Sunday, July 09, 2006

காவியாவின் எழுத்துத் திருட்டு

காவியா விசுவநாதன் - தமிழ்ப் பெண். மூளை அறுவை மருத்துவர் விசுவநாதன் இராசாராமன் மற்றும் மருத்துவர் மேரி சுந்தரம் ஆகியோ ரின் மகள்.
சென்னையில் வாழ்ந்த பெற்றோ ருக்குச் சென்னையில் பிறந்தவர் காவியா. முதலில் இங்கிலாந்து சென்று, பின்னர் அமெரிக்காவில் குடியேறிய பெற்றோர், தம் பெண் ணைப் புகழ் பெற்ற ஆவார்டு பல்கலைக்கழக்த்துக்குப் படிக்க அனுப்பினர்.
நிதி அமைச்சர் சிதம்பரம், சுப்பிர மணிய சுவாமி போன்ற தமிழ்நாட் டவர் பயின்ற பல்கலை ஆவார்டு.
ஆவார்டு பல்க லையில் சேர்க்க வேண்டும் என்பதற் காகப் பல இலட்சம் ரூபாய்களைச் செல வு செய்து காவியா வைத் தயாரித்தனர்.
பள்ளியில் படிக்கையில் காவியா படு சுட்டி. வகுப்புகளில் தலைசிறந் தவரான மாணவி மட்டுமல்ல ஆங் கிலத்தைச் செவ்வனே எழுதும் ஆற் றல் கைவரப் பெற்றவர். இதனால் பள்ளியின் பருவ இதழின் ஆசிரிய ரானார்.
தன் பள்ளிப் பருவத்திலேயே, ஐரிஷ் நாட்டு வரலாற்றை ஆதார மாக்கிச் சில நூறு பக்கங்களில் நாவலாக்கினார்.
ஆவார்டு பல்கலைக்காகத் தயா ராகையில் இவரின் எழுத்துத் திற மையை வியந்த இவரின் ஆசிரியை, தனக்குத் தெரிந்த பதிப்பாசிரியர் ஒருவருக்கு அறிமுகம் செய்தார்.
ஆவார்டில் சேர்ந்தபின், காவியா எழுதுவதை விடவில்லை. இதற்காக நிறைய நாவல்களைப் படித்தார். ஏனைய மாணவர் பல்புனை நிகழாழ ராகக், காவியாவோ பல்கலையின் தேனீர்க் கூட மேசைகளில் வாசித்துக் கொண்டிருந்தார், எழுதிக் கொண்டி ருந்தார்.
அப்படி எழுதிய நாவல், How Opal Metha Got Kissed, Got Wild and Got a Life.
காவியாவுக்கு ஒரு கோடி ரூபாய் உரிமம் கொடுத்து அவரின் நாவலை லிற்றில் பிறவுண் பதிப்பாளர் வாங் கினர். இத்தனைக்கும் அந்த நாவல் அவரின் கன்னி முயற்சி. அவருக்கு வயதோ 19.
அந்த நாவல் முழுவதும் தன் வரலாறு போலத்தாம். அமெரிக்கா வந்த இந்திய மாணவரான ஓபல் மேத்தா, புகழ்பெற்ற பல்கலை ஒன் றில் சேர்வதற்கான அரும் முயற்சி கள், அங்கு நிகழ்ந்த கொஞ்சல்கள், காதல்கள், அமெரிக்கா வாழ் இந்திய சமூகத்தின் உள்முரண்பாடுகள், அதனால் மேத்தா அடைந்த இன்ப துன்பங்கள், யாவையும் கற்பனை யாக, தன்வாழ்வின் நிகழ்வுகளுடன் இணைத்துச் சுவையாகத் தந்துள்ளார் காவியா.
புத்தகம் வெளியானது. பரபரப் பாக விற்கத்தொடங்கியது, இந்தியா வின் பென்குவின் நிறுவனம் 100,000 படிகளுக்கு ஆணை கொடுத்தனர்.
உலகெங்குமுள்ள ஆங்கிலம் தெரிந்த நாடுகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட நாவலாசிரியையானார் காவியா.
காவியாவை வளர்த்தெடுப்பதற் காகவே தன் மருத்துவத் தொழிலைத் தியாகம் செய்த தாயார் மேரி சுந்த ரம், காவியாவுக்கு வீட்டில் பெரு விருந்து வழங்கத் தயாரானார். ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குமல்லவா தாயின் உள்ளம்!
மகிழ்ச்சி நீளவில்லை. ஆவார்டு பல்கலை இதழான, ஆவார்டு கிறிம் சன், காவியாவின் நாவலை விமர் சித்தது.
மேகன் மக்காபெற்றி என்ற சக மாணவி எழுதிய இரு நாவல்களான, Sloppy firsts, Second Helpings ஆகிய இரண்டிலிருந்தும் பல பத்திகளை அப்படியே படியெடுத்துக் காவியா தனது நாவலுள் புதைத்துள்ளார் என எழுதியது.
மேகனின் நாவல்களை வெளி யிட்ட கிறவுண் பதிப்பகத்தார், 40 இடங்களில் காவியா இவ்வாறு எழுத்துத் திருட்டு நிகழ்த்தியதாகக் குற்றம்சாட்டினர்.
கடந்த ஆனி மற்றும் தை மாதப் பதிப்புத் தொழில் உலகம் இதழ் களில் இந்தத் தமிழ்ப் பெண்ணைப் பற்றிப் பாராட்டி எழுதியதை வாசகர் மறந்திருக்க மாட்டார்.
சாதனை புரிகிறாரே தமிழ்ப் பெண் என எழுதினோம், நிலை தலை கீழாகி, தமிழரின் நற்பெயருக் குக் களங்கமாகி நிற்கிறார் காவியா விசுவநாதன்.
வேதனை வீங்கி நிற்க, உலகெல் லாம் பழிச்சொல் கூற, அவரும் கூனிக் குறுகி, தமிழரும் கூனிக் குறுகி நிற்கின்னர்.
படி யெடு த் தே ன், பயன்ப டுத்தினேன், மேகனின் எழுத்ைதைத் திருடினேன், தவறுதான், தவறை மன்னியுங்கள் எனக் காவியா தானாகவே மன்னிப்புக் கேட்டார்.
மேகன் மக்காபெற்றியின் சுவை ஞர் நான். அவரை விரும்பிப் படிப் பேன். பத்திகளைத் திருடிவிட்டேன். விரும்பிச் செய்யவில்லை, தெரிந்து செய்யவில்லை என்கிறார் காவியா.
கடந்த சில வாரங்கள் எனக் கு உளைச்சலா னவை. என் வாச கர் என்னைக் கைவிடவில் லை என்பதே எனக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து நான் எழுதுவேன். காவியா மீது பழிவாங்கும் எண்ணம் சிறிதேனும் இல்லை. நானும் எழுதுவேன், காவி யாவும் தொடர்ந்து எழுதட்டும் என் றார் பெருந்தன்மையுடன் மேகன்.
பதிப்பகத்தார் இருவரும் எழுத் தாளர் இருவரும் அவரின் முகவர் களும் நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாகச் சிக்கலைத் தீர்த்தனர். ஆனாலும் காவியாவின் மானம் போனது போனதுதான்.
வெளியிட்டு விற்பனைக்காக அனுப்பிய காவியாவின் நாவலின் அனைத்துப் படிகளையும் மீளப் பெற லிற்றில் பிறவுண் பதிப்பகம் தன் விற்பனையாளரின் உதவியைக் கோரியுள்ளது.
இந்தியாவில் 10,000 படிகளை விற்பனையாளருக்கு அனுப்பிவிட் டதாகப் பென்குவின் கூறினர். எஞ்சி யதைத் திருப்பி அனுப்பப் போவதா கத் தெ ரிவி த்த னர்.
19 வயதுப் பெண்தானே, தெரியாமல் செய்துவிட்டாள் என விட்டு விடலாமா? ஆவார்டுக்குத் தேர்வான திறமையுள்ளவர், தெரியாமல் செய் தார் என்ற வாதம் எடுபடாது.
பிரித்தானிய நாவலாசிரியர் ஒருவரின் நூலின் சில பகுதிகளை யும் வரிமாற்றித் தன் நாவலுக்குள் இணைத்துள்ளார் என நியுயோர்க் ரைம்ஸ் இதழ் வெளியிட்ட செய்தி மேலும் அதிர்ச்சியைத் தருகிறது.
புகழ்பெற்ற நாவலாசிரியர் சல் மான் ருஷ்டியின் நாவல்களில் இருந் தும் வரிகளைக் கடன் வாங்கியுள்ளார் எனச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
சென்னையில் பிறந்தவரல்லவா? மண்வாசனை இல்லாமலா போகும்? திரைக்கதைகள் திருட்டு, நாவல்க ளில் திருட்டு, ஆய்வுக் கட்டுரைக ளிள் திருட்டு எனப் பழகிப் போன சில தமிழ்நாட்டவருக்குக் காவியாவின் எழுத்துத் திருட்டு பெரிதாகத் தோன்றாது.
ஆனால் மேற்குலகம் காவியா வைக் காறி உமிழ்கிறது. பதிப்பாளர் லிற்றில் பிறவுண் காவியாவின் அடுத்த இரு நாவல்களை வெளியிட இருந்தார். ஓபல் மேத்தா...வின் திருத்திய பதிப்பையும் வெளியிட இருந்தார். ஓபல் மேத்தா... கதையைத் திரைப்படமாக்க ஒருவர் உரிமம் பெற்றிருந்தார்.
யாவும் கலைந்த கனவாகின. காவியாவின் நூல்கள் எவையும் இப் போதைக்கு வெளிவரா. லிற்றில் பிற வுண் பதிப்பகம் உள்ளிட்ட எவரும் வெளியிடமாட்டார்கள்.
காவியா மீதுள்ள எழுத்துத் திருட் டுத் தவறு குறைவு என்றும், அவரது எழுத்துகளை ஏற்றிப் புகழ்பாடி விற்பனை செய்த அலோய் என்ற பதிப்பாசிரிய முகவரே பெருந் தவறு செய்துள்ளார் எனவும் காவியாவுக்கு முட்டுக் கொடுக்க இந்து நாளிதழ் முன்வருவது வேறு காரணங்களுக் காக. காய்தல் உவத்தலற்ற தலையங் கங்களை எழுதும் மரபும் அருகி வருகிறது.

1 Comments:

Blogger arunya said...

தங்களின் அற்புத ஆக்கங்களை
எழுத்தாய் எண்ணமாய்,வரைபாய் தமிழ்
மனங்களில் ஊற்றி,ஊற்றித் தமிழ்
வளர்க்கும்,தமிழ் பற்றிற்கும்,உணர்
விற்கும் என் தலைசாய்ந்த வணக்கங்கள்.வாழ்க உங்கள் பணி.

மா.சித்திவினாயகம்

6:01 PM  

Post a Comment

<< Home