாவால் சுவைக்க முடியாதது. ஐம்புலன்களுக்கும் எட்டாதது. இத்தைகய இயற்பியல் தன்மைக்கு மின்னம்பலம் எனப் பெயர் சூட்டியவர், தனிநாயக அடிகள் மரபில் வந்த கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன். ஈழத்தவரான இவர் ேநார்வே நாட்டில் தஞ்மாகி உள்ளார்.
பூமிப் பந்தின் எந்த இடத்திலிருந்தாலும் ெதாலைபேசி இைணப்பு இருக்குமாயின், உரிய இைணய இைணப்பு இருக்குமாயின் மின்னம்பலத்துள் செல்லலாம், உலாவலாம்.
தகவல் ெதாழினுட்பக் காலத்தில் வாழ்கிறோம். தகவல்களே தரவுகளாகி வளர்ச்சிக்கு அடிப்பைடயாகின்றன. எனவே, ஒவ்வொரு வீட்டிலும் கணினி இருப்பதும், இைைணய இைணப்பு இருப்பதும் இயல்பு வாழ்வுக்குரியதாயுள்ளது. மடிக் கணினிகள் வந்துள்ளன. ைகக் கணினிகள் வந்துள்ளன. இவை இைணய இைணப்புடன் கிைடக்கின்றன.
மின் புத்தகங்கள் மின்னம்பலத்தில் கிைடக்கின்றன. சில புத்தகங்கள் இலவயமாகவே கிைடக்கின்றன. சிவற்றைப் பணம் ெகாடுத்து வாங்கவேண்டும். கடன் அட்ைடயைப் படன் படுத்தி, வாங்கிய மின் புத்தக்தைதத் தம் கணினியில் இறக்கிச் சேமித்து வைக்கும் ஒருவர், ேதவையான போது கணினித் திரையில் படிக்கலாம், அல்லது அச்சானில் படி எடுத்துப் படிக்கலாம். புலமைச் சொத்துரிமைச் சட்டங்களுக்கு அமைய உறுதி ெகாடுத்ேத அச்சானில் படி எடுக்கும் உரிமையைப் பெறுகிறார்.
60 கிராம் அல்லது 100 கிராம் அல்லது 500 கிராம் வரை எைடயுள்ள சாதாரணமான புத்தகங்களை வாங்குவோர், 20 கிலோ கிராம் எைடயுள்ள பன்னிரு திருமுறைப் புத்தகத் ெதாகுதியை வாங்குவதும் ஒரு மீற்றர் நீளத்துக்குத் தட்டில் அடுக்கி வைப்பதும் சராசரியாக ஒன்றரை கிலோ கிராம் எைடயுள்ள ஒரு பகுதியை எடுத்துப் புரட்டிப் படிப்பதும் இப்பொழுதுள்ள வழமைகள்.
வானதி பதிப்பகம், வர்த்தமானன் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் பன்னிரு திருமுறைகளை உரையோடு வெளியிட்டிருக்கிறார்கள். திருப்பனந்தாள் காசி மடத்தில் உரையின்றி வெளியிட்டிருக்கிறார்கள். அண்மையில் சதுரா பதிப்பகத்தாரும் ஒரு ெதாகுதியை வெளியிட்டுள்ளார்கள். ெதாகுதியாகவும் இவை கிைடக்கின்றன. சில பதிப்பாளரிடம் தனித்தனிப் பகுதியாகவும் கிைடக்கின்றன.
இந்தியாவுக்கு வெளியே வாழும் தமிழருக்குத் தருமை ஆதீனப் பதிப்புத் ெதாகுதியையோ, பிற பதிப்பாளரின் ெதாகுதியையோ வாங்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் எல்லோருக்கும் இவற்றை வைத்திருக்க இட வசதி கிைடப்பதில்லை.
கணினியோ, கணினி இருந்தும் இைணய இைணப்போ வைத்திருக்காதவர்கள், பன்னிரு திருமுறைத் ெதாகுதி முழுவைதயும் உரையோடு படிக்க விரும்பி, அைதத் தம்முடன் வைத்திருக்க விழைந்தால், அதுவும் தருமை ஆதீனப் பதிப்பை வைத்திருக்க விரும்பினால், 20 கிலோ கிராம் எைடயுள்ள ெதாகுதியை வாங்கி, ஒரு மீற்றர் நீளமுள்ள தட்டில் வைத்திருப்பைதத் தவிர வேறு வழியில்லை. தனித்தனியாகப் பகுதிகளைத் தருமை ஆதீனம் விற்பனை செய்வதில்லை.
மின் புத்தகமாக:
கணினியும் இைணய இைணப்பும் வைத்திருக்கும் தமிழரின் ெதாைக, சிறப்பாகத் தமிழகப் பெரு நகரங்களில் கூடுதலாகி வருகிறது. தமிழகத்துக்கு வெளியே பிற மாநிலங்களில் வாழும் தமிழரும், இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் வெளியே பிற நாடுகளில் வாழும் தமிழரும் தத்தம் வீடுகளில் கணிப்பொறியையும் இைணய இைணப்பையும் வைத்திருக்குமளவு வசதி பைடத்த இல்லங்களின் எண்ணிக்ைக ேதாராயமாக 50% எனலாம்.
கணினியும் இைணய இைணப்பும் வைத்திருக்கும் தமிழர், தமிழில் ேதடிக் ெகாண்டிருக்கிறார்கள். கணினியில் தமிழ் பயன்பாட்டு மொழியாக வேகமாக மாறி வருவதற்கு ஒருங்குறி எழுத்துரு உள்ளீடும் ஒரு காரணமாகும். உலகளாவிய ஒருங்குறி, அனைத்துக் கணினிகளிலும் தமிழைத் திரையில் வேண்டுவாருக்குத் ெதரியுமாறு அமைந்துள்ளது.
செய்தி இதழ், மின் இதழ், மின் புத்தகம், வலைப் பூ, ஆய்வுக் குழு, தமிழ்ச் சங்கம் என மின்னம்பலத்தில் உலாவுவோருக்குத் தமிழில் ஒருங்குறி வழங்கும் ேதர்வுகள் ஏராளம். தமிழில் சொல் ஒன்றை ஒருங்குறியில் தட்டச்சுச் செய்து வலை முழுவதும் ேதடும் வசதியை கூகிள், யாகூ போன்ற ேதடல் எந்திரத் தளங்கள் செய்துள. ஒருங்குறி வருமுன் இந்த வசதி இருக்கவில்லை.
எனவே ஒருங்குறி எழுத்துருவாகப் பன்னிரு திருமுறையை எணினியாக்க விரும்பினோம். மின் புத்தகமாகக்கி மின்னம்பலத்தில் உலாவவிட விரும்பினோம். தமிழர் எவருக்கும் பார்க்கும் வாய்ப்பை நல்க விழைந்ேதாம். தருமை ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம் அவர்களின் பார்வைக்கு இத்திட்டத்ைத அனுப்பினோம்.
இராசராசனின் கண்ேணாட்டமுைடயவரே குருமகா சந்நிதானம். பன்னிரு திருமுறை அனைவரையும் சென்றைடயவேண்டும் என விரும்பினார். எணினிக்கு மாற்றி, மின்னம்பலத்தில் ஏற்றி, இைணய தளத்தில் உலவவிட ஆைணயிட்டார்.
http://www.thevaaram.org என்ற பெயரில் இைணய தளத்ைதப் பதிவு செய்ேதாம். கணிப்பொறி வல்லுநர்களின் சேவையைப் பெற்றோம். எவ்வாறு அச்சுப் பதிப்பு வெளிவந்ததேதா, அந்தப் பனுவல்கள் யாவும் தளத்திலும் உள்ளடக்க முடிவு செய்ேதாம்.
படிப்படியாகப் பனுவல்களைத் தளத்தில் ஏற்றினோம்.
பாடலை, பதிகத்ைத, ேகாயிலைத் ேதடலாம்:
உலாவுநர் ஒருவர் ஒரு பாடலைத் ேதட விரும்புகிறார். அந்தப் பாடலின் முதற்குறிப்புச் சொல்லைத் தட்டச்சுச் செய்தால் அந்தப் பாடலும் உரையும் திரையில் ெதரியும். அவர் விரும்பினால், அந்தப் பாடலையும் உரையையும் வெட்டித் தன் கணிப்பொறிக்குள் ஒட்டிச் சேமிக்கலாம்.
தட்டச்சுச் செய்வது எப்படி? தமிழ்த் தட்டச்சு முறை ெதரியாதவர் பலர். தமிழ்த் தட்டச்சுப் பலைகக்கான குறிகள் விசைப் பலைகயில் ெகாண்டிராதவர் பலர். இவர்களை உளத்திருத்தினோம். திரையிலேயே விசைப் பலைக ேதான்றச் செய்ேதாம். அதில் தமிழக அரசு அறிவித்த தமிழ்99 விசைப் பலைகக் கட்டமைப்பு இருக்குமாறு அமைத்ேதாம்.
ஒவ்வொரு எழுத்தாகச் சொடுக்கினால், திரையில், பனுவல் கட்டத்துள், சொடுக்கும் வரிசையில் எழுத்துகள் ெதரியும். தவறாகச் சொடுக்கியிருப்பின் திருத்தலாம், மாற்றலாம், சேர்க்கலாம்.
மூன்று வைகயான ேதடல்கள். 1. பாட்டு முதற் சொல்லை வைத்துப் பாடலைத் ேதடல். 2. பதிக முதற் குறிப்புச் சொல்லை வைத்துப் பதிகத்ைதத் ேதடல். 3. ேகாயில் முதற் குறிப்புச் சொல்லை வைத்துக் ேகாயில் வரலாறு ேதடல்.
முழுச் சொல்லையும் தட்டச்சுச் செய்ய வேண்டியதில்லை. முதலில் வரும் இரண்டு அல்லது மூன்று எழுத்துகளைத் தட்டச்சுச் செய்தால், அந்த எழுத்துக்கூட்டலில் ெதாடங்கும் 1. பாடல்களின் வரிசையோ, 2. பதிகங்களின் வரிசையோ, 3. ேகாயில்களின் வரிசையோ, ேதடலுக்கு ஏற்றவாறு, தனித் திரையில் வரிசையாக வந்து நிற்கும். ேதடிய எழுத்துக்கூட்டல் தனி நிறத்தில் ெதரியும்.
எந்தப் பாடல் / பதிகம் / ேகாயில் ேதவையோ அைதச் சொடுக்கினால், ேதடியது கண்முன் திரையில் ெதரிகிறது.
இன்னும் வேறு ேதடல் வசதிகளும் உண்டு. ஏதாவது ஒரு சொல் அல்லது சொற்றொடரைத் தட்டச்சுச் செய்து, தளத்துள் உள்ள பகுதிகளில் அந்தச் சொல் அல்லது ெதாடர் எங்ெகல்லாம் வருகிறது எனத் ேதட, கூகிள் ேதடல் எந்திரம் உதவும் நுட்பத்ைதயும் உள்ளடக்கினோம். அேத சொல்லையோ ெதாடரையோ வலை முழுவதும் ேதட, கூகிள் ேதடல் எந்திரம் உதவும் நுடபத்ைதயும் உள்ளடக்கினோம்.
எந்த நாட்டில் இருந்தாலும் எந்த ஊரில் இருந்தாலும், எந்த இைணய தள மையத்தில் இருந்தாலும், எந்த அலுவலகத்தில் இருந்தாலும், எந்த வீட்டில் இருந்தாலும், பூமிப் பந்தின் எந்த மூலையில் இருந்தாலும், 24 மணி ேநரமும் அழைக்கக் கூடிய தளமே http://www.thevaaram.org
தட்டுநர், திறக்குநர், நாடுகள்:
கார்த்திைக 2005இல் தளத்ைத இயக்கத் ெதாடங்கினோம். கட்டுமானப் பணி நடந்து ெகாண்டிருந்தது. ஆனாலும் தளத்ைதப் பார்க்க உலாவுநர் வந்துெகாண்டிருந்தனர். பன்னிரு திருமுறையைப் படிக்க உலகத் தமிழர் ஆர்வமுடன் உள்ளனர்.
மின்னம்பலத்தில் ஒரு தளத்தின் செயற்பாடுகளைப் பகுத்தறியும் வசதி உண்டு. இந்தத் தளத்ைதப் பகுத்தறிய விரும்புவோர் தட்டித் திறக்கவேண்டிய தள முகவரி, ஆகும்.
கடந்த 10 மாதங்களில், பன்னிரு திருமுறைத் தளத்ைதத் தட்டியோர், திறந்ேதார் ெதாைக 24,923. தளத்திறப்பு மென்பொருள் யாவிலும் திறப்பாளர் எந்த நாட்டவர் என்ற குறிப்பு வரும். ஆனாலும் தள நுழை மென்பொருளாளர் சிலர் அைதச் சரியாக அமைப்பதில்லை. இதனால், இந்த 24,923 பேரில், 15,777 பேர் எந்த நாட்டவர் என்பைதத் தளப் பகுப்பியால் கணிக்க முடிவதில்லை.
ஆனாலும், 21 நாடுகளில் 9,146 பேர் இந்தப் பத்து மாதங்களில் இந்தத் தளத்ைதத் தட்டித் திறந்ததாக, தளப் பகுப்பி சொல்கிறது. அவ்வாறு தட்டியோர், திறந்ேதார் ெதாைக, அந்நாடுகளின் அகர வரிசையில் பின்வருமாறு.
அமீரகம் (துபாய், அபுதாபி), 4; அமெரிக்க மாநிலங்கள், 4,915; ஆஸ்திரேலியா, 152; இந்தியா, 2,783; இலங்ைக, 13; கனடா, 139; சிங்கப்பூர், 8; சீசெல்சு, 77; சுவிற்சர்லாந்து, 188; ெடன்மார்க்கு, 194; {யுசீலாந்து, 17; ெநதர்லாந்து, 17; ேநார்வே, 12; பிரான்சு, 40; பிரித்தானியா, 287; பிறேசில், 1; புருைண, 11; போலந்து, 1; மலேசியா, 23; யப்பான், 29; யேர்மனி, 235; பிற நாடுகள், 15,177 ஆக மொத்தம், 24,923 ஆகும்.
ெதாடக்கத்தில் நான்ைகந்து நாடுகளில் தளத்ைதப் பார்த்தவர்கள் இப்பொழுது ஆகக் குறைந்தது 14 நாடுகளில் பார்க்கிறார்கள். விவரம் ெதரியாத நாடுகள் எனத் தளப் பகுப்பி கூறியைதயும் உளத்திருத்தினால், ஆகக் கூடியது 40 நாடுகளிலாவது இந்தத் தளத்ைதப் பார்க்கிறார்கள் எனக் ெகாள்ளலாம்.
நாளொன்றுக்குச் சராசரியாக 11 பேர் தட்டித் திறக்க, ைத, 2006இல் ெதாடங்கிய இந்த வருைக வேகம், ஐப்பசியில், சராசரியாக 454 ஆக உயர்ந்துள்ளது. ஐப்பசியில் ஒரு மணி ேநரத்துக்குச் சராசரியாகப் 18 பேர் தட்டித் திறந்துள்ளனர்.

தட்டியோர், திறந்ேதார்
மாதம் மொத். நாளுக்கு மணிக்கு
2006 ைத 345 11 0
2006 மாசி 409 14 0
2006 பங்குனி 465 15 0
2006 சித்திரை 534 17 0
2006 வைகாசி 356 11 0
2006 ஆனி 917 31 1
2006 ஆடி 2315 74 3
2006 ஆவணி 2388 77 3
2006 புரட்டாதி 3114 103 4
2006 ஐப்பசி 14080 454 18
24923
இந்தத் தளம், பக்கமாக்கல் பணியில் இருப்போருக்குப் பேருதவியாகும். பன்னிரு திருமுறையில் வரும் பாடல்களை அவர்கள் தட்டச்சுச் செய்ய வேண்டியதில்லை. தட்டச்சுச் செய்வதால் வரும் மனிதத் தவறுகளைத் தவிர்க்கலாம். தளத்துக்குப் போய், பாடலைத் ேதடி, திரையில் வந்ததும் வெட்டி ஒட்டிக் ெகாள்ளலாம்.
எந்த நாட்டில் உள்ள எவருக்கும் திருமுறை நூல்கள் ைகயில் இல்லையே என்ற குறை இல்லை, வீட்டில் கணினி இல்லையா, பக்கத்தில் உள்ள இைணய தள மையத்தில், மின்னம்பலத்தில், உலாவலாம், தளத்ைத அழைக்கலாம், விரும்பிய பாடலையோ, பதிகத்ைதயோ, ேகாயிலையோ ேதடலாம்.
பொன்னம்பலத்தில் மறைந்து, பின் இராசராசன் மீட்ட திருமுறைகள்,
· திசை அனைத்தின் பெருமை எல்லாம் ெதன் திசையே வென்று ஏற வழிசெய்துள்ளன.
· மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனி வெல்ல வாழ்கின்றன.
· அசைவில் செழுந்தமிழ் வழக்ேக அயல் வழக்கின் துறை வெல்ல முன்னேறுகின்றன.
· இசை •ழுதும் மெய்யறிவும் இடங் ெகாள்ளும் நிலை பெருக, இன்று மின்னம்பலத்தில் உலாவருகின்றன.

Thursday, August 03, 2006

தமிழக அரசு நாட்டுடைமையாக்கிய

நூலாசிரியர் பெயர் வழங்கப்பட்டதொகை ரூ. ஆண்டு
1. சுப்பிரமணிய பாரதியார் எதுவும் இல்லை
2. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் 1 இலட்சம் 1984
3. பாவேந்தர் பாரதிதாசன் 10 இலட்சம் 1990
4. பேரறிஞர் அண்ணா 75 இலட்சம் 1995
5. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் 10 இலட்சம் 1995
6. தேவநேயப் பாவாணர் 20 இலட்சம் 1996
7. மறைமலையடிகள் 30 இலட்சம் 1997
8. திரு.வி.க. 20 இலட்சம் 1998
9. கல்கி 20 இலட்சம் 1998
10. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 5 இலட்சம் 1998
11. ப.ஜீவானந்தம் 5 இலட்சம் 1998
12. நாமக்கல்கவிஞர்.
வெ.இராமலிங்கம்பிள்ளை 5 இலட்சம் 1998
13. வ.உ.சிதம்பரனார் 5 இலட்சம் 1998
14. ஏ.எஸ்.கே.அய்யங்கார் எதுவும் இல்லை 1998
15. வ.ரா.(வ.ராமசாமி அய்யங்கார்) எதுவும் இல்லை 1998
16. நாவலர் சோமசுந்தர பாரதியார் 5 இலட்சம் 1998
17. கவிஞர் கா.மு.ஷெரீப் 5 இலட்சம் 1998
18. பரலி.சு.நெல்லையப்பர் 5 இலட்சம் 1998
19. வ.வே.சு. ஐயர் 5 இலட்சம் 1998
20. காரைக்குடி சா.கணேசன் 5 இலட்சம் 1998
21. திரு.ச.து.சு.யோகி 5 இலட்சம் 1998
22. வெ.சாமிநாத சர்மா 5 இலட்சம் 2000
23. கவிஞர்.முடியரசன் 10 இலட்சம் 2000
24. மயிலை சீனி வேங்கடசாமி 10 இலட்சம் 2000
25. சாமி சிதம்பரனார் 10 இலட்சம் 2000
26. பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் 10 இலட்சம் 2001
27. புதுமைப்பித்தன் 5 இலட்சம் 2002
28. கு.ப.சேது அம்மாள் 5 இலட்சம் 2002
29. நாவலர் பண்டித
ந.மு.வேங்கடசாமி நாட்டார் 5 இலட்சம் 2004
30. க.நா.சுப்பிரமணியம் 5 இலட்சம் 2004
31. ந.பிச்சமூர்த்தி 5 இலட்சம் 2004
32. தெ.பொ.மீனாட்சி சுந்தரம் 5 இலட்சம் 2005
33. த.நா.குமாரசாமி 5 இலட்சம் 2005
34. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 5 இலட்சம் 2005
35. சக்தி வை.கோவிந்தன் 5 இலட்சம் 2005
36. புலவர் குழந்தை 10 இலட்சம் 2006

எழுத்துத் திருட்டு - நிகழ்வுகள், நடவடிக்கைகள்

என் நண்பரின் தந்தையாருக்குப் பவள விழா. நினைவாகப் பத்திப் பாடல்களின் திரட்டு ஒன்றை வெளியிட விழைந்தார். என் உதவியை நாடினார். துளாவித் தேடித் தொகுத்து வெளியிட்டோம். நல்ல வரவேற்பு.
தொடர்ந்து நான்கைந்து பதிப்புகள் வெளிவந்தன. இருப்புத் தீர்ந்த நிலையில் திருமகள் நிலையத்தினர் 250 படிகள் ஏற்றுமதிக்காகக் கேட்டனர். நீங்களே அச்சிட்டு வெளியிடுங்கள் என எதிரங்களை அனுப்பினேன். நல்ல பதிப்பாக வெளியிட்டனர். அவர்களாகவே எனக்கு 200 படிகளை அனுப்பினர்.
அடுத்தும் ஒரு பதிப்பு, அதே 200 படிகள். சில மாதங்களுக்கு முன் மீண்டும் ஒரு பதிப்பு வெளியிட என்னிடம் கேட்டனர். எனக்கு எதுவும் தரவேண்டாம் என்னிடம் கேட்கவும் வேண்டாம். தொடர்ந்து வெளியிடுங்கள் எனக் கூறிவிட்டேன்.
நூலின் உள்ளடக்கதின் பாடல்கள் யாவும் யாரோ எப்பவோ எழுதியன. தொகுத்ததை மட்டுமே என் நண்பர் ஈஸ்வரனும் நானும் செய்திருந்தோம். இதில் எமக்கு உரிமம் ஏது?
என் தந்தையார் யாழ்ப்பாணத்தில் அறுபதுகளில் வெளியிட்ட இத்தகைய பிறிதொரு தொகுப்புப் பதிப்புகள் பல கண்டது. மணிமேகலைப் பிரசுரத்தார் தேவாரத் தொகுப்பு ஒன்றை வெளியிட விரும்பி என்னை அணுகினர். அந்தப் பதிப்பை அப்படியே மீளப் பக்கமாக்கி, அட்டையும் தயாரித்து மணிமேகலைப் பிரசுரத்தாரிடம் கொடுத்தேன். அப்பதிப்பில் 200 படிகளைத் தந்த மணிமேகலைப் பிரசுரத்தாரிடம் இனிமேல் எனக்கு எதுவும் தரவேண்டாம் எனக் கூறிவிட்டேன்.
அட்லஸ் என்ற ஆங்கில ஓலியாக்க வழக்கிற்கு மாற்றாக நிலவரை என்ற தமிழ்ச் சொல்லை அறிமுகம் செய்து அத்தலைப்பில் சில நூல்களை வெளியிட்டு வந்தேன்.
ஓரியன்ற் லோங்மன்ஸ் கம்பனியார் தமிழில் அட்ல்ஸ் என்ற பெயரில் நூல்களை வெளியிட்டு வந்தனர். அங்கிருந்து ஒரு மூத்த அதிகாரி என்னிடம் வந்தார். தாம் வெளியிடவுள்ள புதிய தமிழ் அட்லஸுக்கு நிலவரை என்ற பெயரைப் பயன் படுத்த அநுமதி கேட்டார். தமிழ் புத்தகங்கலுக்குத் தமிழ்த் தலைப்புப் பெயரை வெளியிடுதல் பொருத்தம். நன்றாகப் பயன் படுத்துங்கள் என்றேன். நிலவரை என்ற பெயருடன் வெளிவந்த அவர்களது வெளியீட்டைச் சில வாரங்களின் பின்னர் என்க்கு மாதிரியாகத் கொணர்ந்து தந்தார்.
தேசப் படப் புத்தகம் என்ற பெயரில் யாழ்ப்பாணம் ஷ்ரீலங்கா புத்தகசாலையார் கடந்த 30 ஆண்டுகளாக க. குணராசா தயாரித்த நூலை வெளியிட்டு வந்தனர். 1995 முதலாக இலங்கை நிலவரை என்ற எம் பதிப்பு விற்பனைக்கு வந்ததும், லேக் அவுஸ், அர்ச்சனா, குணராசா ஆகியோரின் தேசப் படப் புத்தகங்களின் விற்பனையைப் பின்னுக்குத் தள்ளியதால், குணராசா தன் புத்தகத்துக்குப் புதிய நிலவரை எனப் பெயரிட்டே சந்தையில் நிலைகொள்ள முயல்கிறார்.
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 1-10 அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஒரு தொகுதி. கண்ணதாசன் பதிப்பகத்தாரின் ஒப்புதலின்றி வெளிநாட்டில் ஒருவர் வெளியிடக் காந்தி கண்ணதாசன் சட்ட பூர்வமாகத் தலையிட வேண்டி வந்தது.
நீண்ட காலமாக அச்சில் வராத நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இயற்றிய நூலைச் சென்னையில் ஒரு பதிப்பகத்தார் வெளியிட, சோமசுந்தரப் புலவரின் பெயரனார் அப்பதிப்பகத்தாருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.
பேரா. அ. ச. ஞானசம்பந்தனின் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற நூலைப் பாரதிதாசன் எழுதியதாக வெளியிட்டமை தொடர்பாக, அ. ச, ஞா. குடும்பத்தினர் வழக்குத் தொடுத்துளர்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகள் சிலவற்றை கழகத்தைக் கேட்கமலே அப்படியே வெளிநாட்டில் ஒருவர் மறுபதிப்பித்து விற்பனை செய்கிறார்.
ஒரு பதிப்பகத்தார் ஒரு தலைப்பில் வெளியிடும் நூலின் சுருக்கத்தை அதே தலைப்பில் மலிவு விலையில் வெளியிட்டு நேரடியாக விற்பனையில் போட்டியிடுவதும் தமிழகம் காணாததல்ல.
ஒரு பக்கம் செய்யுள், எதிர்ப்பக்கத்தில் அச்செய்யுளுக்குப் பொருள். திருக்குறள் மு. வ. உரைப் பதிப்பில் இந்த உத்தியைக் காட்டியவர் கழகம், தாமரைச் செல்வர் சுப்பையா. இதே உத்தியைக் கையாண்டு நூல்களை வெளியிடுவதைப் பதிப்பகங்கள் பல தமதாக்கின. வர்த்தமானன் பதிப்பகத்தாரின் வெற்றிப் பதிப்புகளுக்கு இந்த உத்தியே கை கொடுத்தது.
ஆங்கிலத்தில் வெளியாகும் மருத்துவ பொறியியல் நூல்களின் இந்தியப் பதிப்புகளின் விலைகள், அவற்றை நகலெடுத்துக் கட்டிப் புத்தகமாக்கும் செலவைப் போலப் பன்மடங்கு. மாணவர் ஒருவர் ஒரு படியை வாங்கி, நகல்களாகப் பல மாணவர் பயன்படுத்துவதால் பதிப்பாளரும் விற்பனையாளரும் பாதிப்படைவதைத் தெபுவிபச கூட்டங்களில் பேசித் தடுக்கும் நடவடிக்கையை நோக்கிக் குழுக்களும் அமைந்தன.
காவியா விசுவநாதனின் நாவலும் தான் பிறவுணின் டாவின்சி கோடும் இந்தியாவெங்கும் நடைபாதைக் கடைகளில் அமோக விற்பனையாகின்றன. அவை பதிப்பாளர் வெளியிட்ட மூலப் பதிப்புகள் அல்ல. பதிப்புத் திருட்டு நகல்கள். அவை மட்டுமல்ல, ஆரி பொட்டர் நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் என விற்கக் கூடிய ஆங்கிலத் தலைப்புகளை அப்படியே இந்தியாவில் அச்சிட்டு நடைபாதைக் கடைகளிலும் சிறு புத்தகக் கடைகளிலும் விற்பனை செய்கின்றனர்.
கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் என் இல்லம் வந்திருந்தபோது நான் தயாரித்த திருநெல்வேலி மாவட்ட நிலவரைப் படங்களைப் பார்த்தார். கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் அத்தகைய படத்தைத் தயாரிக்க வேண்டினார். அவருடன் கன்னியாகுமரி பயணித்தேன். நண்பர்களை அறிமுகம் செய்தார்.
இந்திய நிலஅலவையாளர் துறைக்கு எழுதி அநுமதி பெற்றேன். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் பேசி, வட்டாட்சியர் மற்றும் பல்துறை அலுவலர்களின் உதவியை நாடினேன். களப்பணி செய்தேன். பொறிஞர், முனைவர் ப. கோமதிநாயகம் எனக்கு உதவினார். நாகர்கோயில் காந்தளகம் ஆ. குமரேசன் அயராது உழைத்தார். நானும் கடுமையாக உழைத்தேன். 800 ஊர்ப் பெயர்கள், அதற்கான சுட்டி யாவும் கொண்ட சுவர்ப் படம் ஒன்றைக் கணிப் பொறியில் தயாரித்தேன்.
நாகர் கோயில் யுனைடெட் பதிப்பகத்தார் 1,000 படிகள் அச்சிட்டுத் தருமாறு கேட்டனர். முதற் பதிப்பின் விற்பனை உரிமையை அவர்களுக்குக் கொடுத்தேன். விற்கும் விலை ரூ. 70/-
இரண்டாம் பதிப்பின் 10,000 படிகளுக்கான விற்பனை உரிமையை வேறொரு விற்பனையாளருக்குக் கொடுத்தேன். இரண்டு பதிப்புகளும் விற்றுத் தீர்ந்தன. 2ஆம் பதிப்பின் விற்கும் விலை ரூ. 10/-
கன்னியாகுமரி மீனவர் சங்கத்திலிருந்து ஒருவர் காந்தளகம் வந்தார். தேர்தல் தொகுதி வரைவுக்கு இப்படம் மிக உதவியதாகவும் மாவட்டத்தில் 44 மீனவ ஊர்கள் இருப்பதைப் படம் மூலம் அறிந்ததாகவும் கூறினார்.
வள்ளுவன் பொட்டை என்ற மலை இருப்பதையும் திருவள்ளுவர் ஆண்ட பகுதி அஃதென்பதையும் இப்படத்தை வைத்தே கண்டறிந்த, கன்னியாகுமரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினர், சிறப்பாக முனைவர் பத்மநாதன், நேரில் அப்பகுதிக்குச் சென்று, கள ஆய்வு செய்தனர். பல ஏடுகளில் கட்டுரையாக எழுதினர். எமக்கும் நன்றி தெரிவித்தனர்.
இவ்வாறாக அந்தப் படம் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்குமுன் நாகர்கோயில் காந்தளகத்தார் அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறினார். யுனைடெட் பதிப்பகத்தார் அதே படத்தை, ஒரே ஒரு திருத்தத்துடன், அச்சிட்டு ரூ. 100/- விலையிட்டு விற்று வருவதாகக் கூறினார். எந்த ஒரு இடத்திலும் அப்படத் தயாரிப்புக்கான எம் பங்களிப்பை அவ்வெளியீட்டில் யுனைடெட் பதிப்பகத்தார் குறிப்பிடவில்லை.
யுனைடெட் பதிப்பகத்தாரிடம் தொடர்பு கொண்டு அவ்வாறு செய்வது தவறு என எச்சரித்தேன். அப்படித் தாம்செய்யவில்லை என்றும் செய்யப் போவதில்லை என்றும் கூறினர்.
விற்பனைக்கான சான்றைப் பெற்றேன். சட்ட நடவடிக்கையில் இறங்கினேன். காவல்துறைக்கு எழுதினேன். குற்றவியல் சட்டத்துக்குள் பதிப்புரிமை மீறல் வராதெனக் காவல்துறையினர் கூறினராயினும், ஏமாற்று, நம்பிக்கைத் துரோகம், எழுத்துத் திருட்டுக் குற்றங்களுங்காக யுனைடெட் பதிப்பகத்தாரை அழைத்து விசாரித்து, அச்சிட்ட படிகள், அச்சுமுன் தயாரிப்புகள் யாவற்றையும் கைப்பற்றினர். அதுவரை விற்ற படிகளுக்கான தொகையை எனக்குச் செலுத்துமாறு கேட்டனர்.
யுனைடெட் பதிப்பகத்தார் என்னிடம் எழுத்து மூலம் மன்னிப்புக் கோரினர். இழப்பீடு தரவதாக உறுதி கூறினர். சினமுற்றிருந்த குமரேசனும் தணிந்தார். காவல் துறையினரைப் பாராட்டவேண்டும்.
மூன்று முறை கன்னியாகுமரி மாவட்டம் சென்றேன். தன் மாவட்டம் வளர வேண்டுமென்பதில் குமரேசனுக்கு உள்ள ஆர்வத்தால் மாவட்டம் முழுவதும் பயணித்துத் தகவல் திரட்டினார்.
இந்த உழைப்பையும் நேரத்தையும் கவனத்தில் கொள்ளாது என் எச்சரிக்கையையும் மீறி யுனைடெட் பதிப்பகத்தார் நடந்து கொண்டமை அவர்களின் வணிக நற்பெயருக்கே களங்கமாயது.
என்னுடனும் குமரேசனுடனும் பேசி, ஓர் உடன்பாட்டை எட்டி, பதிப்பிருந்தால் நானும் குமரேசனும் பரிவுடன் நடந்திருப்போம். வருவாயையவிட வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டோமாயினும் அப்பட்டமாகத் தெரிந்து கொண்டே நடந்த எழுத்துத் திருட்டுக்கு உடந்தையாகோம்.
திரைத் திருட்டுக்குக் குண்டர் சட்டம் பாய்கிறது. எழுத்துத் திருட்டுக்குக் குடியியல் சட்டங்களே துணை. பேரா. அ. ச. ஞா. குடும்பத்தினர் தொடுத்த வழக்கு நெடுங்காலமாக நிலுவையில் உள்ளது.
புலமைச் சொத்துரிமைச் சட்டங்கள் ஏடடுச் சுரைக்காய் என எழுத்துத் திருட்டிலும் பதிப்புத் திருட்டிலும் ஈடுபடுவோர் நன்றாகத் தெளிந்துளர். வலுவில்லாத சட்டங்களை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்துக்குப் போய் சட்ட வாதங்களின் ஓட்டைகளுள் வழுக்குவதை விட, எழுத்து மற்றும் பதிப்புத் திருட்டுகளைக் கண்டும் காணாதது போல விட்டுவிடுவது மேல் எனப் புலமையாளரும் பதிப்பாளரும் கருதுவது வியப்பல்ல.

Sunday, July 09, 2006

இவை எழுத்து திருட்டாகுமா?

2006 ஏப்பிரல் 7, வெள்ளிக்கிழமை; இலண்டன் மாநகரம்; உயர் நீதி மன்ற வளாகம்; நீதிபதி வருகின்றார்; இருக்கையில் அமர்கின்றார்; 71 பக் கத் தீர்ப்பை வாசிக்கிறார்.
பிறவுணுக்கு மகிழ்ச்சி, பெய்கண் டர் மற்றும் இலே இருவரும் துயரக் கடலில்.
பிறவுணின் முழுப்பெயர் டான் பிறவுண். அவர் கிறித்தவர், கிறித்து மீதும் கிறித்தவ போதனைகள் மீதும் நம்பிக்கை கொண்டவர். விவிலியத் தைப் படித்தவர்.
கிறித்துவின் வாழ்க்கைக் கதை யை விவிலியத்தில் படித்த காலத்திலிருந்தே பிறவுணுக்கு மனதில் ஒரு நெருடல்.
கிறித்துவின் வாழ்க்கையை முழு மையாக எழுதாமல் விட்டுவிட்டனரே என டான் பிறவுண் கருதினார். தானாகக் கள ஆய்வுகள் செய்தார். பயணங்களை மேற்கொண்டார். பலரின் கதவுகளைத் தட்டினார், நூலகங்களுள் நுழைந்து நுவன்றார்.
பிறவுணுக்குத் துணையாக அவரின் மனைவி பிலித்து நின்றார்; இருவரும் படித்த புத்தகங்களுள், பெய்கண்டர் எழுதிய புனிதக் குருதி என்ற நூலும் ஒன்று; இலே எழுதிய திருக்குருதிக்கலம் என்ற நூல் மற் றொன்று. இந்த இரண்டு நூல்களை யும் 1982ஆம் ஆண்டில் வெளியிட் டவர்கள் புகழ்மிக்க இறாண்டம் அவுஸ் பதிப்பகத்தார்.
தனது நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக, டாவின்ஸின் கோடு என்ற நாவலை 2003 மார்ச்சில் டான் பிறவுண் வெளியிட்டார். இதுவரை அந்த நாவல் 30 மொழிகளில் பெயர்ந் துள்ளன. ஆங்கிலப் பதிப்பு மட் டுமே 4 கோடிப் படிகள் விற்றுத் தீர்ந்தன.
இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத் திரைப்படமும் வெளிவந்து உலகெங்கும் சக்கைபோடு போடுகிறது. தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து இத்திரைப்படத்தை, வெளியிட முயன்றபொழுது, தமிழ கம் உள்ளிட்ட மாநில அரசுகள் பல, தடை விதித்தன.
பிறவுணை இரு முனைகளிலி ருந்து தாக்கினர்.
1. எழுத்து, கருத்து, வடிவம், ஒழுங் கமைப்பு யாவற்றையும் பிறவுண் திருடினார் என்பது முதல் முனைத் தாக்குதல்.
2. கிறித்து, திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளைப் பெற்ற தால், அக்குழந்தைகளின் வாரிசுகள் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக் கின்றன என்ற, விவிலியத்தில் கூறப் படாத பிறவுணின் செய்தி, கிறித்தவ மதத்திற்கு மாறான புனைந்துரை என, தீவிரக் கிறித்தவர்கள் பிறவுணை மறுதலித்தனர். இது பிற வுண் மீது ஏவப்பட்ட இரண்டாவது முனைத் தாக்குதல்.
எழுத்து, கருத்து, வடிவம், உட் பொருள் யாவும் 1982 இல் தாம் வெளியிட்ட புனிதக் குருதி மற்றும் திருக்குருதிக்கலம் ஆகிய நூல்க ளில் இருந்து பிறவுண் திருடியவை என இலண்டனின் உயர்நீதி மன்றத் தில் அதன் ஆசிரியர்களான பெய்கண்டரும் இலேயும் வழக்குத் தொடுத்தனர்.
நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு பிறவுணுக்குச் சாதகமாக அமைந்தது. எழுத்தை யோ, கருத்தையோ, வடிவத்தை யோ, உட்பொருளையோ பிறவுண் அந்த இரு புத்தகங்களிலிருந்தும் திருடவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி தன் தீர்ப்பில் எழுதினார்.
பொய்யும், புரட்டும் விவிலியத் துக்குப் புறம்பானதுமான இந்தப் புனைந்துரையைத் தடை செய்யு மாறு உலகெங்கும் உள்ள தீவிர கிறித்தவர்கள் அரசுகளுக்கும் நீதி மன்றங்களுக்கும் விண்ணப்பித்த னர்.
டாவின்சி கோடு நாவலும் அந் தத் தளத்தில் எழுந்த திரைப்படமும் தடைக்குரியனவல்ல என்று இந் தியா உள்ளிட்ட பல நாடுகள் தீர்ப்ப ளித்தன. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தடை விதித்தன. இந்தியாவில் உள்ள மாநில அரசு கள் சிலவும் தடைவிதித்தன.
ஆங்கிலத்திலும் பிற மொழிக ளிலுமாக இந்த நாவலும் திரைப் படமும் விற்பனையில் சாதனை களை ஏற்படுத்தின.
விவிலியச் செய்திக்கும், பிறவு ணின் புனைந்துரைக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை ஆராய இங்கு நான் விரும்பவில்லை.
ஆனாலும், எழுத்துத் திருட்டு வரலாற்றில் திருப்புமுனைத் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் பிற வுணை விடுவித்ததின் காரணத்தை ஆராய விரும்புகிறேன்.
பிறக்கும் போது எவரும் எழுதிக் கொண்டே பிறப்பதில்லை.
எந்த எழுத்தும் முன்பிருந்த படைப்பாளி அல்லது எழுத்தாள ரின் பாதிப் பைப் பெற் றிருப்பது இயல்பு. அவ்வாறாயின், எவரின் எழுத்தும் தனித்துவமான தென்று கருதாதிருப்பதும் முறை ஆகாது.
ஐந்தும் ஐந்தும் பத்து என்பது நமக்கு யாரோ சொல்லித் தந்தது தான்.
அதைப் போன்ற ஏராளமான சூத்திரங்களை எழுதும் போது ஒவ்வொரு முறையும் இன்னார் சொல்லிய சூத்திரம் என எழுத முடியுமா?
சுழியம் (0) தமிழர் உலகுக்கு தந்த மூலப் பொருள் என ஒவ்வொரு சுழியத்துக்குப் பின்னும் அடிக்கு றிப்பு எழுதிக் கொண்டிருக்க முடி யாது. இவை அனைவரும் அறிந்த பொதுநிலைகள்.
ஒருவரின் கவனத்துக்கு வந்த வை, ஒருவர் அநுபவித்தவை, ஒருவரின் சுய சிந்தனையில் எழுபவை, கண்டுபிடித்தவை பற்றிய எழுத்து கள் திருட்டாக முடியுமா? முடியாது.
களஆய்வு செய்து, தகவல்களைக் குறித்து வைத்து, அவற்றை ஆய்வு கூடத்திற்கு எடுத்து வந்து, பகுத்து, வகுத்து, தொகுத்து, திரட்டி, ஒழுங் கமைத்து எழுத்தாக்குவது எழுத்துத் திருட்டாகாது.
புத்தகங்களைப் படிக்கிறோம், அவற்றை மனதில் பதியவைக்கி றோம், மனப்பாடம் செய்கிறோம். நாம் எழுதும் போது மனத்தில் புகைப் படமாகப் பதிந்த அந்தச் செய்திகள், கருத்துகள், வடிவமைப்புகள், உள் பொருள்கள் எம்மை அறியாமலே எமது எழுத்துள் புகுகின்றன.
முண்டாசுக் கவிஞன் பாரதியின் வரிகள், பாரதிதாசனின் வரிகள் கவியரசு கண்ணதாசனின் வரிகள், இன்றுள்ள பலரில் பாதிப்பை ஏற்ப டுத் த, முன்ன வர்களின் சாயல் பின் வந்தோரின் படைப்புகளில் நன்றாகவே தெரியும்.
அது போலவே பாரதியும், பாரதி தாசனும், கண்ணதாசனும் முன்னோர் விட்டுச் சென்ற நாட்டுப்புற பாடல் களால், பழமொழிகளால் பாதிப்புற் றனர். இவை எழுத்து திருட்டாகுமா? இல்லை.
எழுத்துக்கு எழுத்து, சொல்லுக் குச் சொல், வரிக்கு வரி, பத்திக்குப் பத்தி அப்படியே இன்னொருவரின் எழுத்தை, படைப்பை, இசையை, திரைப்படத்தை, மென்பொருளை எடுத்து, தமது படைப்புக்குள் தமது நாவலுக்குள் எங்கிருந்து எடுத்தோம் எனத் தெரிவிக்காமல் உள்ளடக்கு வதே எழுத் துத் திருட்டு.
அந்த எழுத்து எப் பொழுது எங் கே எப் பெயரில் எத் தலைப்பில் யாரால் எவ்விடத்தில் எழுதிப் பதிப் பிக்கப் பெற்றது என்ற குறிப்பை, அடிக்குறிப்பாக மேற்கோள் குறியீ டாகக் காட்ட வேண்டிய கடமை ஒவ் வொரு எழுத்தாளருக்கும் உண்டு. அப்படிக் காட்டினால் அது எழுத்துத் திருட்டு ஆகாது.
ஒரு வரியையோ, பாட்டின் இரு வரிகளையோ, கவிதை முழுவதையுமோ, உரைநடைப் பத்தியையோ மேற்கோள்குறிப்பு அல்லது அடிக் குறிப்புடன் வெளியிடுவதே படைப்பாளிக்கும் மதிப்பு, முன்பு எழுதியவருக்கும் மதிப்பு.
மேற்கோள் குறிப்பையும், அடிக் குறிப்பையும்வெளியிடுகிறோமே என்பதால், பக்கம் பக்கமாகப் பெயர்தது வெளியிடலாம் என ஒருவர் கருதி, தன்னுடைய எழுத்தை இடையிடை சேர்த்து எழுதினால் அஃது அப்பட்டமான எழுத்துத் திருட் டாகும்.
படித்தேன், பாதிப்பு இருந்தது, புகைப்படமாய் மனதில் பதிந்தது, எழுதும்போது அப்படியே வந்தது, எழுதினேன் என்ற காவியா விசுவநாதனின் விளக்கத்தை எவரும் ஏற்க மறுக்கின்றனர்.
ஒரே கருவாக இருப்பினும் வெவ்வேறு முயற்சிகளின் பெறுபேறாக இருப்பதால், பெய்கண்டரோ, இலேயோ, டான் பிறவுணோ ஒருவரின் எழுத்தை மற்றவர் திருடவில்லை என நீதிமன்றமே தீர்த்தது.
அமெரிக்காவிலும் டான் பிறவுண் வழக்குகளைச் சந்தித்தார். கடவுளின் பெண் மகவு என்ற தலைப்பில் உலூவி பேர்டியூ எழுதி, 1999இல் வெளிவந்த நாவலை ஒட்டியே டான் பிறவுண் எழுதினார் எ ன்ற வழக்கிலும் டாண் பிறவுணுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வழங்கினர்.
தொடக்க காலக் கிறித்துவ சமயத்தில் பெண்களின் புனிதத் தன்மை யை நிரூபிப்பதே இரு நாவல்களிலும் கரு.
கிறித்துவுக்கு மனைவி இருந்தார் என்பதை விவிலியம் எழுதிய காலத்திலிருந்தே மறைத்து வந்துள்ளதை இரு நூல்களும் ஒரே மாதிரி அமைத்திருந்தன.
ஓவியங்களில் மறைபொருளாக உண்மை புதைந்திருந்ததும் அந்த ஓவிய முடிச்சை அவிழ்ப்பதே இரு நாவல்களிலும் போக்காக இருந்தது.
இரு நாவல்களிலும் நெடுங்கதை ஒன்று, துணைக் கதை ஒன்று என இரு கதைகளாக ஒரே திசையில் வாசகரை அழைத்துச் சென்றன.
கத்தோலிக்க திருச்சபையின் தீவிரவாதிகள் சிலர், இரகசியத்தைக் காத்தவரைக் கொலை செய்ய முயன்றதையும் இரு நாவல்களும் எழுதின.
இவ்வளவு ஒற்றுமைகள் கடவுளின் பெண் மகவுக்கும் டாவின்சி கோடுவுக்கும் இருந்தும் டான் பிறவுண் எழுத்துத் திருட்டைச் செய்யவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்த்தமைக்கு, டான் பிறவுணின் மூல எழுத்து அப்பழுக்கற்ற சொந்தத் தயாரிப்பாக, கள ஆய்வுகளின் பெறுபேறாக இருந்ததே காரணமாகும்.

காவியாவின் எழுத்துத் திருட்டு

காவியா விசுவநாதன் - தமிழ்ப் பெண். மூளை அறுவை மருத்துவர் விசுவநாதன் இராசாராமன் மற்றும் மருத்துவர் மேரி சுந்தரம் ஆகியோ ரின் மகள்.
சென்னையில் வாழ்ந்த பெற்றோ ருக்குச் சென்னையில் பிறந்தவர் காவியா. முதலில் இங்கிலாந்து சென்று, பின்னர் அமெரிக்காவில் குடியேறிய பெற்றோர், தம் பெண் ணைப் புகழ் பெற்ற ஆவார்டு பல்கலைக்கழக்த்துக்குப் படிக்க அனுப்பினர்.
நிதி அமைச்சர் சிதம்பரம், சுப்பிர மணிய சுவாமி போன்ற தமிழ்நாட் டவர் பயின்ற பல்கலை ஆவார்டு.
ஆவார்டு பல்க லையில் சேர்க்க வேண்டும் என்பதற் காகப் பல இலட்சம் ரூபாய்களைச் செல வு செய்து காவியா வைத் தயாரித்தனர்.
பள்ளியில் படிக்கையில் காவியா படு சுட்டி. வகுப்புகளில் தலைசிறந் தவரான மாணவி மட்டுமல்ல ஆங் கிலத்தைச் செவ்வனே எழுதும் ஆற் றல் கைவரப் பெற்றவர். இதனால் பள்ளியின் பருவ இதழின் ஆசிரிய ரானார்.
தன் பள்ளிப் பருவத்திலேயே, ஐரிஷ் நாட்டு வரலாற்றை ஆதார மாக்கிச் சில நூறு பக்கங்களில் நாவலாக்கினார்.
ஆவார்டு பல்கலைக்காகத் தயா ராகையில் இவரின் எழுத்துத் திற மையை வியந்த இவரின் ஆசிரியை, தனக்குத் தெரிந்த பதிப்பாசிரியர் ஒருவருக்கு அறிமுகம் செய்தார்.
ஆவார்டில் சேர்ந்தபின், காவியா எழுதுவதை விடவில்லை. இதற்காக நிறைய நாவல்களைப் படித்தார். ஏனைய மாணவர் பல்புனை நிகழாழ ராகக், காவியாவோ பல்கலையின் தேனீர்க் கூட மேசைகளில் வாசித்துக் கொண்டிருந்தார், எழுதிக் கொண்டி ருந்தார்.
அப்படி எழுதிய நாவல், How Opal Metha Got Kissed, Got Wild and Got a Life.
காவியாவுக்கு ஒரு கோடி ரூபாய் உரிமம் கொடுத்து அவரின் நாவலை லிற்றில் பிறவுண் பதிப்பாளர் வாங் கினர். இத்தனைக்கும் அந்த நாவல் அவரின் கன்னி முயற்சி. அவருக்கு வயதோ 19.
அந்த நாவல் முழுவதும் தன் வரலாறு போலத்தாம். அமெரிக்கா வந்த இந்திய மாணவரான ஓபல் மேத்தா, புகழ்பெற்ற பல்கலை ஒன் றில் சேர்வதற்கான அரும் முயற்சி கள், அங்கு நிகழ்ந்த கொஞ்சல்கள், காதல்கள், அமெரிக்கா வாழ் இந்திய சமூகத்தின் உள்முரண்பாடுகள், அதனால் மேத்தா அடைந்த இன்ப துன்பங்கள், யாவையும் கற்பனை யாக, தன்வாழ்வின் நிகழ்வுகளுடன் இணைத்துச் சுவையாகத் தந்துள்ளார் காவியா.
புத்தகம் வெளியானது. பரபரப் பாக விற்கத்தொடங்கியது, இந்தியா வின் பென்குவின் நிறுவனம் 100,000 படிகளுக்கு ஆணை கொடுத்தனர்.
உலகெங்குமுள்ள ஆங்கிலம் தெரிந்த நாடுகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட நாவலாசிரியையானார் காவியா.
காவியாவை வளர்த்தெடுப்பதற் காகவே தன் மருத்துவத் தொழிலைத் தியாகம் செய்த தாயார் மேரி சுந்த ரம், காவியாவுக்கு வீட்டில் பெரு விருந்து வழங்கத் தயாரானார். ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குமல்லவா தாயின் உள்ளம்!
மகிழ்ச்சி நீளவில்லை. ஆவார்டு பல்கலை இதழான, ஆவார்டு கிறிம் சன், காவியாவின் நாவலை விமர் சித்தது.
மேகன் மக்காபெற்றி என்ற சக மாணவி எழுதிய இரு நாவல்களான, Sloppy firsts, Second Helpings ஆகிய இரண்டிலிருந்தும் பல பத்திகளை அப்படியே படியெடுத்துக் காவியா தனது நாவலுள் புதைத்துள்ளார் என எழுதியது.
மேகனின் நாவல்களை வெளி யிட்ட கிறவுண் பதிப்பகத்தார், 40 இடங்களில் காவியா இவ்வாறு எழுத்துத் திருட்டு நிகழ்த்தியதாகக் குற்றம்சாட்டினர்.
கடந்த ஆனி மற்றும் தை மாதப் பதிப்புத் தொழில் உலகம் இதழ் களில் இந்தத் தமிழ்ப் பெண்ணைப் பற்றிப் பாராட்டி எழுதியதை வாசகர் மறந்திருக்க மாட்டார்.
சாதனை புரிகிறாரே தமிழ்ப் பெண் என எழுதினோம், நிலை தலை கீழாகி, தமிழரின் நற்பெயருக் குக் களங்கமாகி நிற்கிறார் காவியா விசுவநாதன்.
வேதனை வீங்கி நிற்க, உலகெல் லாம் பழிச்சொல் கூற, அவரும் கூனிக் குறுகி, தமிழரும் கூனிக் குறுகி நிற்கின்னர்.
படி யெடு த் தே ன், பயன்ப டுத்தினேன், மேகனின் எழுத்ைதைத் திருடினேன், தவறுதான், தவறை மன்னியுங்கள் எனக் காவியா தானாகவே மன்னிப்புக் கேட்டார்.
மேகன் மக்காபெற்றியின் சுவை ஞர் நான். அவரை விரும்பிப் படிப் பேன். பத்திகளைத் திருடிவிட்டேன். விரும்பிச் செய்யவில்லை, தெரிந்து செய்யவில்லை என்கிறார் காவியா.
கடந்த சில வாரங்கள் எனக் கு உளைச்சலா னவை. என் வாச கர் என்னைக் கைவிடவில் லை என்பதே எனக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து நான் எழுதுவேன். காவியா மீது பழிவாங்கும் எண்ணம் சிறிதேனும் இல்லை. நானும் எழுதுவேன், காவி யாவும் தொடர்ந்து எழுதட்டும் என் றார் பெருந்தன்மையுடன் மேகன்.
பதிப்பகத்தார் இருவரும் எழுத் தாளர் இருவரும் அவரின் முகவர் களும் நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாகச் சிக்கலைத் தீர்த்தனர். ஆனாலும் காவியாவின் மானம் போனது போனதுதான்.
வெளியிட்டு விற்பனைக்காக அனுப்பிய காவியாவின் நாவலின் அனைத்துப் படிகளையும் மீளப் பெற லிற்றில் பிறவுண் பதிப்பகம் தன் விற்பனையாளரின் உதவியைக் கோரியுள்ளது.
இந்தியாவில் 10,000 படிகளை விற்பனையாளருக்கு அனுப்பிவிட் டதாகப் பென்குவின் கூறினர். எஞ்சி யதைத் திருப்பி அனுப்பப் போவதா கத் தெ ரிவி த்த னர்.
19 வயதுப் பெண்தானே, தெரியாமல் செய்துவிட்டாள் என விட்டு விடலாமா? ஆவார்டுக்குத் தேர்வான திறமையுள்ளவர், தெரியாமல் செய் தார் என்ற வாதம் எடுபடாது.
பிரித்தானிய நாவலாசிரியர் ஒருவரின் நூலின் சில பகுதிகளை யும் வரிமாற்றித் தன் நாவலுக்குள் இணைத்துள்ளார் என நியுயோர்க் ரைம்ஸ் இதழ் வெளியிட்ட செய்தி மேலும் அதிர்ச்சியைத் தருகிறது.
புகழ்பெற்ற நாவலாசிரியர் சல் மான் ருஷ்டியின் நாவல்களில் இருந் தும் வரிகளைக் கடன் வாங்கியுள்ளார் எனச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
சென்னையில் பிறந்தவரல்லவா? மண்வாசனை இல்லாமலா போகும்? திரைக்கதைகள் திருட்டு, நாவல்க ளில் திருட்டு, ஆய்வுக் கட்டுரைக ளிள் திருட்டு எனப் பழகிப் போன சில தமிழ்நாட்டவருக்குக் காவியாவின் எழுத்துத் திருட்டு பெரிதாகத் தோன்றாது.
ஆனால் மேற்குலகம் காவியா வைக் காறி உமிழ்கிறது. பதிப்பாளர் லிற்றில் பிறவுண் காவியாவின் அடுத்த இரு நாவல்களை வெளியிட இருந்தார். ஓபல் மேத்தா...வின் திருத்திய பதிப்பையும் வெளியிட இருந்தார். ஓபல் மேத்தா... கதையைத் திரைப்படமாக்க ஒருவர் உரிமம் பெற்றிருந்தார்.
யாவும் கலைந்த கனவாகின. காவியாவின் நூல்கள் எவையும் இப் போதைக்கு வெளிவரா. லிற்றில் பிற வுண் பதிப்பகம் உள்ளிட்ட எவரும் வெளியிடமாட்டார்கள்.
காவியா மீதுள்ள எழுத்துத் திருட் டுத் தவறு குறைவு என்றும், அவரது எழுத்துகளை ஏற்றிப் புகழ்பாடி விற்பனை செய்த அலோய் என்ற பதிப்பாசிரிய முகவரே பெருந் தவறு செய்துள்ளார் எனவும் காவியாவுக்கு முட்டுக் கொடுக்க இந்து நாளிதழ் முன்வருவது வேறு காரணங்களுக் காக. காய்தல் உவத்தலற்ற தலையங் கங்களை எழுதும் மரபும் அருகி வருகிறது.

Tuesday, May 02, 2006

அடிமை மோகத்தில் தெபுவிபச

புனேயில் புத்தகக் காட்சி. அறி வித்தலை இந்தியா முழுவதும் அனுப் புகிறார்கள். உலகம் முழுவதும் அனுப் புகிறார்கள்.
புது தில்லியில் உள்ள இந்தியப் பதிப்பாளர் கூட்டமைப்புடன் இணைந்து புத்தகக் காட்சியை நடத் துகிறார்கள்.
அழகாக அமைந்த அறிவித்தலில் ஒரு பக்கத்தில் தேவநாகரி வரிவடி வம், மறுபக்கத்தில் உரோம வரி வடி வம்.
சென்னைப் புத்தகக் காட்சியை நடத்தும் தெபுவிபச கடந்த சில ஆண்டுகளாக விண்ணப்பப் படிவங் களில் சில பகுதிகளைத் தமிழில் சேர்த்துள்ளனர். 2001 தொடக்கம் தமிழில் தரவேண்டும் என வலியு றுத்தும் சில தமிழ்ப் பதிப்பாளரின் கோரிக்கையின் பயன். ஆங்கிலப் பதிப்பாளர் மேலாட்சியில் தெபுவிபச இருந்த காலத்திலேயே தமிழில் படிவங்கள் வரத் தொடங்கின.
கூட்ட அறிவித்தல்கள், கணக்க றிக்கைகள் யாவும் தமிழில் தரவேண் டும் எனப் பொதுக் கூட்டத் தீர்மா னமே உள்ளது.
தமிழுக்கு அமுதென்று பெயர், செந்தமிழ்த் தேன்மொழியாள் என வரிக்கு வரி தமிழை அச்சிட்டுப் பதிப்பிக்கும் தமிழ்ப் பதிப்பாளர் பெரும் எண்ணிக்கையில் உறுப்பு ரிமை பெற்ற தெபுவிபச, உறுப்பி னருக்கு அனுப்பும் கடிதங்கள் ஆங் கிலத்திலேயே உள்ளன.
கடந்த மூன்றாண்டுகளாகத் தெபுவிபசவில் தமிழ்ப் பதிப்பாள ரின் கை ஓங்கியும் தமிழ் மொழி உரிய இடத்தைப் பெறவில்லை.
அடிமை மோகித் தமிழர் ஆட்சி செய்தால் தமிழுக்கு இடமிருக் குமா? புனேப் பதிப்பாளர் விடு தலை பெற்ற இந்தியாவின் இயல்புக் குடிமக்கள். தெபுவிபசவிலோ அடி மை மோகிகளாக இன்னமும் சிலர்.

வாதுவர்பட்டி தந்த விஞ்ஞானகாந்தி

வாதுவர்பட்டி தந்த விஞ்ஞானகாந்தி
ஆசிரியர்: சி. நடராசன் பக். 216 ரூ. 50

அரசியல்வாதி, கலைஞர், சமய குரவர், வணிகர், தமிழாசிரியர் புகழ் பாடுவதில் காட்டும் கவனத்தை அறி வியலாளர் பால் தமிழர் திருப்புவ தில்லை.
சமூகத்தின் ஒரு சாரார் தங்களைத் தாங்களே புகழ்ந்தும் பாராட்டிக் கொண்டும் ஏனையோரை ஒதுக்கு வதும் ஏற்றதல்ல.
சமூகத்தின் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு வகையில் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறார். அந்தப் பங்கைச் சமூகம் முழுமையாக ஏற்கவேண்டு மென ஒவ்வொருவரும் எதிர்பார்க் கின் றனர்.
உலகின் மிக அதிநவீன தொழி னுட்பத்தை, கிரையோசெனிக் எந் திர உருவாக்கத்தை ஒரு தமிழர் உள்ளூரிலேயே குறுகிய காலத்தில் தயாரித்தார். உலக நாடுகளின் உதவி யின்றித் தயாரித்தார். இந்தியா பத்மசிறீ விருது வழங்கிப் பாராட்டி யுள்ளது.
தமிழ்நாட்டில் யார் அறிவார்? கோயில்கட்டுவதற்குத் தமிழ்நாட்டில் பிறக்காத உயிருள்ளோருக்கு முய லும் அறிவிலிகள், தமிழ்நாட்டில் பிறந்து உலகம் வியக்கும் அறிவிய லாளரைத் திரும்பிப் பார்ப்பதில்லை.
இலக்கண வழுக்களுடன் கவி தை என்ற பெயரில் உரைநடை வரிக ளை உடைத்து எழுதும் தமிங்கில நடையாளர், திரை இசைக்குத் தமிழை வளைத்துக் கொடுப்பதால் கவிஞராகிப் பட்டிதொட்டியெங் கும் பரவலாகப் பேசப்படுகிறார்.
தலைப்புக்குப் பொருத்தமின்றி, நகைச்சுவையாகப் பேசும் பட்டிமன் றப் பேச்சாளர் தமிழறிஞர் என உலா வருகிறார்.
துல்லியமாக, அணுவளவும் தவறின்றி, ஏவுகலங்களை விண்வெ ளிக்கு அனுப்பும் அறிவியலாளரைத் தமிழர் பலருக்குத் தெரியாது. பட்டி தொட்டியெங்கும் அவரை அழைத் துப் பாராட்டவேண்டிய கடமை தமிழருக்கு உண்டு.
விருதுநகர் மாவட்டத்தில் அருப் புக்கோட்டைக்கு அருகே, வாதுவர் பட்டியில் பிறந்து, மின்சாரமோ, தெருக்களோ இல்லாத சிற்றூரில் வாழ்ந்து, பல கிமீ. நடந்து பள்ளி சென்று, தமிழ்மொழி மூலம் கல்வி கற்று, பின்னர் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் படித்துப் பொறியியலாளராகி, திறமையின் தளத்தில் விண்வெளி ஆய்வு நிறுவ னத்துக்குத் தெரிவாகி, உலகம் போற் றும் அறிவியலாளராக விளங்குபவர் ஞானகாந்தி.
ஐந்து மொழிகளைக் கற்றவர், பிரான்சில் விருது பெற்றவர், இந் தியாவின் சிறந்த அறிவியலாளர் விருது பெற்றவர், அப்துல் கலா முக்கு உதவியாக இருந்தவர், இந் தியாவின் பத்மசிறீ விருது பெற்ற வர். இவரைத் தமிழகமும் தமிழரும் தலையில் தூக்கிவைத்துக் கொண் டாட வேண்டாமா?
தனிநபர் வழிபாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தில் பகுத்தறிவுப் பார்வை மலரவேண்டும்.
அந்தக் கண்ணோட்டத்துடன் விஞ்ஞானகாந்தி நூலைப் படிக்க வேண்டும். நூல் தயாரிப்பு இதை விட நன்றாக அமைந்திருப்பின் வாச கர் விரும்பிப் போற்றுவர். மலரு மல்ல, நூலுமல்ல எனத் தயாரித் துளர். ஞானகாந்தியின் வெற்றியான வாழ்க்கை ஏனைய தமிழருக்கு வழி காட்டியாகும். அவரைப் பற்றிய நூல்கள் பல வெளிவரவேண்டும்.

மின்னம்பல தளம் ஒன்றின் ஐந்தாண்டு வரலாறு (1999-2004)

இணையத்தில்
தமிழ்ப் புத்தக விற்பனை
மின்னம்பல தளம் ஒன்றின்
ஐந்தாண்டு வரலாறு (1999-2004)


ந. சசிரேகா
மேலாளர், காந்தளகம் - சென்னை

தமிழ்நூல்.காம் - 5 ஆண்டுகள்
1. பின்னணி:
கணிப்பொறி ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குச் செய்திகளைப் பரிமாறும் முயற்சியில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவியலாளர் முதன் முதலாக வெற்றிபெற்றனர்.
அன்று தொடங்கிய பணி விரிந்து வளர்ந்தது. உலகளாவிய அளவில் கணிப் பொறிகளிடையே செய்திகளைப் பரிமாறும் வகையில் இணைக்கும் வலைப் பின்னல் எழுந்தது. வளர்ச்சிக்கு வாய்ப்பான வகையிலேயே அவ்வலைப் பின்னல் இணையமாகியுள்ளது.
மனித சமூகத்திற்குக் கிடைத்துள்ள மாபெரும் கொடையே இணையம். தகவல் பரிமாற்றத்திற்கும் விரைந்த தொடர்பிற்கும் சிறந்த தளமேடையே இணையம்.
உலகின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, மற்றொரு மூலையில் கிடைக்கும் தகவல்களைப் பெறலாம்; நிகழும் நிகழ்ச்சிகளை அறியலாம்; உற்பத்தியாகும் பொருள்களை வாங் கலாம்; இணையத்தின் இத்தகைய வலிமைகளை இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
பன்முக ஆற்றல்வாய்ந்த இணையம், தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பயன் தரவேண்டும் என எண்ணினோம்; முயற்சியில் ஈடுபட்டோம்; விளைவு தமிழ்நூல்.காம் (tamilnool.com) இணையதளம்.
25 ஆண்டுகளாகத் தமிழ்ப் புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனையில் காந் தளகம் ஈடுபட்டு வருகிறது; தமிழ் நூல்.காம் மூலம் 1998ஆம் ஆண்டு மார்கழி நடுப்பகுதியில் இணையத் துள் காந்தளகம் தன் காலடியைப் பதித்தது.
2. நோக்கம்:
ஏறத்தாழ 5,000 புதிய தமிழ்த் தலைப்புகளை உலகெங்கும் உள்ள 2,000க்கும் அதிகமான தமிழ்ப் பதிப்பாளர்கள் ஓராண்டில் வெளியிடு கின்றனர். அத்துடன் ஏறத்தாழ 1,500 தமிழ்த் தலைப்புகள் ஒவ்வோர் ஆண்டும் மறுபதிப்பாகின்றன. ஏறத் தாழ 36,000 தமிழ்த் தலைப்புகள் எப்பொழுதும் விற்பனைக்காகப் பதிப்பாளரிடம் இருக்கும்.
விற்பனைக்குள்ள தமிழ் நூல்கள் அனைத்தும், ஒரே கூரையின் கீழ், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் களுக்குக் கிடைக்க வேண்டும் என் பதே தமிழ்நூல்.காம்இன் தலையாய நோக்கம்.
பதிப்பாளரின் விற்பனைப் பட்டியல் களைத் திரட்டினோம். விற்பனைக் குள்ள 12,000 தலைப்புகளைத் தரவுத் தளத்துள் அமைத்தோம். 1999 பொங்கல் நாளன்று இணையதளத்தில் இவற்றை உலவ விட்டோம்.
ஐந்து ஆண்டுகளின் பின், இப்பொ ழுது, 36,000க்கும் அதிகமான தலைப் புகளை, 82 பாடவகைகளாகப் பட்டிய லிட்டுத் தளத்தில் அமைத்துள்ளோம். இணையத்துள் உலாவி, இத்தனை எண்ணிக்கையுள்ள தலைப்புகளைத் தேடித் தெரிந்து வாங்கக் கூடிய, மிகப் பெரிய தமிழ்நூல் அங்காடி தமிழ் நூல்.காம் ஒன்றுதான். இத்துடன் நின்றுவிடவில்லை, வளர்ந்து வருகி றோம்.
3. வரலாறு - இயக்கம்
36,000 தலைப்புகளைத் திரட்டுவது எளிதான பணியல்ல. உலகெங்கும் உள்ள 2,000க்கும் அதிகமான தமிழ்ப் பதிப்பாளர்களின் முகவரிகளைத் திரட்டினோம். அவர்களுக்கு எமது பணியை விளக்கிக் கடிதம் எழுதி னோம். அவர்களின் விலைப்பட்டி யல்களைப் பெற்றோம்.
தலைப்பு வாரியாக, பாடவகை வாரி யாக, ஆசிரியர் வாரியாக, பதிப்பாளர் வாரியாக, பதிப்பு ஆண்டு வாரியாக, அகரவரிசையாக்கக் கூடிய மென் பொருளைத் தேடி வாங்கினோம்.
புத்தகத்தின் பெயர், ஆசிரியர், பக்கங் கள், பதிப்பு ஆண்டு, விலை, பதிப்பா ளர் பெயர், முகவரி, பாட வகை ஆகிய தரவுகளைக் கணிப் பொறியுள் இட் டோம். இதற்காக ஈராண்டுகள் கடுமை யாக உழைத்தோம்.
தலைப்புகளைப் பாடவகையாக, அதற்குள் ஆசிரியர் வாரியாக, அகர வரிசையாக்கி இணையத்தில் வெளி யிட்டோம்.
வாரந்தோறும், நாள்தோறும் வெளி யாகும் புதிய தமிழ்ப் புத்தகங்களின் விவரங்களை தமிழ்நூல்.காம் தரவுத் தளத்தில் சேர்த்தோம்; அடிக்கடி அதைப் புதுப்பித்து வந்தோம். தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம். தமிழகத்திலும் புதுவையிலும் வெளி யாகும் நூல்களுடன், உலகெங்கிலும் வெளியாகும் தமிழ் நூல்களின் விவ ரங்களையும் இத்தளத்தில் சேர்த்து வருகிறோம்.
3.1 பாடவகைத் தேடல்:
முதலில் 40 பாடவகைகளாகத் தலைப் புகளைப் வகுத்திருந்தோம். திருக் குறள் தொடர்பான நூல்கள் இலக் கியப் பிரிவுள் வந்தன. காலப் போக்கில் திருக்குறள் தொடர்பான தலைப்புகளே ஐநூறு வரை சேர்ந்தன. வாடிக்கையாளர்களின் வசதியைக் கருதித் திருக்குறளைத் தனிப் பாடவகையாக்கினோம். பாடவகைப் பட்டியல் இவ்வாறு நீண்டது; யாப்பு, சங்ககாலம், இந்து, இஸ்லாம், கிறித் தவம், சைவம், வைணவம் என விரிந்து, 82 பாடவகைகளானது.
திருக்குறள் தொடர்பான நூல்களைத் தேட விரும்பும் வாடிக்கையாளர், பாடவகைத் தேடல் பகுதியில் உள்ள 82 பாடவகைகளின் பட்டியலில், திருக்குறளைத் தெரிவு செய்து, தேடுக என்னும் குமிழைச் சொடுக் கினால், திருக்குறள் தொடர்பான ஐநூறு வரையான தலைப்புகளின் பட்டியல் வரும்.
அவ்வாறே இந்த 82 பாடவகை களிலும் உள்ள தலைப்புகளின் பட்டியலைத் தனித்தனியாகத் தேடிப் பெறலாம்.
3.2 தட்டச்சுத் தேடல்:
ஆசிரியர் வாரியாகவோ, தலைப்பு வாரியாகவோ நூல்களைத் தேட வாசகர் விரும்புவர்; எனவே இந்த வசதியையும் ஏற்படுத்த எண்ணி னோம். தட்டச்சுத் தேடல் என்ற புதிய பிரிவை அமைத்தோம். தமிழ்த் தட்டச்சு விசைப் பலகை திரையில் தெரியுமாறு வடிவமைத்தோம். இவ் விசைப் பலகையைப் பயன்படுத்தி, எந்த ஒரு நூலின் தலைப்பையோ, எந்த ஒரு ஆசிரியரின் பெயரையோ தமிழிலேயே தட்டச்சுச் செய்து தேடலாம். இவ்விசைப்பலகையை இயக்க உதவும் உதவிப் பெட்டியும் அத்திரையிலேயே தெரியும்.
ஒரு சொல்லையோ, அச்சொல்லின் எழுத்துகள் சிலவற்றையோ, தட்டச்சுச் செய்து, தலைப்பு எனும் குமிழைச் சொடுக்கினால், நூலின் தலைப்பில் எங்கெல்லாம் (பகுதி, இடைநிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல் லின் எழுத்துகள் சில வருகின் றனவோ, அந்தந்த நூல்களின் தலைப் புகள் திரையில் வரும்.
அதே போல, ஆசிரியரின் பெய ரையோ அல்லது பெயரின் எழுத் துகள் சிலவற்றையோ தட்டச்சுச் செய்து, ஆசிரியர் எனும் குமிழைச் சொடுக்கினால், நூலாசிரியரின் பெயரில் எங்கெல்லாம் (பகுதி, இடைநிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல்லின் எழுத்துகள் சில வருகின்றனவோ, அந்தந்த ஆசிரியர் பெயர்கள் திரையில் வரும்.
அதே போல, பாடவகையின் பெய ரையோ அல்லது பெயரின் எழுத்து கள் சிலவற்றையோ தட்டச்சுச் செய்து, பாடவகை எனும் குமிழைச் சொடுக்கி னால், பாடவகையின் பெயரில் எங்கெல்லாம் (பகுதி, இடை நிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல் லின் எழுத்துகள் சில வருகின்ற னவோ, அந்தந்தப் பாடவகைகள் திரையில் வரும்.
ஒரு சொல்லையோ, அச்சொல்லின் எழுத்துகள் சிலவற்றையோ, தட்டச்சுச் செய்து, தேடுக எனும் குமிழைச் சொடுக்கினால், தலைப்பு, ஆசிரியர், பாடவகை ஆகிய மூன்று நீள்பத்தி களிலும் எங்கெல்லாம் (பகுதி, இடை நிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல்லின் எழுத்துகள் சில வருகின்றனவோ, அந்தந்த நூல்களின் தலைப்புகள் திரையில் வரும்.
3.3 ஆசிரியர்-பாடவகை எளிய தேடல்
மிக விரிவான தேடல் வசதியைத் தமிழ்நூல்.காம் இணைய தளத்தில் வழங்கியுள்ளோம். எடுத்துக் காட் டாக, பாடவகைத் தேடல் மூலம் ஒரு பாடவகையின் தலைப்புகளைத் தேடிச் சொடுக்கினால், திரையில் அப் பாடவகைப் பட்டியல் தெரிகிறது. அப்பட்டியலில்,இடம்பெறும் ஆசி ரியர்களுள் எவராவது ஒருவர் எழுதிய அனைத்துத் தலைப்புகளை யும் அறிய விரும்புவோர், அவ்வா சிரியரின் பெயரைச் சொடுக்க வேண்டும். உடனே அந்த ஆசிரியர் எழுதிய நூல்களின் பட்டியல் திரை யில் தெரிகின்றது.
திரையில் தெரிகின்ற பட்டியலில் பல்வேறு பாடவகைகள் தெரிகின்றன. அவற்றுள் ஒரு பாடவகையின் தலைப்புகளை அறிய விரும்புவோர், அப்பாடவகையை அங்கிருந்தே சொடுக்க, அப்பாடவகைக்கான பட்டியல் திரையில் தெரிகிறது.
3.4 கூடைக்குள் சேர்க்கும் வசதி:
தேடலின் விளைவாக, வாடிக்கை யாளர் தமக்குத் தேவையான தலைப் புகளைத் தெரிவு செய்கிறார். அவ் வாறு தேடித் தெரிந்த தலைப்புகளின் பட்டியலை எளிதில் உருவாக்க, கூடைக்குள் சேர்க்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளோம்.
வாடிக்கையாளர் தமக்குத் தேவை யான தலைப்புகளை ஒவ்வொன்றா கக் கூடைக்குள் சேர்த்துக் கொள்ளலாம். தேடிக்கொண்டிருக் கையிலோ, தேடித் தெரிவு செய்து முடிந்ததுமோ, கூடையைச் சரி பார்க்க எனும் குமிழைச் சொடுக்கிக் கூடைக்குள் செல்லலாம். வேண்டா தன நீக்கலாம்; படிகளின் எண்ணிக் கையைக் குறைக்கலாம், அதிகரிக் கலாம்.
திருத்தங்கள் முடிந்ததும், தொடர்ந் தும் தேடலாம், தலைப்புகளைத் தெரிவு செய்யலாம், கூடைக்குள் சேர்க்கலாம். புத்தகத் தேவைகள் இப்போதைக்கு நிறைவானது என்ற தும், கூடையைச் சரி பார்க்க எனும் குமிழைச் சொடுக்கிக் கூடைக்குள் சென்று, வலியுறுத்துக என்னும் குமி ழைச் சொடுக்கி உறுதி செய்யலாம்.
தெரிவு செய்த தலைப்புகளும், அவற் றின் விலைகளின் கூட்டுத் தொகை யும் திரையில் தெரியும். பட்டியலை மின்னஞ்சல் இணைப்பாக எமக்கு அனுப்பலாம்.
அப்பட்டியலில் உள்ள நூல்கள் இருப்பில் உளவா? அதே விலையில் கிடைக்கின்றனவா? என்பதை உசாவித் தெளிவோம். இருப்பில் உள்ள தலைப்புகளுக்கு உரிய விலைகளின் கூட்டுத் தொகையை யும், வானூர்தி வழியாகவோ, கடல் வழியாகவோ, அஞ்சலாகவோ, பொதியாகவோ அனுப்பும் செலவை யும் சேர்த்து வாடிக்கையாளருக்குத் தெரிவிப்போம். வாடிக்கையாளரிட மிருந்து பணத்தைப் பெற்றதும், அவ ரது ஆணைக்கமைய உரிய முகவரிக்கு நூல்களை அனுப்புவோம்; அவர் நூல்களைப் பெற்றுக்கொண்டதைக் காலப்போக்கில் உறுதி செய்து கொள்வோம்.
3.5 கடன் அட்டை வசதி வழங்குவதிலுள்ள சிக்கல்:
கடன் அட்டை மூலம் பணம் செலுத் தும் வசதியை வாடிக்கையாளர் விரும்புகின்றனர். சிறப்பாக, வெளி நாடுகளில் உள்ளோர் பலர் அத்தகைய பழக்கங்களைக் கொண்டவராதலின் கடன் அட்டை மூலம் வாங்கும் வசதி இல்லையெனில் சோர்வடைகின்றனர்.
எனினும், பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்ட சில வெளிநாட்ட வர், கடன் அட்டை மூலம் பணம் செலுத்த விரும்பவில்லை எனச் சொல்வதுமுண்டு.
கடன் அட்டை வசதியை அறிமுகம் செய்ய முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், விற்பனைக்குரிய புத்தகங்களின் இருப்புத் தொடர்பான நடைமுறைச் சிக்கலே.
36,000க்கும் அதிகமான தமிழ்த் தலைப்புகளின் நாளாந்த இருப்பு நிலையைக் கண்காணிப்பது நடை முறையில் சாத்தியமில்லை. பதிப்பக விலைப் பட்டியல்களின் அடிப்படை யில், தலைப்புகளின் இருப்பையோ விலையையோ சொல்லிவிட இய லாது.
விலைப்பட்டியலில் உள்ள ஒரு தலைப்பு, விற்றுத் தீர்ந்திருக்கலாம், அத்தலைப்பின் விலை உயர்ந்திருக் கலாம். இருப்பிலும் விலையிலும் உள்ள மாற்றங்களைப் தமிழ்ப் பதிப் பகங்கள் உடனுக்குடன் வெளியிடு வது மிகக் மிகக் குறைவு.
இதனால் ஒவ்வொரு ஆணைப்பட் டியலில் உள்ள தலைப்புகளின் இருப் பையும் விலையையும் உசாவி, கூறு விலையை வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டியதே மெய்நிலை.
உசாவிய பின், கூறுவிலையை அனுப் புகிறோம்; பணம் வந்து சேர்கிறது; புத்தகங்களை வாங்கப் பதிப்பகங் களுக்குப் போகிறோம்; சில தலைப் புகள் இருப்பில் இல்லை அல்லது அவற்றின் விலையை அதிகரித்து விட்டோம் எனப் பதிப்பாளர் கூறும் நிலை தவிர்க்க முடியாதது.
தவிர்க்க முடியாத இந்த இருப்பு/விலைச் சூழ்நிலை ஏற்பட்டால், கடன் அட்டை மூலம் முற்பணமாகக் கூறு விலையைப் பெற்றிருந்தால், வாடிக் கையாளருக்கு என்ன பதில் சொல்ல முடியும்? பணம் பெற்ற பின், அவர் கேட்ட நூல் இல்லை என்று சொல்வது முறையா? வாடிக்கையாளரிடம் நம்ப கத்தன்மை போய்விடுமே!
புகழ் பெற்ற, இருப்பில் எப்பொழு தும் இருக்கின்ற, ஒருசில தலைப்பு களை மட்டும் தமிழ்நூல்.காம்இல் தொகுத்திருந்தால் கடன் அட்டை வசதியை அமைத்திருக்கலாம். ஆனால் நாமோ 1,500க்கும் அதிக மான பதிப்பகங்கள் வெளியிட்ட, 36,000க்கும் அதிக எண்ணிக்கை யிலான தமிழ்த் தலைப்புகளைத் தொகுத்து, 82க்கும் அதிகமான பாட வகைகளாக வகுத்து, வாசகருக்குப் பரந்த தேடல் வசதியை ஏற்படுத்தி, முழுமையான தமிழ்ப் புத்தகக் கடை யை வாடிக்கையாளரின் வீட்டுக்குள் அமைத்திருக்கிறோமே!
தமிழ்ப் பதிப்புத் தொழில் உலகம் வளர்ந்து, இருப்பு நிலையையும், விலை மாற்றங்களை அவ்வப்பொ ழுது அறிவிக்கும் காலம் வருமா? தமிழ்ப் பதிப்புத் தொழில் உலகத்துக்கு மட்டும் உரிய சிக்கல் இஃதன்று. அனைத்து மொழிப் புத்தக வணிகத் துக்கும் பொதுவான இச்சிக்கலுக்குத் தீர்வு வேண்டும்.
இச்சிக்கல்களைக் கடந்து, கடன் அட்டை வசதியை அமைக்கும் வாய்ப் புகளை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இதற்கு விடை காண்போம்.
3.6 தமிழ்க் குறுந்தட்டுகள் - தமிழியல் நூல்கள்
தமிழில் வெளியாகியுள்ள குறுந்தட்டு களின் பட்டியலும் தமிழியல் (தமிழ் சார்ந்த ஆங்கில - tamilology) நூல் களின் பட்டியலும் தமிழ்நூல்.காம் இல் உள்ளன.
3.7 பதிப்புத் தொழில் உலகம்
தமிழகத்தின் பதிப்புத் தொழில் வளர்ச்சியை நோக்கிய திங்களிதழ், பதிப்புத் தொழில் உலகம். தமிழ் நூல்களின் மதிப்புரைகள் இதில் இடம்பெறுகின்றன. திங்கள் தோறும் வெளியாகும் இவ்விதழின் எணினி வடிவம் தமிழ்நூல்.காம்இல் உள்ளது.
3.8 தமிழ் அச்சுமுகம்
தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தமிழ் மொழியை இணைப்பதே தமிழரின் வளர்ச்சிக்கு வழி. அவ் வளர்ச்சியின் விளைவே தமிழ்நூல்.காம்.
தமிழ் நூல் தலைப்புகளை, உரோம வரிவடிவத்திற்கு ஒலிபெயர்த்துக் கணிப்பொறியுள் இடுவது ஒரு வழி; தமிழ் வரிவடிவத்திலேயே உள்ளிடுவது மற்ற வழி. தமிழருக்குத் தமிழிலேயே தகவல்களைக் கொடுக்க வேண்டு மெனக் கருதித் தளத்தின் உள்ளடக் கத்தை தமிழ் வரிவடிவங்களில் அமைத்தோம்.
கணிப்பொறியின் பொதுத் தளம் உரோம வரிவடிவம். தமிழ் வரிவடி வங்கள் அனைத்துக் கணிப்பொறிக ளிலும் கிடைக்காத காலச் சூழ்நிலை. அதுமட்டுமன்றி, தமிழ் அச்சுமுகங் கள் பல இருப்பினும் அவை ஒன்றுக் கொன்று பொருத்தமின்றி உருவாகி யுள்ளன.
தமிழ்த் தலைப்புகளைத் தரவுத்தளத் தில் தொகுக்கவும் அகரவரிசையாக்க வும் நாம் பயன்படுத்திய SHREE803 என்ற தமிழ் அச்சுமுகம் வாடிக்கை யாளரின் கணிப்பொறியில் இருந் தால், தமிழ்நூல்.காம் தளத்தைத் திரை யில் அவர் பார்த்து வாசிக்க முடியும்.
எனவே SHREE803 அச்சுமுகத்தை தனது கணிப்பொறியிலுள்ள அச்சு முகங்களின் தொகுப்புடன் வாடிக்கை யாளர் இணைக்க வேண்டும்.
இதற்கு, Download Tamil Font என்ற குமிழைச் சொடுக்கி வாடிக்கையாள ரின் கணிப்பொறியிலுள்ள அச்சுமுகத் தொகுப்புக்குள் SHREE803 அச்சு முகத்தை இறக்க வேண்டும்.
அச்சுமுகத்தை இறக்காமலேயே திரையில் தமிழ் வரிவடிவங்களைப் பார்க்கக் கூடிய இயங்கு அச்சுமுக (Dynamic Font) வசதி தமிழுக்கு வந்த பின்பும், தமிழ்நூல்.காம்இல் தட்டச் சுத் தேடல் வசதிக்காக, வாடிக்கையா ளரின் கணிப்பொறிக்குள் SHREE803 அச்சுமுகத்தை இறக்கவேண்டியுள்ளது.
4. பாராட்டுகள்
பதிப்பாளர், வாசகர், ஊடகத்தார் தொடர்ந்து எமது முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.
4.1 வாடிக்கையாளர் பாராட்டு
உலகெங்கும், 40க்கும் அதிகமான நாடுகளிலுள்ள எமது வாடிக்கையா ளர் தமிழ்நூல்.காம் வழியாகத் தமிழ் நூல்களை வாங்கி எம்மை ஊக்குவிக் கின்றனர். இவர்கள் வழங்கும் ஆலோ சனைகளும் தொடர்ச்சியான ஆதர வுமே தமிழ்நூல்.காம்இன் வெற்றிக் கும் வளர்ச்சிக்கும் வழி வகுத்து வரு கின்றன.
தமிழ் மீது மாறாத காதல் கொண்டு, தமிழைக் கற்க உதவும் நூல்களையும் அகராதிகளையும் வாங்கும் எமது இனிய யப்பானிய வாடிக்கையாளர் திரு. ஹராய் கியோடாகா, அவற்றைத் தனது நண்பர்களுக்கும் பரிசளித்து வருவதை இங்கு நினைவுகூருகிறோம்.
எமது மின்னம்பல தளத்தையும் எமது சேவையையும் பாராட்டி வாடிக்கை யாளர்கள் அனுப்பிய மின்னஞ்சல் களில் சில வருமாறு:
Subject: More details please
From: madhu@xtra.co.nz
Date: 11.09.99
Hi !!!
Your web site is great. I am interested in Tamil Dramas especially small ones and comedy..Is there any book available? If so could you please let me know the name ? What is the minimum amount of order we could place and how? How much will be the postel & package charges? How to send the money ? I live in New Zealand. I hope you will let me know the details .
With regards
Tulsi Gopal
Subject: appreciation
From: tgkg@hotmail.com
Date:11.09.99
its really a wonderful effort.
govt can sponsor this site.
tgkg@hotmail.com
gocha
Subject: Hi
From: Nambibala@aol.com
Date: 07.11.99
Hi There,
I browsed thro your website, it’s really a nice and great effort; really appreciatable job. Thanks for bringing the Tamil world more connected.
Nambi.
Subject: Re: Problem Encountered.- Thank you!
From: karthi@javanet.com
Date: 08.11.99
Hi,
I am very gald that you responded to my mail immediately. Today I tried saving your attachment and it worked. I was very much impressed with the site. It's excellent. Do continue your service. It's really useful for Thamizh lovers like me around the world. I appreciate your service to Thamizh Thaai. What am I suppose to do to get a book from your site ? How do I pay ? What is the mode of currency ? What do I do to get the book that is not present in your List ?
Regds,
Shanbagam.
Subject: Very good effort.
From: mani@netcore.co.in
Date: 8.11.99
Sir,
I read about your site in a Tamil magazine and browsed today. I really got amazed. It is going to be killer application for the future. Keep up the good work.
K R Mani

Subject: Enquiry on purchase of books from abroad
From: kumaran123@hotmail.com
Date: 12.11.99
Dear Sir,
I visited your web site www.tamilnool.com; really it's a wonderful web site. I want to know whether people like me, who are all staying in abroad, can order for the books or not? I am presently staying in Amsterdam, can you deliver books to my place. If so, please let me know about the cost and payment modes.
Thanks,
Kumaran
Subject: Great stuff
From: arams@hotmail.com
Date: 18.11.99
Hello,
I have just visited your site and found it very interesting. I would like to congratulate each one behind this new idea. I am sure you would be continuously working to improve this site further. I would like to give few comments that might help, though I am sure you would have taken care of these already.
Thanks and regards,
Ramaswamy
Subject: A very good site
From: nagas_baan@chequemail.com
Date: 20.11.99
Hello Sir.,
Just now visited your site. It is a very good one. A neatly organised shelf of Tamil books paarppathu pol oru feeling. This is a great service you are doing to the Tamil people - especially the Tamilians outside Tamil Nadu. Many thanks for that. I need the following book -’Oru Kathavum Konjcham KaLLip paalum’ written by Thamarai.

4.2 ஊடகங்களின் பாராட்டு
இணையத்தில் ஆங்கிலப் புத்தகங் களை விற்கும் பெரிய தளமான அமே சன்.காம் (amazon.com) தளத்திற்கு ஈடாகத் தமிழ்ப் புத்தகங்களை விற் கும் சிறந்த தளம் தமிழ்நூல்.காம் என்று குமுதம் வார இதழ் 1999இல் எம்மை அடையாளம் காட்டியது.
ஜெயா தொலைக்காட்சியில் தமிழ் நூல்.காம் இணைய தளத்தின் பல் வேறு கூறுகளை 2000ஆம் ஆண்டில் விளக்கிக் காட்டினர்.
2002ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்நூல்.காம்இன் செயல்முறை களை விளக்கி உரையாற்றினோம்.
5. தட்டுவோர்-திறப்போர்
இத்தளம் இருப்பதைத் தெரிந்து தளத்தின் முகப்புப் பக்கத்தை மட்டும் பார்த்து, பின்னர் உள்ளே புகலாம் என உலவச் செல்வோரே தளத்தைத் தட்டுவோர்.
6. பார்வையிடும் பக்கங்கள்
தட்டித் திறந்தோர் 94 பக்கங்களைப் பார்க்க முடியும். இவற்றுள் எந்தப் பக்கத்தை அதிகமாகப் பார்க்கின்றனர் என்ற விவரம் வருமாறு.
தமிழியல் (Tamilology) பக்கங்களையே வெளிநாட்டினர் அதிகமாகப் பார்க் கின்றனர். தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு தொடர்பான நூல்களை அன்னியச் சூழலில் ஆங்கில, பிரெஞ்சு மொழிகள் வழியாகக் கற்க, இந்நூல்கள் உதவுகின்றன. அன்னியச் சூழலில் பிறந்து வளரும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பண்பாட் டையும் கலாசாரத்தையும் தெரிவிக்க விழையும் தமிழரின் தவிப்பையே இது காட்டுகிறது.
7. விற்பனை
ஒரு வணிகத் தளத்தின் வெற்றிக்கு விற்பனையே அளவுகோல். ஐந்து ஆண்டுகளில் இத்தளத்தின் விற்பனை அளவுகளை வரைடமாகக் காட்டியுள் ளோம்.
8. இனி...
தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்த தமிழ்ப் புத்தகச் சந்தைப்படுத்தல், நீண்ட நெடும் பயணம். இப்பயணத் தைத் தமிழ்நூல்.காம் சிறப்புறத் துவக் கியுள்ளது. நோக்கம் பெரிது; பாதை நெடிது; முயற்சி கடிது. தொழில்நுட்ப, சமூக வளர்ச்சிக்கேற்ப எச்சூழலிலும் அறிவு வெளிச்சத்தை உலகெங்கும் பரவச் செய்யும் தெளிவான நோக்கத் தைக் கொண்டுள்ளோம்.
தமிழ் நூல்களுடன் துவங்கி, தமிழி யல் நூல்களை அறிமுகப்படுத்தி, தமிழ்க் குறுந்தட்டுகளைச் சந்தைப் படுத்தி, தமிழ்ப் பதிப்புத் தொழிலின் பரப்பைச் செய்தியாக்கி, தொழில் நுட்பத்தின் அடுத்த பயனைத் தமிழு டன் இணைத்து உலகிற்கு வழங்க ஆவலுடன் உள்ளோம்.
நடைமுறைச் சிக்கல்களுக்கு விடை கண்டு தமிழ்நூல்.காம்ஐ வலுப்படுத் தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
n உலாவுனரின் கணிப்பொறிக் குள் தமிழ் அச்சுமுகத்தை இறக்கா மலே தமிழ்த் தளப் பக்கங்களைப் பார்க்க, தமிழில் தட்டச்சுச் செய்துத் தேட, சீர்க்குறித் (Unicode) தொழில் நுட்பம் அறிமுகமாகியுள்ளது. இத் தொழில்நுட்பத்தைத் தமிழ்நூல்.காம் தளத்துடன் இணைக்கும் காலம் வரும்.
n இணையப் பூக்கள் (Web Blogs) மலர்ந்து வருகின்றன. இப்பூக்களு டன் இணைந்து தமிழ்நூல்.காம் மணக்கும்.
n கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதியை வழங்க முயற் சிக்கிறோம்.
n பல்வேறு பதிப்பாளரிடம் உள்ள தமிழ் நூல்களின் இருப்பு நிலையை யும் விலை அளவையைும் தெளி வாக்கி எமது பணியை விரிவாக்கு வோம்.
n தலைப்புகளை மட்டும் தராமல் நூல்களின் ஓரளவு உள்ளடக்கத்தை யும் தமிழ்நூல்.காம் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு நூலுக்கும் கொடுக் கக் கூடிய வாய்ப்பு எதிர்காலத்தில் வரும்.
n தமிழ் நூல்களின் வாசகர் பரப்பை விரிக்கும் நோக்குடன், மின் புத்தகங்களைத் தமிழ்நூல்.காம் தளத் துள் வெளியிடும் வாய்ப்பு வரும். அவ்வாறு வெளிவரும் புத்தகங்க ளின் ஒரு சில பக்கங்களையோ, நூல் முழுவதையுமோ வாடிக்கையாளர் ஒருவர் தன் கணினிக்குள் இறக்கலாம், அச்சுப் படியாக்கலாம்.
n கணிப்பொறி உள்ள அனைவ ரும் தமிழ் நூல்களைத் தேட, வாங்க தமிழ்நூல்.காம்க்கு வர ஏதுவாக விளம்பர வியூகம் வகுப்போம்.
இதுவும் பிறவுமான சிக்கல்கள் தீரும்; தமிழ் நூல் விற்பனை பெருகும்; தமிழ்நூல்.காம் வளரும். ஒளிமய மான எதிர்காலம் எம் உள்ளத்தில் தெரிகிறது.
9. நன்றி
தமிழ்நூல்.காம் மின்னம்பல தளத்தை அமைக்கக் கருதியவர், காந்தளகம் நிறுவனர், மறவன்புலவு க. சச்சிதானந் தன். தொடக்கப் பணிகளை அவரே நேரில் கவனித்தார். தகவல்களைத் திரட்டி, தொழில்நுட்ப உள்ளீடு களைத் தேடித் தொகுத்து, வல்லுநரை அடையாளம் கண்டு, மின்னம் பலத்தை வெள்ளோட்டம் விட்டார்.
விசயதீபன், வெங்கடேசர் இருவரும் மென்பொருள் தளத்தைத் தேவைக் கேற்ப மேம்படுத்தினர். முகப்பு வடி வமைப்பில் மணிமாறனும், தகவல் தள மேம்பாட்டில் பானுரேகாவும் தேவைக்கேற்ப உதவி வந்தனர்.
வாடிக்கையாளரின் புத்தகத் தேவை களைப் பதிப்பாளரிடம் பெற்று, பாது காப்பான பொதிகளாக்கி, வாடிக்கை யாளருக்கு அனுப்பி, இத்தளத்தின் வளர்ச்சிக்காகத் தொடக்கமுதல் இன்று வரை, தளராது அயராது உழைப்பவர் ஆ. சசிகுமார்.
நாம் கேட்கும் நூல்களை உடனுக் குடன் தந்து பதிப்பாளர் உதவினர்.
யாவருக்கும் ஆதரவாக உள்ளுரமாக இருந்தவர் வாடிக்கையாளரே.

உலகப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம்

உலகப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம் ஏன் பங்குபற்ற வேண்டும்?
மறவன்புலவு க. சச்சிதானந்தன்


ஐரோப்பாவில் தமிழர் தொகை
(தோராயக் கணிப்பு)
நாடு மக்கள் தொகை தமிழர்
1 அண்டொரா 90,000 25
2 அயர்லாந்து 3,841,000 1,000
3 அல்பேனியா 3,145,000 100
4 ஆஸ்திரியா 8,075,000 500
5 இத்தாலி 57,503,000 5,000
6 உக்ரெயின் 49,112,000 1,000
7 எஸ்ரோனியா 1,377,000 500
8 ஐஸ்லாந்து 281,000 25
9 கிரேக்கம் 10,623,000 5,000
10 குரோசியா 4,655,000 100
11 சானல் தீவுகள் (பிரி.) 145,000 250
12 சான் மறினோ 27,000 25
13 சுலோவாக்கியா 5,403,000 100
14 சுலோவேனியா 1,985,000 100
15 சுவிற்சர்லாந்து 7,170,000 60,000
16 சுவீடன் 8,833,000 10,000
17 செக் 10,260,000 100
18 டென்மார்க் 5,333,000 15,000
19 நெதர்லாந்து 15,930,000 12,000
20 நோர்வே 4,488,000 10,000
21 பரோ தீவுகள் (டென்.) 47,000 .....
22 பல்கேரியா 7,867,000 200
23 பின்லாந்து 5,178,000 3,000
24 பிரான்ஸ் 59,453,000 200,000
25 பிரிட்டன் 59,542,000 250,000
26 பெலாருஸ் 10,147,000 25
27 பெல்ஜியம் 10,264,000 9,000
28 பொஸ்னியா
-ஹெர்சகோவினா 4,067,000 100
29 போர்த்துக்கல் 10,033,000 500
30 போலந்து 38,577,000 500
31 மசிடோனியா 2,044,000 100
32 மான் தீவு (பிரி.) 78,000 25
33 மால்ரா 392,000 500
34 மொனாகோ 34,000 25
35 மொல்டோவா 4,285,000 25
36 யூகோஸ்லாவியா 10,552,000 500
37 ரஷ்யா 114,664,000 10,000
38 ரோமானியா 22,388,000 200
39 லக்செம்போர்க் 442,000 1,000
40 லற்வியா 2,406,000 500
41 லிதுவானியா 3,689,000 200
42 லைச்ரென்ஸ்ரெயின் 33,000 100
43 வத்திக்கான் நகர் 1,000 25
44 ஸ்பெயின் 39,921,000 1,500
45 ஹங்கேரி 9,917,000 25
46 ஜிப்றால்ரர் (பிரி.) 27,000 100
47 ஜெர்மனி 82,007,000 30,000

மொத்தம் 696,331,000 628,975

முன்னிரவு, 9 மணி, வீட்டில் பணியில் இருக்கிறேன்.
வாயிற் கதவு மணி அடிக்கிறது. திறக்கிறேன். வியக்கிறேன். மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன்!
வாங்க, வாங்க, என்ன இந்த நேரத்தில், சொல்லாமல் கொள்ளாமல்? நான் கேட்டேன்.
குறையாக நினைக்கவேண்டாம். ஐரோப்பா போகிறேன், புத்தகக் காட்சி நடத்தப் போகிறேன். அதுதான் உங்களைப் பார்க்க வந்தேன். ரவியின் விடை இது.
நான் என்ன செய்யவேண்டும்?
உங்களுக்குத் தெரிந்தவர்களை அறிமுகம் செய்யவேண்டும்.
அவ்வளவுதானே? கட்டாயம் செய்கிறேன்.
யோசித்தேன். உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விவரத்தை மறுமுனைக்குக் கூறினேன்.
அவரை அங்கேயே இருக்கச் சொல்லுங்கள் எனப் பாரிசில் இருந்து பதில் வந்தது.
ஐந்து மணித்துளிகளில் தொலைபேசி மணி அடித்தது; எடுத்தேன்.
ரவி தமிழ்வாணன் இருக்கிறாரா?
ரவியிடம் தொலைபேசியைக் கொடுத்தேன்.
ஏறத்தாழ அரை மணி நேரப் பேட்டி. ரவியின் பயணம் பற்றிய அத்தனை செய்திகளையும் ரவியிடம் கேட்டனர்.
அன்றிரவே ஐரோப்பா முழுவதும் ரவியின் பேட்டி ஒலிபரப்பாகியது. அடுத்தநாளும், மறுபடி பல முறையும், அப்பேட்டியை ஐரோப்பா முழுவதும் தமிழர் கேட்கக் கூடியதாக ஒலிபரப்பினர்.
தன் பயணத்துக்கு வானொலி மூலம் கட்டியம் கூறினார் ரவி.
நண்பர்கள் பலரின் முகவரிகளைக் கொடுத்தேன்.
தமிழ்ப் பதிப்பாளருக்குத் தலைமை நிலையில் இருப்பவர், கழகம் இரா. முத்துக்குமாரசாமி. மறுநாள் அவரிடம் பேசினேன். ரவியின் ஐரோப்பியப் பயணம் வெற்றிகரமாக அமையத் தமிழ்ப் பதிப்பாளர் வாழ்த்திப் பாராட்ட நிகழ்வு ஒன்றை நடத்தக் கேட்டேன். அவர் உடன்பட்டார்.
சென்னை காஸ்மோபாலிற்றன் கிளப்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. தமிழ்ப் பதிப்பாளர் பலர் கூடி வாழ்த்தி அனுப்பினோம். ரவியின் ஐரோப்பியப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
கடந்த ஆறு ஆண்டுகளாக ரவி, ஐரோப்பாவில் நடத்திவரும் சாதனை யைத் தமிழ்ப் பதிப்புலகம் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை.
ரவி காட்சி நடத்தாத நாடுகள் ஐரோப்பாவில் இல்லை என்னும் அளவுக்கு, அங்குள்ள தமிழ் எழுத்தாள ரையும் தமிழ் வாசகரையும் ஒன்றிணைத்து ரவி செயற்படுகிறார்; தமிழ் நூல்களை ஐரோப்பியச் சந்தையில் நன்றாக விற்பனை செய்கிறார்.
மணிமேகலைப் பிரசுரத்தின் படையெடுப்புக்கு முன்னரே, ஐரோப்பியச் சந்தைக்குத் தமிழ் நூல்களைக் காந்தளகமும், திருமகள் நிலையமும், பிற சிறு ஏற்றுமதியாளரும் அனுப்பிக் கொண்டிருந்தனர். இலண்டனையும் பாரிசையும் மட்டுமே பெருமளவு நம்பியிருந்த இவ்வேற்றுமதியாளர் காணமுடியாத சந்தைகளை ரவி கண்டார்.
ஐரோப்பியக் கண்டத்தில் 47 நாடுகள் உள. (விவரம் படத்தில்) 70 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
ஒவ்வொரு 1,000 ஐரோப்பியருள்ளும் ஒருவர் தமிழர். 47 நாடுகளிலும் தோராயமாக ஏழு இலட்சம் தமிழர் வாழ்கின்றனர். (விவரம் அடுத்த பக்கப் பட்டியலில் காண்க)
தெற்காசியாவின் வேறு எந்த மொழி வழி இனமும் இத்தகைய மக்கள் தொகை அடர்த்தி விகிதாசாரத்தில் ஐரோப்பாவில் வாழ்வதில்லை என்பதை உளத்திருத்துக.
ஜெர்மனியில் 300 தமிழ்ப் பள்ளிகள், பிரான்சில் 130 தமிழ்ப் பள்ளிகள், பிரித்தானியாவில் 70 தமிழ்ப் பள்ளிகள், சுவிற்சர்லாந்தில் 50 தமிழ்ப் பள்ளிகள், யாவும் அவ்வவ் அரசுகள் அல்லது உள்ளூராட்சி அவைகளின் மானியத் தொகை பெற்று முறைப்படி நடைபெறுகின்றன.
சைவத் தமிழ்க் கோயில்கள் 100க்கு மேல் ஐரோப்பாவெங்கும் உள; கிறித்தவத் தமிழ்த் தேவாலயங்கள் 50க்கு மேல் உள.
தமிழ்ச் சங்கங்களும், தமிழர் கலாசார அமைப்புகளும் பெரு நகரங்கள் பலவற்றில் உள.
பாரிசில் இருந்து தமிழ் வார இதழ்கள் நான்கும், இலண்டனில் இருந்து இலவயத் தமிழ் வார இதழ்கள் ஆறும் வெளியாகின்றன.
மின்னிதழ்கள் பலவற்றையும், மின் உரையாடு தளங்கள் பலவற்றையும் தமிழ் ஆர்வலர்கள் நடத்திவருவதுடன், மின்னம்பலத் தமிழைப் பாரிய முறையில் வளர்த்தும் வருகிறார்கள். மின்புத்தகங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தோர் ஐரோப்பியத் தமிழரே.
பிரான்சிலும் பிரித்தானியாவிலுமாகத் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் ஆறும்,தமிழ் வானொலி பரப்புகள் 20க்கும் அதிகமானதாகவும், 24 மணிச் சேவையாக நடைபெறுகின்றன.
பாரிசில் முழுமையான தமிழ்ப் புத்தகக் கடைகள் இரண்டும், இலண்டனில் பகுதி நேரப் புத்தகக் கடைகள் நான்கும், சுவிற்சர்லாந்திலும் ஜெர்மனியிலும் ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் தமிழர் நடத்தும் தமிழிய மளிகைக் கடைகள் பலவற்றில் தமிழ்ப் புத்தகத் தட்டுகளும் இயங்குகின்றன.
பெருவணிகர்களாகத் தமிழர் பலர் ஐரோப்பாவெங்கணும் உளர். அங்குள்ள தமிழரின் பொருள் வாங்கும் பண வலு, தமிழ்ப் புத்தகங்களை வாங்குவதற்கு மிகையே.
இந்தத் தமிழ்ச் சூழ்நிலையே, மணிமேகலை ரவியின் ஐரோப்பியப் புத்தக விற்பனைப் படையெடுப்புக்கான அடித்தளம். அங்கே ரவி என்ன செய்கிறார் என்பதை விமர்சிக்கும் தமிழர் பலர், அங்கும் உளர், இங்கும் உளர்.
தமிழ் நூல்களுக்காக ஏங்கும் வாசகர், தமிழ் நூல்களைப் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர், இவர்களின் தமிழ்ப் புத்தக விடாயைத் தீர்க்க ரவி உதவுகிறார். வேறு யாரும் அந்த விடாய்க்கு உரிய முறையில் நீரூற்றவில்லை. அதனால் ரவி தளரா வெற்றியைக் கண்டுவருகிறார். வேறு யாராவது ரவியை விடச் சிறப்பாகச் செய்ய முடியுமானால், அத்தகையவரே வெற்றி பெறுவர்.
ரவியின் முயற்சிகள், தரமான எழுத்துகளா? தரமான பதிப்புகளா? இவை நல்ல வினாக்கள்.
தமிழ்ப் புத்தகச் சந்தை ஐரோப்பாவில் இருக்கிறது. இதை ரவியின் முயற்சிகள் உறுதி செய்துள. ரவியின் முன்னோடிப் பணியே, அந்தச் சந்தையின் அகல நீளங்களைப் புத்தக விற்பனையாளருக்கு உணர்த்தியுள்ளது.
அந்தச் சந்தை திறந்த சந்தை என்பதால், ரவியின் முயற்சிகள் மேலுள்ள நல்ல வினாக்களை எழுப்பி உள.
அச்சந்தை தரத்தைத் தேடுகிறது, புதிய முகங்களைத் தேடுகிறது.
இந்தச் சூழ்நிலையை உளத்திருத்தி, பிராங்பற்றில் அடுத்த ஆண்டு அக்டோபரில் நடக்கவுள்ள உலகப் புத்தகக் காட்சியை நோக்க வேண்டும்.
இந்திய அரசின் சிறப்பு அரங்கை, தேசியப் புத்தக அறநிலை, பிராங்பற்றில் அமைக்க உள்ளதால், அந்த அரங்கில் தமிழ்ப் பதிப்புலகம் முழுமையாகப் பங்கு பெற வேண்டும்.
இக்காட்சி பற்றிய அறிமுகக் கட்டுரையைக் கடந்த இதழில் பார்க்க.
ஐரோப்பாவின் இலையுதிர் காலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம் கலந்து கொள்ளும் என்ற செய்தியை அங்குள்ள தமிழருக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் போதும், தேன் பொந்தை நாடுவோராக, ஐரோப்பாவிலுள்ள தமிழர் பலர், பிராங்பற்றிற்கு வருவர்.
புத்ததக் காட்சியில் கூடுவர், புத்தகங்களை வாங்குவர், புதிய அறிமுகங்களை மேற்கொள்வர்.
வாசகர் - எழுத்தாளர் சந்திப்புகள், எழுத்தாளர் - பதிப்பாளர் சந்திப்புகள், பதிப்பாளர் - விற்பனையாளர் சந்திப்புகள், எனத் தமிழ்ச் சூழல் களைகட்டும்.
தமிழ் எழுத்துகளை ஜெர்மன் மொழிக்குப் பெயர்க்க, பதிப்பிக்க, ஜெர்மனியில் உள்ள சிறு பதிப்பாளருக்கு, இக்காட்சியை ஒட்டி, இந்திய அரசு மானியம் கொடுக்க உள்ளது. தமிழக எழுத்தாளர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டாமா?
சிறு பதிப்பாளராகத் தமிழரும் ஜெர்மனியில் உள்ளதைப் புத்தக காட்சியில் கண்டு, சந்தித்து, தமிழ் எழுத்துகளை ஜெர்மன் மொழியில் வெளியிட முயலவேண்டாமா?
ஐரோப்பா எங்கணும் உள்ள தமிழ் ஊடகங்கள், பிராங்பற்றில் தமிழ்ப் புத்தகக் காட்சி நடக்குமெனின், முழுமையான ஆதரவைத் தந்து, ஐரோப்பியத் தமிழர் அனைவருக்கும் விவரங்களை முன்கூட்டியே தெரிவிப்பதுடன், காட்சி நாள்களில் நாள்தொறும் செய்திகள், நேர்முகப் பேட்டிகள், புத்தகங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுவார்கள் அல்லவா?
மின்னஞ்சல்களும் மின் உரையாடல்களும் மேலதிக நேரமாகப் பணிபுரிந்து, தமிழருக்கு இந்தச் செய்திகளைப் பரிமாற மாட்டார்களா?
நல்ல தமிழ்த் தலைப்புகளை விற்பனைக்காகத் தேடி, தமிழகம் வர முடியாததால், புழங்கும் எழுத்தாளர்களையும் தலைப்புகளையுமே மீண்டும் மீண்டும் விற்கவேண்டியுளதே எனப் புழுங்கும் நூற்றுக்கணக்கான ஐரோப்பியத் தமிழிய மளிகைக் கடை வணிகருக்கு, பிராங்பற்றில் காட்சியாகும் பன்முகத் தமிழ்த் தலைப்புகள், வாழ்விக்க வரும் அரும் பொருளாகாதா?

யாழ்ப்பாண அகராதியின் மீள்கண்டுபிடிப்பு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
2,500 ஆண்டுகளின் முன்னர் உரிச்சொற் பனுவல் (தொல்காப்பியம்), 1200 ஆண்டுகளின் முன்னர் திவாகரம், 1000 ஆண்டுகளின் முன்னர் பிங்கல முனிவரின் பிங்கலம், பின்னர் மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு, கி.பி. 1594இல் இராவணாத்திரியரின் அகராதி நிகண்டு யாவும் நூற்பாவில் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் பொருள் சொல்லித் தொகுத்துத் தரும் முயற்சியில் நாம் அறியக் கூடியதாக உள்ள நூல்கள். இவை தவிரப் பல நூல்கள் நிகண்டு என்ற பெயரில் (உரிச்சொல் நிகண்டு, கயாதரம், பாரதி தீபம், ஆசிரிய நிகண்டு, கைலாச நிகண்டு, பல்பொருட் சூடாமணி, தமிழ் உரிச்சொற் பனுவல், அகராதி நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, நாநார்த்த தீபிகை) நம்மிடையே உள்ளன; மேலும் பல இருந்திருக்க வேண்டும், தேடவேண்டும். தமிழில் அகராதி தோன்றி வளர்ந்த விரிவான வரலாற்றை, எஸ். வையாபுரிப்பிள்ளை மற்றும் மு. சண்முகம்பிள்ளை ஆகியோர் எழுதியுள்ளனர். தொடர்ந்தும் பல ஆராய்ச்சியாளரின் தேடலில் இத்தேடல் பணி விரிவடைந்து வருகிறது.
அகர வரிசையில், உரைநடையில் கி.பி. 1732இல் வீரமாமுனிவர், சதுரகராதியை இயற்றினாராயினும் முழுமையாய் அச்சில் வந்தது கி. பி. 1824இலாம்.
பெயரகராதி எனப் பெயரிட்டு, உடுவில் சந்திரசேகர பண்டிதரும் சரவணமுத்துப்பிள்ளையும் கி. பி. 1842இல் யாழ்ப்பாணத்து மானிப்பாய் அமெரிக்க மிசன் அச்சகத்தில் அச்சிட்டு வெளிவந்த அகராதியே மிகப் பெரிய அகராதி. 58,500 சொற்கள் இந்த அகராதியில் உள. இருபாலை சேனாதிராச முதலியார் உள்ளிட்ட அக்காலத்து யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர் பலரின் ஆலோசனையைப் பெற்றே இந்த அகராதியை உருவாக்கினர். இந்த அகராதித் தயாரிப்புக்கான முழு முயற்சியையும் அமெரிக்க மிசனறியினரே மேற்கொண்டனர்.
சில ஆண்டுகளின் பின்னர் தமிழ்நாட்டில், களத்தூர் வேதகிரி முதலியார் 6,500 சொற்களைப் பின்னிணைப்பாகத் தொகுத்து இந்த அகராதியை வெளியிட்டார். காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு (கி. பி. 1893), மேலைப்புலோலி நா. கதிரவேற்பிள்ளை (கி.பி. 1901) ஆகியோர் பின்னர் இந்த அகராதியை விரித்துப் பேரகராதிகள் செய்து வெளியிட்டனர். இன்று வரை வெளியாகும் தமிழ் - தமிழ் அகராதிகளுக்கு, உடுவில் சந்திரசேகர பண்டிதரும் சரவணமுத்துப்பிள்ளையும் கி. பி. 1842இல் வெளியிட்ட, மானிப்பாய் அகராதி என்றும் யாழ்ப்பாண அகராதி என்றும் பின்னர் அழைக்கப்பெற்ற அகராதியே அடித்தளம்.
கி. பி. 1842இல் முதல் பதிப்புக் கண்ட, மானிப்பாய் அகராதி என்றும் யாழ்ப்பாண அகராதி என்றும் அழைக்கப்பெற்ற இந்த அகராதியைத் தமிழ் மண் பதிப்பகத்தினர், யாழ்ப்பாண அகராதி என்ற பெயரில், கி. பி. 2006இல் சென்னையில் வெளியிட்டுள்ளனர்.
19ஆம் நூற்றாண்டு வரை, தமிழ் மண்ணில் நிலவிய வட மொழி வல்லாண்மையை இந்த அகராதி சுட்டும். யாழ்ப்பாணத்துச் சொற்கள் மட்டும் கொண்ட அகராதி எனக் கொள்ளற்க. எனினும் ஈழத்து வட்டார வழக்குகளைத் தேடுவோருக்கு இந்த அகராதி சுரங்கம்.
பழைய பதிப்பின் பக்கங்களை நகலெடுத்து வெளியிடும் பிறரின் வழமையைத் தமிழ் மண் பதிப்பகத்தார் பின்பற்றாது, புதிதாக அச்சுக்கோப்புச் செய்து, பிழையறப் பதிப்பித்துள்ளனர். தமிழக, ஈழ நிலவரைப் படங்களை அட்டையில் அமைத்து, நல்ல தாளில், பெரிய எழுத்துகளில், தடித்த மட்டையுடனும், உறுதியான கட்டுடனும் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். கவிஞர் காசி ஆனந்தன், பேரா. ப. இரா. சுப்பிரமணியன், பேரா. இரா. இளங்குமரனார், தமிழ் ஆர்வலர் பூ. பத்மசீலன், பேரா. கா. சிவத்தம்பி, பேரா. எஸ். ஜெபநேசன், பேரா. எஸ். சிவலிங்கராஜா ஆகியோர் அணிந்துரை வழங்கியுளர்.
இந்தப் பதிப்பில் 500 படிகளைத் தன் முயற்சியால் இலங்கை முழுவதும் சந்தைப்படுத்தும் பாரிய பொறுப்பைக் கொழும்பு, சேமமடு பொத்தகசாலையினர் ஏற்றுக்கொண்டமை, சென்னைத் தமிழ் மண் பதிப்பகத்தாருக்கு மாபெரும் உந்துதலாகும். முதற்பதிப்பின் பழைய படிகளைத் தேடிக் கண்டுபிடித்து, பிழையற அச்சேற்றித் தரமான பதிப்பாகக் கொணர்ந்த பதிப்புச் செம்மல் கோ. இளவழகன், அதைவிடக் கடுமையான பணியான விற்பனையைத் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்ட தமிழ் ஆர்வலர் பூ. பத்மசீலன் ஆகியோருக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெறும் வெளியீட்டு விழாவிலேயே 500 படிகளையும் விற்பனையாக்கி அக்கடமைப்பாட்டை வெளிக்காட்டத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நல்வாய்ப்பு இவ்வெளியீட்டுவிழா.

திருமுறைகளை அச்சிட்டுப் பதிப்பித்தல்

சிவத்திருத்தொண்டர், கயிலைமணி
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

திருமுறைகளை அச்சிட்டுப் பதிப்பித்தால் மக்களை அவை சென்றடையும். சைவ சமயத்தவர், சைவரல்லாதவர் யாவரும் மக்களே. யாவருக்கும் திருமுறைகள் கிடைக்கவேண்டும்.
திருமுறைகளை வழிபடுவோருக்கு மட்டுமே, அவை சென்றடைய வேண்டும் என்ற கருத்தைப் பழமைவாதிகள் முன்வைப்பர். முற்காலத்தில் அவை பொருத்தமாக இருந்திருக்கும். இக்காலத்துக்கு அக்கருத்து ஒவ்வாது.
திருமுறைகள் மனித சமுதாயத்தின் சொத்து. அவற்றை எவரும் படிக்கலாம், புரிந்துகொள்ளலாம், பின்பற்றலாம், பேறெய்தலாம்.
இந்தப் புதிய சூழ்நிலையில், திருமுறைகளை அச்சிட்டுப் பதிப்பிப்பவருக்குப் பாரிய பொறுப்பு உண்டு. எந்த எழுத்துக் கூட்டலில், எந்தப் பாவடிவில், எந்த ஒழுங்கில் அவற்றை ஆக்கியோர் நமக்கு விட்டுச் சென்றார்களோ அந்த எழுத்துக் கூட்டலில், பாவடிவில், ஒழுங்கில் அச்சிட்டுப் பதிப்பிக்கவேண்டிய பாரிய பொறுப்பு உண்டு.
இதில் கருத்து முரணுக்குகோ, விவாதத்துக்கோ இடமேயில்லை. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற பழமொழியுடன் அச்சு வேலையா? நச்சு வேலையா என்ற புதுமொழியையும் இணைத்துப் பார்க்க.
திருமுறைகள் தமிழ் மொழியில் தோன்றின. தமிழோ என்றும் இளமை மாறாதுள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு மேலாக, தொல்காப்பியர் கூறிய அதே 30 எழுத்துகளுடன் இன்றும் தொடர்கின்ற செழுமை உடையது.
பன்னிரு திருமுறைகளும் இந்த 30 எழுத்துகளால் ஆனவைய திருமுறைகள் தோன்றிய காலத்துச் சொற்களுள் 95% இன்றும் அதே பொருளுடன் புழக்கத்திலுள்ளன.
எழுத்து, சொல், பொருள் யாவும் மாறாதிருக்கும் பொழுது, அச்சிடுவோருக்கும் பதிப்பிப்போருக்கும் அவற்றில் மாற்றங்கள் கொண்டுவர உரித்தில்லை.
ஆக்கியோருக்கும் படிப்போருக்கும் இடையே புகுந்து, பேதங்களை, திரிபுகளை, மாற்றங்களைக் கொண்டுவரக் கொஞ்சமேனும் எவருக்கும் உரித்தில்லை. அவ்வாறு மாற்றுவோர் தமிழுக்கு மாறானவராவர்.
சைவ சமயத்துக்குத் திருமுறைகள் அரிய செல்வக் களஞ்சியங்களாக உள்ளன. அதைவிட மேலாகத் தமிழ் மொழிக்கு அவை, சொற் பேழைகளாக, கருத்து வளமூட்டுவனவாக, வரலாற்றுப் பதிவுகளாக, பண்பாட்டுப் பின்புலங்களாக உள.
திருஞானசம்பந்தர் முதலாக, சேக்கிழார் ஈறாக அவற்றை ஆக்கியோர், தமிழுக்கும் சைவத்துக்கும் தந்தோர், அடியாருக்காக அருளியோர் எந்த நிலையில் தந்தனரோ அவையே பன்னிரு திருமுறைகள். சுந்தரர் வழிகாட்ட, நம்பியாண்டார் நம்பி தொகுக்க, சேக்கிழார் நிறைவு செய்து, ஏறத்தாழ 600 ஆண்டு கால அரும் பெரும் மனித முயற்சியே பன்னிரு திருமுறைகள்.
எந்த நிலையில், முறையில், ஒழுங்கில் இந்தத் தலைமுறையில் அவற்றைப் பெற்றோமோ, அவற்றை அப்படியே அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் செய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு.
ஏடும் எழுத்தாணியும் அகல, மர அச்சு, ஈய அச்சு, தட்டச்சு, கணினி, எணினி எனத் தொழினுட்பம் வளர்வதால் அவ்வத் தொழினுட்பத்துக்கேற்ப அவற்றை உள்ளவாறே உள்ளிடுதலே பொருந்தும்.
கடந்த பல நூற்றாண்டுகளுக்கூடாக, எறத்தாழ 27 மொழிகளின் தாக்கத்தைத் தாங்கிய தமிழ், இன்றும் இளமை குன்றாதிருக்கின்றது, தனித்தன்மை மாறாதிருக்கின்றது. பன்னிருதிருமுறைளை யாத்தோர் காலத்திற்குப் பின் வடமொழி, அரபு, பாரசீகம், உருது, மராட்டியம், தெலுங்கு, கன்னடம், போர்த்துக்கீசம், ஒல்லாந்தம், பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழியாளரின் ஆதிக்கங்கள் வந்து போயின. பன்னிரு திருமுறைகள் அப்படியே இருக்கின்றன.
அவற்றை மந்திரங்கள் என்றும், வழிபாட்டுக்குரியன என்றும் நம்முன்னோர் போற்றிப் பாதுகாத்தமையின் காரணம், இந்தத் தாக்கங்களால் கேவலர் அவற்றைச் சிதைத்துவிடக் கூடாதென்பதற்காகவே.
ஆங்கிலேய மேலாதிக்கம் ஒழிந்த பின்பும் அடிமை மோகமும் ஆங்கில மாயையும் மயக்கமும் கொண்ட கேவலர் பலர் இருப்பதால், பன்னிரு திருமுறைகள் சிதைந்து வெளிவருகின்றன.
கம்பராமயைணம் போன்றன வெள்ளிப் பாடல்கள் நிரவி நிற்க, பன்னிரு திருமுறைகள் பாடபேதங்கள் பலவின்றியே பதிப்பாகி வருவது தமிழரும் சைவரும் பெற்ற பேறு.
இக்காலத்தில் பன்னிரு திருமுறைகளைப் பதிப்பிப்போர், அவை மக்களைச் சென்றடைய வேண்டுமென்ற காரணத்தை உளத்திருத்தி, பதம் பிரித்தும், நிறுத்தக் குறிகளை இடையிட்டும், பாவடிவைச் சிதைத்தும், அச்சளவுகளுக்கு ஏற்றவாறு ஒழுங்கமைத்தும், முதல் ஏழு திருமுறைகளையும் நம்பியாண்டார் நம்பியின் ஒழுங்கமைவுக்குப் புறம்பாகவும் பிற சிதைவுகளுடனும் வெளியிடுகின்றனர்.
அத்கையோரின் நோக்கங்கள் உயர்ந்தன. திருமுறைகள் பரவவேண்டும், மக்களின் வாழ்வுடன் கலந்து, வாழ்க்கை நிலை உயர்ந்து பிறவிப் பேறெய்த வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கு அவர்களுட் சிலருக்கு உண்டு. நம்முன்னோர் விட்டுச் சென்றதை நாமனைவரும் பகிர்ந்து பயனடைவோம் என இயந்திரகதியில் பதிப்பிப்போரே பலர். திருமுறைகளைப் பதிப்பித்து வெளியிட்டுப் பொருளீட்டமுயல்வோர் சிலர்.
பன்னிரு திருமுறைப் பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்து பெயர்த்து எடுத்து, திரட்டுகளாக, தொகுப்புகளாக, மாலைகளாக வெளியிடுவோரே எண்ணிக்கையில் அதிகமானோர். தமக்கு விருப்பமான, உகந்த, தெரிந்து பயின்று பழகிய பாடல்களை இவர்கள் அச்சிட்டுப் பதிப்பிக்கின்றனர்.
தமிழ் வரிவடிவங்களைக் கற்கமுடியாத, ஆனால் தமிழ்ப பனுவல்களையே வழிபாட்டுக்குரியதாதக்க விழையும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழரும், தமிழரல்லாதோரும், இத்தகையோருக்காகத் தமிழ் வழங்கும் நாடுகளில் உள்ளோரும் திருமுறைப் பாடல்களின் ஒலிபெயர்ப்புகளை அச்சிட்டு வெளியிட்டு வருகின்றனர். கன்னடம், தெலுங்கு, மலையாளம், சிங்களம், இந்தி, வடமொழி, ஆங்கில மொழிகளில் ஒலிபெயர்ப்புகள் வெளிவந்தவாறு இருக்கின்றன.
இவர்களைவரின் நோக்கங்களில் குறைகாண முடியாதெனினும், இவர்களின் பதிப்புகள் மூலங்களைச் சிதைத்து வருகின்றன. கால்ப்போக்கில் எது மூலம்? எது திரிபு? எனக் காணவியலாதவாறு மயக்கமேற்படுவது தவிர்க்கமுடியாது.
மூலங்களைச் சிதைக்காமலே, திருமுறைகளைப் பரப்பலாம், மக்களிடம் கொண்டு செல்லலாம் என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகள் உள. இரண்டை மட்டும் இங்கு தருகிறேன்.
திருப்பராய்த்துறை தபோவனம் சுவாமி சித்பவானந்தர் அச்சிட்டுப் பதிப்பித்த திருவாசகம் மூலமும் உரையும் நூலைப் பார்க்க. முதலில் மூலப் பாடல் உள்ளது உள்ளவாறே அச்சாகியுளது, பின்னர் அதே பாட்டைச் சுவாமி சிவானந்தர் புரிந்து கொண்டவாறு பதம் பிரித்து அச்சாகியுளது. அதையடுத்து அதற்கு அவர் எழுதிய உரை உள்ளது.
உள்ளம் கவர் கள்வன் எனத் தொடங்கி, கி. வா. ஜகந்நாதன் தொடராகப் பல நூல்களை எழுதினார். திருமுறைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதே அவரின் நோக்கம். முதலில் உரைநடையில் விளகம் சொல்லி, இறுதியில் பாடல் இது எனக் காட்டுகையில் மூலம் சிதையாப் பாடல்கள் சிலவற்றைத் தந்து சென்றுள்ளார்.
நிறுத்தக் குறிகளை மூலத்துள் நுழைப்பது முறையல்ல. பதம்பிரிக்கையில் அடைப்புக் குறிக்குள் சந்திகளை நுழைப்பதும் முறையல்ல. சீர் ஒழுங்கைக் குலைத்து அச்சிடுவது, பாவடிவை மாற்றும்.
நம்பியாண்டார் நம்பி பண்முறையிலேயே தொகுத்தார். வேறு ஒழுங்கை அமைப்பவர் அப்பதிப்பைத் திருமுறைப் பதிப்பு என அழைப்பதும் முறையல்ல. திரு-முறை என முறை வகுத்த ஒன்றுக்கு வேறு முறை வகுக்கையில் வேறு தலைப்பிடுவதே பொருத்தம்.
திருமுறைகளை மேற்கோள் காட்டுகையில் மூலம் கெடாது, உரிய சுட்டலுடன் காட்டவேண்டிய பொறுப்புண்டு.
பன்னிரு திருமுறைகள் நம் கைகளில் தவழ்வதும், நம் நா ஒலிப்பதும், நாம் அச்சிட்டுப் பதிப்பிக்க வாய்ப்பாக இருப்பதும் நம் தவம். அவற்றைச் சிதைத்துப் படிப்பதோ, அச்சிட்டுப் பதிப்பிப்தோ நமக்கு அவம்.

இடையீடற்ற வரலாறு ஈழத்தில் தமிழருக்கு உண்டு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இசக்கியம்மன், இசக்கிமுத்து என்ற பெயர்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வழக்கில் உள. இயக்கியின் மரூஉ இசக்கி.
நாகராசா, நாகலிங்கம் என்ற பெயர்களுக்குத் தமிழரிடையே குறைவில்லை. நாகர்கோயில், நாகப்பட்டினம் யாவும் தமிழரூர்கள்.
இயக்கரும் நாகரும் முற்காலத்தில் தமிழகம், மற்றும் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்தனர்.
இயக்கச்சி, இயக்கர்கல், இயக்கர்களப்பு, இயக்கரை, இயக்கரூர், இயக்கவாவி போன்ற ஊர்ப் பெயர்கள் பல, இலங்கை முழுவதும் இன்றும் வழக்கில் உள்ளன.
நாகதேவன்துறை, நாகபடுவான், நாகமடு, நாகமலை, நாகர்கோயில், நாகர்முனை, நாகன்தாழ்வு யாவும் இலங்கையின் ஊர்ப்பெயர்களுட் சில.
இயக்கர்கள் கூடி, முருகனுக்குரிய தைப்பூசத் திருவிழாவைக் கார்த்திகைக் கமத்தில் (கதிர்காமத்தில்) கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளன்று, புத்தர் இலங்கைக்கு முதன் முதலில் வருகிறார். இயக்கரிடையே தமது கொள்கைகளைப் புத்தர் போதிக்கிறார். இயக்கருட் பலர் புத்தராகின்றனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில், நாக மன்னர்களின் ஆட்சிக் காலம். யாழ்ப்பாணக் குடாநாட்டில், மாமன் மகோதர மன்னனுக்கும் மருகன் குலோதர இளவரசனுக்கும் பகை வளர, இருவரும் போருக்குத் தயாராகின்றனர். அப்பொழுது இரண்டாவது முறையாக இலங்கைக்குப் புத்தர் வருகிறார். நாக அரச குடும்பத்திடையே போர் வராது காக்கிறார்; தன் கொள்கைகளைப் போதிக்கிறார். நாகர்களுட் பலர் புத்தராகின்றனர்.
அக்காலத்தில் தென்மேற்கே, கல்யாணியில் அரசமைத்து ஆட்சிசெய்த நாக அரசன் மணியக்கிகன்.
நாகர், இயக்கர் பற்றிய இச் செய்திகள் மகாவமிசத்தில் உள. யாழ்ப்பாணத்துக்குப் புத்தர் வந்த செய்தி மணிமேகலையிலும் உண்டு.
நாகர்களும் இயக்கர்களும் தமிழர். இலங்கையில் புத்த சமயிகளாக மாறியோர் முதலில் இயக்கர், பின்னர் நாகர். மகாவமிசம் கூறும் விசயனும் தோழர்களும் இலங்கைக்கு வரும்பொழுது அங்கே தமிழர் பரந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். சிவ, முருக வழிபாட்டினராயிருந்தனர். அரசு அமைத்து வாழ்ந்தனர். நாகரிகமடைந்த மக்களாயிருந்தனர்.
இலங்கையின் ஆதிகுடிகள் தமிழரே. எல்லாளன் போன்ற பல தமிழ் அரசர்கள் இலங்கை முழுவதையும் ஆட்சிசெய்த வரலாறுகள் உண்டு.
இலங்கையின் வன்னிப் பகுதியில், அடங்காப் பற்றில் ஆட்சிசெய்த தமிழ் அரசன் பண்டார வன்னியன், ஆங்கிலேயரிடம் 1811ஆம் ஆண்டு போரில் தோற்கும் வரை, தொடர்ச்சியாகத் தமிழ் அரசரின் ஆட்சி இலங்கையில் நடைபெற்று வந்தது.
அந்த நீண்ட வரலாற்றை அறிந்து கொள்ள விழைவோர் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையின் யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற இந்த நூலையும் கட்டாயம் படிக்க வேண்டும்.
இந்த நூலை எழுதிய காலத்தில் போதிய வரலாற்றுச் சான்றுகளோ அதை ஒட்டிய ஆய்வுகளோ இருக்கவில்லை; தொல்பொருள் சான்றுகளைப் பெறமுடியவில்லை. செவிவழிச் செய்திகள், பரம்பரைக் கதைகள், கைலாய மாலை போன்ற சில இலக்கியச் சான்றுகள் இந்த நூலாக்கத்துக்குத் துணைபுரிந்துள.
ஆதலாற்றான், கால ஒழுங்குகளை நூலாசிரியரால் துல்லியமாகக் கடைப்பிடிக்க முடியவில்லை. மகாவமிசத்துக்குத் தமிழ்மொழிபெயர்ப்பு இந்நூலாசிரியர் காலத்தில் இருந்திருப்பின் அதனுடன் ஒப்புநோக்கி அவர் பார்த்திருப்பர். சங்க இலக்கியங்களையும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளையும், பின்வந்த இலக்கியங்களையும் நூலாசிரியர் தெரிந்து வைத்திருக்கிறார்.
அதனால்போலும் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியதாக இன்று கூறப்படும் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கூறியுள்ளார்.
வரலாற்றை எப்பொழுதும் எவரும் முழுமையாக எழுத முயலமுடியாது. காலத்துக்குக் காலம் கிடைக்கும் புதிய சான்றுகள், முன்னர் எழுதியவற்றை முழுமையாக மாற்றிவிடக்கூடியன. அதற்காக, வரலாற்றை எழுத முயலாமல் இருக்கவும் முடியாது. அந்தக் கண்ணோட்டமே, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையின் அரிய முயற்சி. தனக்குத் தெரிந்தவற்றைத் தான் செவியுற்றதை, தான் கண்டதை ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை நமக்காக விட்டுச் சென்றுள்ளார்.
இக்காலத்தில், போரசிரியர்கள் இந்திரபாலா, பத்மநாதன், சிற்றம்பலம் ஆகியோர் ஈழத் தமிழர் வரலாறு பற்றி எழுதிய நூல்கள், இக்காலம் வரை கிடைத்த சான்றுகளின் அடிப்படையிலானவை. அவர்களின் நூல்களில் கற்பனைச் செய்திகள் சான்றாகமாட்டா. ஆனால் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையோ கற்பனைச் செய்திகளைச் சான்றாக அள்ளித் தெளித்துள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை கூறிய பல செய்திகள் கற்பனைகளல்ல, நிகழ்ந்தவைகளே என வருங்கால ஆய்வாளர் நிறுவக் கூடும்.
ஆதிகுடிகளான இயக்கர், நாகர் முதலாக, கடந்த நூற்றாண்டின் பொன்னம்பலம் இராமநாதன் ஈறாக, ஈழத் தமிழருக்கு இடையீடற்ற தொடர்ச்சியான வரலாறு இருந்ததை ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை வலியுறுத்துகிறார். 1619இல் நல்லூரில் போர்த்துக்கேயரிடமும், 1811இல் வன்னியில் ஆங்கிலேயரிடமும் போரில் தமிழீழ அரசாட்சியை இழந்த நிகழ்ச்சிகளை விரிவாக விவரிப்பதன் மூலம், மீண்டும் தமிழீழ அரசை அமைக்குமாறு ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை தன் சந்ததியினருக்கு ஆணையிட்டுள்ள முயற்சியாகவே இந்த நூலைக் கருதலாம்.
அனைவரும் படிக்கவேண்டிய நூல்.
அறிவுக் களஞ்சியங்களாக, வரலாற்றுப் பெட்டகங்களாக, தமிழ்ப் பொழில்களாக விளங்கும் அரிய நூல்கள் பலவற்றைச் சிறப்பாக, தரமாகப் பதிப்பித்து வேகமாக விற்பனையாக்குவதில் பெரு வெற்றி கண்டுவரும் உரத்தநாடு இளவழகனார், தம் தமிழ்மண் பதிப்பகத்தின் மூலம் இந்த நூலைப் பதிப்பித்து ஈழத்தமிழருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
சென்னை, மார்கழி 2036.

Tuesday, October 25, 2005

ஈழத்துப் புலமை தமிழ் உலகில் புகழ்பூக்க......

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்நாட்டுக்கு வந்து, தன் கவிதைகளை அரங்கேற்றினார். சங்கப் பாடல்களுள் ஏழு (அக.-3 குறு.-3நற்.-1) இடங்களில் அவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர் காலத்திலும் பின்பும் வாழ்ந்து மறைந்த பல நூற்றுக்கணக்கான ஈழத்துப் படைப்பாளிகளின் சிறந்த ஆக்கங்கள் தமிழ் உலகுக்குத் தெரியுமாறு வெளி வரவில்லை.
யாழ்ப்பாண அரசன் அரசகேசரியின் மொழிபெயர்ப்பு நூல் இரகுவ மிசம். யாழ்ப்பாணம் சின்னத்தம்பிப் புலவர் திருமறைக் காட்டின் அருள்மிகு வேதாரணிய ஈஸ்வரர் கோயிலைப் பாடிய மறைசை அந்தாதி சிறந்த பிரபந்த இலக்கியம். எனினும் தமிழ் உலகில் இதுபோன்ற இலக்கியங்கள் பற்றி அறிந்தவர்களும், பேசுபவர்களும் ஈழத் தமிழர்களாகவே இருப்பர்.
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் தமிழ் நாட்டில் பதிப்பு முயற்சிகளை மேற்கொண்டார். முப்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களை வெளியிட்டார். சென்னையை நடுவணாகக் கொண்டு இவரது பதிப்பு முயற்சிகள் அமைந்ததால், தமிழ் நாடு, மலேசியா, சிங்கப்பூர், பிஜி, மொரிசியசு, தென்ஆபிரிக்க அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். நாவலரின் நாவன்மையையும், உரைநடை வளத்தையும், பதிப்பு வன்மையையும் போற்றாத உலகத் தமிழர்கள் குறைவு.
இவரையொட்டியே சி. வை. தாமோதரம்பிள்ளையும் சென்னையைப் பதிப்புக் களமாகக் கொண்டார்.
வைமன் கதிரவேற்பிள்ளையின் அகாராதிகளை மதுரைச் தமிழ்ச் சங்கம் வெளியிட்டதால் தமிழ் உலகம் அவரைத் தெரிந்துக் கொண்டது.
காசிவாசி செந்திநாத ஐயர், தென்புலோலியூர் கதிரவேற்பிள்ளை போன்றோர்கள் தமிழகத்தில் தம் பதிப்புகளை வெளியிட்டதால் நன்றாக அறியப்பட்டனர்.
சுவாமி ஞானப்பிரகாசரையோ, கல்லடி வேலுப்பிள்ளையையோ, மட்டுவில் ம. க. வேற்பிள்ளையையோ, ம. வே. திருஞானசம்பந்தரையோ, வித்துவான் கணேசையரையோ, பண்டிதமணி கணபதிப்பிள்ளையையோ, சு. சிவபாதசுந்தரனாரையோ தமிழ்உலகு முழுமையாக அறியவில்லை. புலமையிலும், திறமையிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லா இவர்களைப் போன்ற பலரைத் தமிழ் உலகு அறியாததற்குக் காரணம் இவர்களின் பதிப்புகள் ஈழத்துக்குள் முடங்கியதுதான்.
சுவாமி விபுலானந்தரின் தமிழக வாழ்வும், பதிப்பு முயற்சியும், தஞ்சாவூரில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் யாழ் நூல் அரங்கேற்றமும் தமிழுலகின் மிகச் சிறந்த புலமையாளருள் ஒருவராக அவரைக் கணிக்க உதவின. தனிநாயாக அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைச் சென்னையில் நடத்த முன்பே, தமிழக அறிஞர்களுக்குப் புலப்பட்டவர். தமிழ் உலகின் கணிப்பைப் பெற்றவர். அதற்குக் காரணம் தூத்துக்குடி மறை மாவட்டத்தின் பங்குத் தந்தைகளுள் ஒருவராக அவர் இருந்து தமிழ் நாட்டில் தன் புலமையை வெளிக்காட்டியதுதான். அதனால் உலகம் போற்றுமளவு உயர்ந்தார்.
ஈழத்துப் பூதந்தேவனார் முதலாகத் தனிநாயக அடிகள் ஈறாக, ஈழம் உற்பவித்த சிறந்த சிந்தனையாளர்கள், புலமைப் பெட்டகங்கள், திறமைக் கொழுந்துகள் பற்பலருள் மிகச் சிலரையே தமிழுலகு அறிந்தமைக்குக் காரணம், இச்சிலர் தமிழ் நாட்டின் புலமைக் களத்துள் புகுந்து புலப்பட மிதந்தமையே.
தமிழ் நாட்டில் வெளியான நூல்கள் ஈழத்துக்கு வந்து சேரும் அளவுக்கும், விகிதாசாரத்திற்கும் ஏற்ப ஈழத்து வெளியீடுகள் தமிழ் நாட்டிற்குள் வராததும் இதற்குரிய அடிப்படைக் காரணங்களுள் ஒன்று.
தமது தரமான வெளியீடுகளைத் தமிழ் நாட்டுக்கு அனுப்ப முடியவில்லையே! தமிழ் நாட்டுப் புத்தகச் சந்தைக்குள் புக முடியவில்லையே! என்ற ஆதங்கம் ஈழத் தமிழ்ப் புலமையாளர்களுக்கு நெடுங் காலமாகவே உண்டு. இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாக 1971-1977 கால ஆட்சியில் கி. லட்சுமண ஐயர் தலைமையில் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, பிரேம்ஜி உள்ளிட்ட முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு, தமிழ் நாட்டில் வெளியாகும் `குப்பை - கூளங்கள்' ஈழத்திற்குள் வருவதற்குத் தடைகளும் கட்டுப்பாடுகளும் அமைக்க விதந்துரைத்தது. அவர்களின் விதந்துரையைக் கொழும்பு அரசு ஏற்று 1971-1977 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தியது.
இதன் பெறுபேறாக ஈழத்துப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஈழத்திலே பெரும் எண்ணிக்கையில் வெளிவந்தன. வீரகேசரியின் மாதமொரு நாவல் திட்டத்தின் கீழும், பிற பதிப்பாளர்களின் திட்டங்களின் கீழும் பல நூல்களை ஈழத்துப் படைப்பாளிகள் இக்காலத்தில் வெளிக் கொணர்ந்தனர். குடத்தில் இட்ட விளக்காகவே இவ்வெளியீடுகள் ஈழத்துள் முடங்கின. எதிர்ப்புச் சிந்தனையின் செயல்வடிவமாகவே இஃது அமைந்தது.
க. கைலாசபதியும், கா. சிவத்தம்பியும், கி. இலட்சுமண ஐயரும், செ. கணேசலிங்கனும் தமிழ் நாட்டில் பதிப்பகங்களை அணூகித் தமது நூல்களை வெளியிட்டு வந்தனர். தமது ஈழத்துச் சக படைப்பாளிகளுக்குத் தமிழ் நாட்டில் பதிப்புக் களம் அமைத்துக் கொடுத்தார்களா என்ற வினா இப்பொழுதும் கேட்கப்படுகிறது. அக்காலத்தில் சென்னை பாரி நிலையம் செல்லப்பன் ஈழத்துப் படைப்பாளிகளை ஊக்குவித்தார். நியுசெஞ்சுரிபுக்ஹவுஸ் முற்போக்கு எழுத்தாளரை மட்டும் ஊக்குவித்தது.
1980இல் காந்தளகம் அமைந்ததும் ஈழத்துநூல்களை இந்தியாவுக்குள் முதல்முதலாக இறக்குமதி செய்தது. இன்றுவரை இறக்குமதி செய்துவருகிறது.1990க்குப் பின் குமரன் பதிப்பகம் (செ. கணேசலிங்கன்), மித்ரா பதிப்பகம் (எஸ். பொன்னுத்துரை) ஆகிய பதிப்பகங்களும் தமிழ் நாட்டில் ஈழப் புலமைப் படைப்பாளிகளுக்கு பதிப்பரங்குகளாகின. 1983க்குப் பின் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளுக்குத் தமிழகத்தின் புகழ் பெற்ற பதிப்பகங்களான நர்மதா, கலைஞன், திருமகள், சிஎல்எஸ், பாரி, கழகம், நியுசெஞ்சுரி, பொதியவெற்பன் போன்றவை ஆதரவு கொடுத்தன.
கடந்த சில ஆண்டுகளாக மணிமேகலை பிரசுரம் புலம் பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களது ஆக்கங்களை வெளியிடுவதற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி ஆண்டொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டு வருகிறது. இத்தகைய முயற்சியை இதுவரை வேறெந்தத் தமிழகப் பதிப்பகமும் மேற் கொள்ளவில்லை.
எனினும் காந்தளகம் தவிர வேறெவரும் ஈழத்திலிருந்து தமிழ் நூல்களைத் தமிழகத்துக்கு இறக்குமதி செய்வதில்லை.
ஈழத்துப் படைப்பாளிகள் தத்தம் இடங்களிலேயே வெளியிடும் நூல்களை தமிழகச் சந்தைக்கும் அனுப்பக்கூடிய வாய்ப்பை 1977 முதல் இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை-இந்திய வணிகக் கொடுக்கல்-வாங்கல் இந்தியாவிற்குச் சாதகமாகவே எப்பொழுதும் இருக்கும். இந்திய ஏற்றுமதி அதிகமாகவும், இலங்கை ஏற்றுமதி குறைவாக இருக்கும்போது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய்ககூடிய புதிய பொருட்கள் எவை என்ற வினா அப்பொழுது கொழும்பில் எழுந்தது?
நானும் தி. ச. வரதராசனும் க. கைலாசபதியும், க. ஜீவகதாசும் மற்றும் சில படைப்பாளர் நண்பர்களும் 1978இல் யாழ்பாணத்தில் ஒருநாள் கூடினோம். தமிழ் நூல்களையும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருளாகக் கருதுமாறு ஒரு தீர்மானம் இயற்றினோம். தமிழர் பொருளாதார இயக்கம் சார்பாக அத்தீர்மானத்தை அப்பொழுது வர்த்தக அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலிக்கு அனுப்பினோம். நாளிதழ்களில் செய்தியாகவும் இத்தீர்மானம் வெளிவந்தது. கொழும்பு அரசுக்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை.
தமிழ் நாட்டில் வெளியாகும் தமிழ் நூல்களை இலங்கையில் இப்பொழுது பெருந்தொகையாக வாங்கத் தொடங்கியுள்ளார்கள். உள்ளூராட்சி அமைப்புகள், மாகாண அவைகள், கொழும்பு அரசின் அமைச்சுகள் நூலகங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. உதவியாகவும் மறுசீரமைப்புத் திட்டங்களின் கீழும் இலங்கைக்கு வெளிநாடுகள் நிதி வழங்குகினறன. உலக வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் நூலக வளர்ச்சிக்குக் கடன்கள் வழங்கி வருகின்றன.
இவ் ஒதுக்கீடுகளில் கணிசமான பகுதியை ஒவ்வொரு நிலையிலும் தமிழ் நூல்களைக் கொள்வனவு செய்யத் தருகிறார்கள். பல நூலகங்கள் முழுமையாக இவ் ஒதுக்கீடுகளைத் தமிழ் நூல்களுக்காகச் செலவு செய்வதில்லை. சில அலுவலகங்களில் ஏனோதானோவெனவும் திட்டமிடாமலும் தமிழ் நூல்களை வாங்குகிறார்கள். ஒரு தலைப்பையே ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து வாங்கும் நிலையும் உண்டு. நூலகங்களுக்கான தமிழ் நூல் கொள்வனவில் அரசு வழங்கும் நிதி ஒதுக்கீடுகள் ஒருங்கிணைந்த முறையில் பயன்படுவதில்லை.
அண்மையில் தமிழ் அமைச்சர் திரு சந்திரசேகரனைச் சந்தித்தேன். பல லட்ச ரூபாய்கள் பெறுமதிக்குத் தமிழ் நூல்கள் கொள்வனவு செய்யவேண்டுமெனவும் தமிழகப் பதிப்பாளர் ஒருவரை நாடலாமா என எண்ணிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். அவரிடம் பின் வரும் செயற் திட்டத்தை எழுதிக் கொடுத்தேன்.
1. கொழும்பு அரசின் பல்வேறு மட்டங்களில் உள்ள தமிழ் நூல் கொள்வனவுக்கான நிதி ஒதுக்கீடுகளைத் திரட்டி தமிழக அரசின் பொது நூலக இயக்குனரிடம் கொடுத்து ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படிகள் வேண்டும் எனக் கூறுதல்.
2. தமிழகத்தில் வெளியாகும் தமிழ் நூல்களை அந்நூல்களில் குறிப்பிட்டுள்ள விற்கும் விலைக்குக் கொளவனவு செய்யாமல், தமிழக அரசின் பொது நூலகத் துறை நிர்ணயித்த விலையான - பதினாறு பக்கப் படிவம் ஒன்றுக்குத் தலா ரூ.2.10பைசா அல்லது ரூ.2.60பைசா என்ற விலை அடிப்படையில் வாங்குதல்.
3. நூல்களைத் தெரிவுசெய்யும் தமிழக அரசின் குழுவில் கொழும்பு அரசின் பிரதிநிதிகள் இருத்தல்.
4. மாற்றாக இலங்கையில் வெளியாகும் ஈழத்தமிழ்ப் படைப்புகள் ஒவ்வொன்றிலும் 850 படிகளைத் தமிழக அரசின் நூலகத் துறை கொள்வனவு செய்தல். இலங்கை அரசு ஆண்டுதோறும் விளம்பரம் செய்து தமிழகத்தைப் போல இலங்கையிலும் விலை நிர்ணயம் செய்து, குழு அமைத்து, தெரிவு செய்து, வாங்கித் தமிழக அரசுக்கு அனுப்புதல்.
6. இந்த இரு தரப்புத் தமிழ் நூல் கொள்வனவு உடன்பாட்டை இலங்கை-இந்திய அரசுகளின் கூட்டுச் செயற்பாடாக உடன்பாடு எழுதுதல்.
7. இதன்காரணமாய் ஒவ்வொரு ஆண்டிலும் தமிழகத்தில் வெளியாகும் புதுப்பதிப்புகள் மட்டுமே நூலகங்களைச் சென்றடையும். குறைந்த விலையில் தமிழக நூல்கள் இலங்கை நூலகங்களுக்குக் கிடைக்கும். ஈழத்துப் படைப்பாளிகள் தமிழகப் பதிப்பகங்களை நம்பியிராமல் ஈழத்திலேயே வெளியிட அந்நூல்கள் தமிழக நூலகங்களையும் சென்றடையும். தமிழக நூலகங்களில் ஈழவெளியீடுகள் இருந்தால் அந்நூல்களுக்குத் தமிழகப் புத்தகச் சந்தையிலும் `கிராக்கி' ஏற்படும். தமிழகப் பதிப்பகங்கள் ஈழத்து வெளியீடுகளை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும். ஈழத்துப் பதிப்புத்துறை புதுமலர்ச்சியுடன் ஒரு தொழிலாகவே வளரும். மாதம் ஒரு நாவல், மாதம் ஒரு அறிவியல் நூல் என்ற திட்டங்கள் ஈழத்தில் மீண்டும் மலரும். தரமான பதிப்புகளை ஈழத்தவரால் தமிழுலகுக்குத் தரமுடியும் என்ற நிலை ஏற்படும்.
ஈழத் தமிழரின் புலமைத் திறமையும், அறிவு வளமும் தமிழ் உலகெங்கும் பயன்பட வேண்டுமெனிலோ அறியப்பட வேண்டுமெனிலோ தமிழக நூலகங்களிலும் புத்தகச் சந்தையிலும் ஈழத்தில் வெளி வரும் தமிழ் நூல்கள் இடம் பெற வேண்டும். இதற்கான முதற்படியாக இலங்கை-இந்தியத் தமிழ் நூல் கொள்வனவு உடன்பாடு அமையவேண்டும். ஈழத் தமிழ்ப் புலமைக் கொழுந்துகள் தமிழ் உலகெங்கும் அறியப்பட இது நேர்வழி.